tag:blogger.com,1999:blog-11338931925892621252024-02-06T19:48:48.421-08:00Tamil Computer TipsMurthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.comBlogger182125tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-84919337052144615592010-02-24T21:45:00.000-08:002010-02-24T21:47:08.113-08:00ஓபன் ஆபிஸ் சாப்ட்வேர் டவுண்லோட்!
மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து அப்ளிகேஷன்களும் அடங்கியதாக இயங்குவது ஓப்பன் ஆபீஸ் ஆகும். ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட், பிரசன்டேஷன் மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது. இந்த அப்ளிகேஷன் தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால், பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த ஆபீஸ் தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இது முற்றிலும் இலவசமே. ஆங்கிலத்தில் வரும் கம்ப்யூட்டர் இதழ்களுடன் வழங்கப்படும் சிடிக்களில் இந்த தொகுப்பு தரப்படுகிறது. ஆனால் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி http://download.openoffice.org/other.html

Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-50269137906447982472010-02-24T21:38:00.000-08:002010-02-24T21:39:37.866-08:00விண்டோஸ் எக்ஸ்புளோரர்
விண்டோஸ் டாஸ்க் மானேஜர் (Windows Task Manager) குறித்துக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனைச் சார்ந்து கண்ட்ரோல்+ஆல்ட்+ டெலீட் என்ற சொல் தொடரும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏதேனும் கிராஷ் ஆனாலோ, அல்லது வழக்கத்திற்கு மாறாக இயங்கினாலோ, இதனை இயக்கிப் பார்ப்பதுதான் சிறந்த தீர்வு. இதனைத் திறந்து பார்த்து வேறு ஏதேனும் ஒரு புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரின் திறன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இயங்குகிறதா என்று கவனிக்கவும்.

பெரிய போல்டர்களைப் பார்க்கும் போது அல்லது கரப்ட் ஆன தம்ப் நெயில் படங்கள் அடங்கிய பைல்கள் இருக்கும் போது, எக்ஸ்புளோரர் சற்று பின் வாங்கும். அப்போது உங்கள் பைல் பிரவுசிங் பணி தடைப்படும். முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் செயல்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உங்கள் கம்ப்யூட்டருக்கும் இடையே செயல்படும் ஒரு யூசர் இன்டர்பேஸ். டெஸ்க்டாப், போல்டர், விண்டோஸ் என அனைத்தையும் நீங்கள் காண ஒரு பாலமாக இயங்குகிறது. எக்ஸ்புளோரர் மெதுவாக இயங்கும்; ஆனால் கிராஷ் ஆகாது. எனவே தான் விண்டோஸ் தானாக ரீஸ்டார்ட் ஆகாமல், உங்களிடம் அந்த வேலையை எதிர்பார்க்கிறது.

எக்ஸ்புளோரரை நிறுத்த விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் செல்லவும். இதில் Processes என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். இது பார்ப்பதற்குச் சற்று குழப்பமாக இருந்தாலும், இதில் கிடைக்கும் தகவல்கள் எளிமையானவையே. இங்குதான் உங்கள் கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கும் புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும். சில புரோகிராம்களின் பெயர்கள் வித்தியாசமாக இருக்கும். இதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் பார்க்க வேண்டியது Explorer.exe தான். இதனைக் கண்டறிந்த பின், இதன் மீது ஒரு முறை லெப்ட் கிளிக் செய்திடவும். இது ஹைலைட் ஆகும். பின் ரைட் கிளிக் செய்தால் ப்ராசஸ் மெனு கிடைக்கும். அடுத்த ஸ்டெப் எடுக்கும் முன், வேறு விண்டோக்கள் திறக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் Explorer.exe என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இது எக்ஸ்புளோரர் இயங்குவதை நிறுத்தும். இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள ஐகான்கள் அனைத்தும் மறைந்து போகும். கவலைப்பட வேண்டாம். அதைத்தான் எக்ஸ்புளோரர் செய்கிறது. இனி விண்டோஸ் இயக்கத்தினை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும். டாஸ்க் மேனேஜரில் ஒரு பைல் மெனு கிடைக்கும். டாஸ்க் மேனேஜரில் மேலாக உள்ள File என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். அடுத்து New Task என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது Create New Task என்று ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு கிடைக்கும் பாக்ஸ், ரன் பாக்ஸ் போல செயல்படும். பாக்ஸில் explorer என்று டைப் செய்து ஓகே கிளிக் செய்திடவும். இனி உங்கள் டெக்ஸ்டாப், அதன் ஐகான்களுடன் காட்டப்படும். ஆஹா! இயங்கி, முடங்கிய ஒரு புரோகிராமினை நிறுத்தி மீண்டும் இயக்கிவிட்டீர்கள். பெரிய அளவில் பைல் பிரவுசிங் செய்து, தளர்ச்சி அடையும் போதெல்லாம், டாஸ்க் மேனேஜர் மூலம் இந்த புத்துணர்ச்சி கிடைக்கும் வேலையை மேற்கொள்ளலாம்.

Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-75069135890398335652010-02-24T21:33:00.001-08:002010-02-24T21:34:46.153-08:00கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்
இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.
Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-45676707479900316102010-02-24T21:21:00.000-08:002010-02-24T21:27:33.965-08:00குரோம் எக்ஸ்டென்ஷன் வசதிகள்பயர்பாக்ஸ் பிரவுசருக்கென ஆயிரக்கணக்கில் ஆட் ஆன் புரோகிராம்கள் இருப்பது போல, குரோம் பிரவுசருக்கும் பல கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றை எக்ஸ்டென்ஷன் புரோகிராம்கள் என அழைக்கின்றனர். குரோம் பதிப்பு 4 அண்மையில் வெளியான போது, இது போன்ற புதிய வசதிகள் 1,500 இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த புரோகிராம்கள், நாம் குரோம் பிரவுசர் வழியாக இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில், கூடுதல் வேலைகளுக்கான வசதிகளை எளிதாகவும், எளிமையாகவும் தருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

பாப் அப் விண்டோவில் விக்கிபீடியா: ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து விக்கிபீடியா தளம் சென்று தேடுபவரா நீங்கள்? நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரில், இன்டர்நெட் பிரவுசிங் செய்திடுகையில், விக்கிபீடியா பார்ப்பவராக இருந்தால், இனி புதிய டேப் அமைத்து, தளம் திறந்து பார்க்க வேண்டியதில்லை. பார்க்கின்ற தள விண்டோவிலேயே, ஒரு பாப் அப் விண்டோவில் விக்கிபீடியா தளத்தினைக் காணும் வசதி கிடைத்துள்ளது. விக்கிபீடியா கம்பேனியன் (Wikipedia Companion) என்னும் இந்த புதிய வசதி இந்த பாப் அப் விண்டோவைத் தருகிறது. விக்கிபீடியா கம்பேனியன் மூலம், குரோம் பிரவுசர் விண்டோவின் இடது பக்கத்தில் ஒரு விக்கிபீடியா பட்டன் ஒன்றை உருவாக்கலாம். மேலும் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் சார்ந்த விக்கிபீடியா தளத்தினைப் பார்ப்பவராக இருந்தால், அதற்கான செட்டிங்ஸையும் மேற்கொண்டு, அதே பாப் அப் விண்டோவில் காணலாம். ஒரே கிளிக் மூலம் இதனை மேற்கொள்ளலாம்.

1. முதலில் கூகுள் குரோம் பிரவுசர் மூலம் கீழ்க்காணும் முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். https://chrome.google.com /extensions/detail/dhgpkiiipkgmckicafkhcihkcldbde. இந்த தளம் விக்கிபீடியா கம்பேனியன் என்னும் ஆட் ஆன் எக்ஸ்டென்ஷன் புரோகிராமினைக் கொண்டிருக்கும். அதில் உள்ள இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்தால், Confirm Installation என மீண்டும் ஒரு இன்ஸ்டால் பட்டன் தரப்படும். இதில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகும். இதன்பின் விக்கிபீடியா ஐகானைக் கிளிக் செய்து பிரவுசரைத் திறக்கவும். இதில் ஆப்ஷன்ஸ் என்னும் லிங்க்கினைக் கிளிக் செய்தால், எந்த மொழி விக்கிபீடியா முதன்மையானதாகவும் (Primary) எந்த மொழியில் உள்ள விக்கிபீடியா இரண்டாவது நிலையிலும் (Secondary) தேவைப்படும் என்பதனை செட் செய்திடலாம். விக்கிபீடியா தளத்தினை தனி டேப் மூலம் திறக்க விரும்பினாலும், அதன்படி செட் செய்திடலாம்.

2. பிரவுசரில் நோட்பேட் : இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில், சிறிய குறிப்புகளை எழுத எண்ணுகிறீர்கள். இதற்கென நோட்பேட், வேர்ட்பேட் அல்லது வேறு ஒரு வேர்ட் ப்ராசசரைத் திறந்து, குறிப்புகளை அமைப்பது என்றால், அது சுற்றி வளைத்து வேலை பார்ப்பதாக இருக்கும். இருப்பினும் வேறு வழியில்லை. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக, குரோம் பிரவுசருக்குள்ளாகவே நோட்பேட் இயங்கும் வகையில் ஒரு எக்ஸ்டென்ஷன் புரோகிராம் கிடைக்கிற. குரோம்பேட் (Chrome Pad) என்பது இதன் பெயர். https://chrome.google.com/e xtensions/detail/kodgendbhboaendecabighpnngpodeij என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த புரோகிராமினைப் பெறலாம். இங்கு சென்று அங்குள்ள Install பட்டனில் கிளிக் செய்தால், Confirm Installation என மீண்டும் ஒரு Install பட்டன் தரப்படும். இதில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகும். இதன்பின் சிறிய பேட் உங்கள் குறிப்புகளுக்கென கிடைக்கும்.

3.யு–டியூப் சர்ச்: கூகுள் குரோம் பிரவுசரில் ஏதேனும் ஒரு தளத்தினைக் காண்கையில், அந்த பொருள் குறித்த வீடியோ ஏதேனும் யு–டியூப் தளத்தில் உள்ளதா என்று அறிய விரும்பலாம். அப்போது புதிய டேப் ஒன்றைத் திறந்து, அதில் யு–டியூப் தளம் சென்று தேட வேண்டிய திருக்கும். அல்லது சர்ச் பாக்ஸில் உங்கள் வீடியோ குறித்த சொல் கொடுத்துத் தேடிப் பின் மீண்டும் அந்த தளம் செல்ல வேண்டியதிருக்கும். இந்த வேலைப் பளுவினைக் குறைக்கும் வகையில் "Fast YouTube Search" என்னும் எக்ஸ்டென்ஷன் புரோகிராம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம் யு–டியூப் சர்ச் பட்டன் ஒன்றை பிரவுசரில் ஒட்ட வைத்துக் கொள்ளலாம். இந்த எக்ஸ்டென்ஷன் புரோகிராமினைப் பெற https://chrome.google .com/extensions/detail/ggkljdkflooidjlkahdnfgodflkelkai என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இங்கு சென்று அங்குள்ள Install பட்டனில் கிளிக் செய்தால், Confirm Installation என மீண்டும் ஒரு Install பட்டன் தரப்படும். இதில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகும். பின் அட்ரஸ் பார் வலது பக்கத்தில் "YouTube" என்று ஒரு பட்டன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால்,சர்ச் பாக்ஸ் ஒன்று தரப்படும். இதில் உங்கள் தேடுதல் சொற்களை அமைத்துத் தேடவும். அதன்பின் மேக்னிபையிங் கிளாஸ் பட்டனில் கிளிக் செய்து சம்பந்தப்பட்ட வீடியோக்களைக் காணலாம். உங்கள் தேடுதல் சொற்களை அமைக்கும்போதே, அதற்கான சில கூடுதல் குறிப்புகளும் காட்டப்படும்.

4. கால்குலேட்டர்: கூகுள் தேடல் இஞ்சினில் கால்குலேட்டர் இணைந்தே வருகிறது. இதில் சில அடிப்படை கணக்குகள், கரன்சி மாற்றும் கணக்குகள், அளவை அலகு மாற்றங்கள் ஆகியவற்றைக் கணக் கிடலாம். இருப்பினும், ஏதேனும் ஒரு இன்டர்நெட் வெப்சைட்டில் இருக்கையில், அதனை விட்டு இன்னொரு டேப்பில் கூகுள் தேடல் தளம் சென்று, கால்குலேட்டரை இயக்குவது சிரமமாகும். இதனைத் தீர்க்க குரோமி கால்குலேட்டர் ("Chromey Calculator") என்னும் எக்ஸ்டென்ஷன் புரோகிராம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்குலேட்டர் பட்டன் ஒன்றை, நேரடியாக குரோம் பிரவுசரிலேயே அமைக்கலாம்.இதில் கிளிக் செய்வதன் மூலம் கூகுளின் கால்குலேட்டரைப் பெற்று இயக்கலாம். இந்த கால்குலேட்டரில் சில மதிப்புகளை (Values) குறியீடுகளுக்கு பொருத்தி கணக்கிடலாம்.
இந்த எக்ஸ்டென்ஷனைப் பெற்று இயக்க https://chrome.google.com/ extensions/detail/acgimceffoceigocablmjdpebeodphgc என்னும் முகவரியில் உள்ள தளம் செல்லவும். மேலே கூறப்பட்டுள்ளபடியே இங்கும் இன்ஸ்டால் செய்திடவும். "Chromey Calculator" இன்ஸ்டால் செய்யப்படும். அட்ரஸ் பாரில் இதற்கான பட்டன் கிடைக்கும். இதனை அழுத்தி கால்குலேட்டரைப் பெற்று இயக்கலாம்.

5. டேப்பில் ரைட் கிளிக் மெனு: இது எக்ஸ்டென்ஷன் புரோகிராம் குறித்தது அல்ல. டேப்கள் செயல்பாடு குறித்தது. கூகுள் குரோம் பிரவுசரில் உள்ள டேப்களில் ரைட் கிளிக் செய்து, கூடுதல் டேப் செயல்பாடுகளுக்கான வசதிகளைப் பெறலாம். இதில் உள்ள டேப்பில் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும். அதில் கீழ்க்காணும் வசதிகள் தரப்படும். அவை:
Duplicate: அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் தளத் தகவல்கள் இன்னும் ஒரு கூகுள் குரோம் விண்டோவில் நகலாகக் கிடைக்கும்.
Close other Tabs: அப்போதைய டேப் தவிர, மீதம் உள்ள டேப்களில் உள்ள தளங்கள் அனைத்தும் மூடப்படும்.
Close Tabs to the Right: அப்போது தேர்ந்தெடுத்து கிளிக் செய்யப்படும் டேப்பிற்கு வலது பக்கம் உள்ள டேப்கள் அனைத்தும் மூடப்படும்.
Reload: அந்த டேப்பில் உள்ள தளத்தினை மீண்டும் லோட் செய்திடும். இதனை Ctrl + R அழுத்தியும் பெறலாம்.
Close Tab: அந்த டேப்பில் உள்ள தளத்தினை மூடும்.

விண்டோஸ்: சிங்கிள் மவுஸ் கிளிக்
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் மவுஸை சிங்கிள் கிளிக் மவுஸாக மாற்றுவது எப்படி என்று வெகு காலம் முன் டிப்ஸாக எழுதி இருந்தேன். அண்மையில் வாசகர் ஒருவர் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7ல் இதனை எப்படி மேற்கொள்வது என்று கேட்டு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தார். அப்புறம் தான் இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று நான் தேடிப் பார்த்தேன். கிடைத்த தகவல்கள் இதோ! விஸ்டாவில் Start>Control Panel செல்லவும். இதில் கிளாசிக் வியூ இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை என்றால் மாற்றவும். அதன் பின் "Folder Options" என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 7ல் Start கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் "Folder Options" என டைப் செய்து என்டர் அழுத்தவும். "Singleclick to open an item" என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்தவும். பின் Apply என்பதில் கிளிக் செய்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-499665171958368712010-02-24T21:11:00.000-08:002010-02-24T21:19:58.343-08:00கூகுளின் புதிய சோசியல்தளம் - Buzzஐந்தாண்டுகளுக்கு முன் ஜிமெயில் ஜஸ்ட் ஒரு இமெயிலாக மட்டுமே இருந்தது. அதன் பின் சேட் என்னும் அரட்டை மனை, வீடியோ சேட் மனை ஆகியன அதற்குள்ளேயே தரப்பட்டன. ஒரே பிரவுசர் விண்டோவில் இவை அனைத்தும் சாத்தியமே என்று கூகுள் காட்ட, மக்கள் இதில் மொய்த்தனர். ஏனென்றால் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றனர். தாங்கள் படித்த, கேள்விப்பட்ட தகவல்களை, எடுத்த, அமைத்த போட்டோக்களை மற்றவருக்கு அனுப்பி அவர்கள் கருத்தை, பாராட்டை, திட்டு தலைப் பெற விரும்புகின்றனர். இவர்களுக்கு இணையம் இடம் தரும் வகையில் வளைந்து கொடுக்கிறது.அந்த வகையில் கூகுள் சென்ற வாரம் Buzz என்னும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. இதுவும் ஜிமெயிலுக்குள்ளாகவே அமைக்கப்பட்டுள்ளது. Twitter, FaceBook, Friendfeed என உள்ள சோஷியல் தளங்களில் உள்ள வசதிகளைத் தன் மெயில் தளத்திலேயே கொண்டு வந்துள்ளது கூகுள். இதனை உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால், http://www.google.com/buzz முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். அங்கு Try Buzz in GMail என்னும் பட்டன் காட்டப்படும். அதில் கிளிக்கிடுங்கள். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் காட்டப்படும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் இணைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். சில நாட்களில் இந்த வசதி உங்கள் மெயில் இன்பாக்ஸ் பெட்டியில் கிடைக்கும். இதில் "Buzz" என ஒரு பட்டன் காட்டப்படும். இதில் அழுத்துவதன் மூலம் பயன்பாடு கிடைக்கும். இதன் மூலம் இணைய தளங்களுக்குச் செல்லலாம். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை உலகிற்குத் தெரிவிக்கலாம்; அல்லது உங்கள் நண்பர்கள் குழுவிற்கு மட்டும் என வரையறை செய்திடலாம். இதன் மூலம் உங்கள் நண்பர்கள் நீங்கள் எந்த தளங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைத் தருகிறீர்கள் என்று அறிந்து கொள்வார்கள். அதே போல மற்றவர்கள் "Buzz" மூலம் தரும் தகவல்களையும் நீங்கள் அறியலாம். குறிப்பிட்ட சிலரின் தகவல்களை மட்டும் கூடத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்; அதற்கு உங்கள் பதில் கருத்துக்களைப் பதியலாம். இனம், மொழி, சாதி, நாடு என்ற வேறுபாடற்ற சமுதாயம் அமைய இத்தகைய முயற்சிகள் வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து இதனை வரவேற்போம்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-82196608776787665602010-02-24T21:04:00.000-08:002010-02-24T21:18:52.195-08:00நாள் குறித்து இமெயில் அனுப்பும் வசதி!பல வேளைகளில், நடக்க விருக்கும் நிகழ்ச்சி தொடர்பாக சில நாட்கள் கழித்து இமெயில்களை அனுப்புவோம் என்று திட்டமிடுவோம். குறிப்பாக பிறந்த நாள் வாழ்த்துகள், திருமண நாள் வாழ்த்துக் கடிதங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட நாட்களில் அனுப்பினால் தான், பெறுபவர் மகிழ்ச்சி அடைவார். குறிப்பிட்ட நாட்களில் நம் வேலைப் பளுவின் காரணமாக அல்லது மறதியாய் அனுப்பத் தவறிவிடுவோம். முன் கூட்டியே இமெயில்களைத் தயார் செய்து ட்ராப்ட்டாக வைத்திடலாம். ஆனால் குறிப்பிட்ட நாளில் அவற்றை நினைவில் வைத்து அனுப்ப வேண்டுமே. அதைத்தான் நம்மில் பலர் மறந்துவிடுகிறோம். இதற்கு என்னதான் வழி? ஒன்றா, பல வழிகள் உள்ளன. இது போல எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய மெயில்கள், குறிப்பிட்ட நாளில் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் அனுப்ப வேண்டிய மெயில்கள் என முன்கூட்டியே தயாரித்து வைத்து அனுப்ப பல இணைய தளங்கள் நமக்கு வசதியை அளிக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

1. LetterMeLater: எதிர்கால இமெயில் அனுப்பும் வசதி களைத் தருவதில் இந்த வசதிதான் சிறப்பாகச் செயல் படுவதுடன், கூடுதல் வசதிகளையும் அளிக்கிறது. http://www.lettermelater.com/ என்ற முகவரியுள்ள தளத்தில் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கொடுக்க வேண்டும். உங்களைப் பதிந்து கொள்ள வேண்டும். பின் மின்னஞ்சல் கடிதத்தினைத் தயார் செய்து, அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் நாளினையும் பதிந்து வைக்க வேண்டும். உடனேயே உங்களின் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் பதிந்து வைத்த எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய இமெயில் குறித்த செய்தி அனுப்பப்படும். பின் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் நீங்கள் பதிந்த இமெயில் அனுப்பப்படும். பதிந்த நாளுக்குப் பின், தயாரித்த இமெயில் செய்தியில் ஏதேனும் எடிட் செய்திட வேண்டுமானால் இந்த தளம் சென்று, பாஸ்வேர்ட் கொடுத்து, மெயிலைத் திறந்து சேர்க்கலாம். பைல்களை அட்டாச் செய்திடலாம்.

2. Eternity Message: இந்த வசதியும் மேலே குறிப்பிட்ட வசதியைப் போலவே செயல்படுகிறது. இந்த தளத்தின் மூலம் எச்.டி.எம்.எல். மெசேஜ் தயார் செய்திடும் வசதி கிடைக்கிறது. இதில் ட்ராப்ட் வடிவில் மெயில்களைத் தயாரித்து ஜஸ்ட் சேவ் செய்து வைத்திடலாம். அவற்றை அனுப்ப எண்ணினால், பின் அனுப்ப வேண்டிய தேதி குறிப்பிட்டு மார்க் செய்து வைக்கலாம். இந்த வசதியைப் பெற http://eternity message.com என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.

3. l8r: எதிர்கால இமெயில் சேவை இந்த பெயரில் கிடைக்கிறது. இந்த தளத்தைப் பொறுத்த வரை நீங்கள் மார்க் செய்து வைத்த மின் அஞ்சல்கள் குறித்து, அவ்வப்போது உங்கள் மின் அஞ்சலுக்கு நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப்படும். இது போல நீங்கள் சொல்லியபடி மெயில் குறிப்பிட்ட நாளில் அனுப்பப்பட இருக்கிறது என்று தகவல் அனுப்பப்படும். இதன் மூலம் நாம் குறித்துவைத்தவை நமக்கு நினைவூட்டப்படுகின்றன. இந்த வசதி கிடைக்க http://www.l8r.nu/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

4. FutureMail: எதிர்காலத்திற்கென மார்க் செய்யப்படும் இமெயில்களை இந்த வசதியின் மூலமும் அனுப்பலாம். அவ்வாறு குறிக்கப்பட்ட மெயில்களை ஆர்.எஸ்.எஸ். பீட்ஸ் ஆகவும் காணலாம். இந்த வசதி http://futuremail.bensinclair.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது.

5. Email Future: பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அனுப்ப வேண்டிய இமெயில் கடிதங்களை எங்காவது பதிந்து வைத்து அனுப்புமாறு செய்திடலாமா? அந்த வசதியை Email Future தருகிறது. இந்த வசதியைப் பெற நீங்கள் அணுக வேண்டிய தள முகவரி –http://emailfuture.com

6. Future Me: எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய இமெயில்களைக் குறிப்பிட்டு சேவ் செய்திட முடியும் என்றால், நமக்குத் தேவையான நினைவூட்டும் கடிதங்களையும் எழுதிப் பதிந்து வைக்கலாமே. அவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அனுப்புமாறு செய்திடலாமே. அப்படிப்பட்ட ஒரு மெயில் வசதிதான் Future Me ஆகும். இதனைப் பெற http://www.futureme.org/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

7. Email Capsule: இதுவும் எதிர்காலத்தில் இமெயில் அனுப்பும் வசதியாகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளமுகவரி: http://www.bored.com/ emailcapsules/

8. Mail Freezer : வேடிக்கையான எதிர்கால இமெயில் வசதி இது. இதன் பெயர் கூறுவது போல, இந்த தளத்தில் இமெயில்களை வெகு காலத்திற்கு ப்ரீஸ் செய்து வைக்கலாம். ஒன்று, இரண்டல்ல, நூறு ஆண்டுகளுக்குக் கூட இதில் இமெயில்களைச் சேர்த்து வைக்கலாம். ஆனால் குறிப்பிட்ட ஆண்டு, நாள் குறித்து அனுப்பும் வசதி இதில் இல்லை. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி : http://www.mailfreezr.com/

9. WhenSend: மிக எளிமையான வசதி. மெயிலை எழுதி என்று அனுப்ப என்று குறித்துவிட்டு வந்துவிடலாம். மெயில் சரியாக அனுப்பப்பட்டுவிடும். செல்ல வேண்டிய தள முகவரி: http://www .whensend.com

10. YouScribbleYou: குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு இமெயில் செய்தியினைத் தொடர்ந்து அனுப்ப வேண்டுமா? இந்த வசதி உதவுகிறது. ஒரே இமெயிலை இரண்டு முகவரிகளுக்கு அனுப்பும் வசதியையும் தருகிறது. இதனைப் பெறச் செல்ல வேண்டிய இணைய முகவரி :http://www.youscribbleyou.comMurthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-55324352753542966452008-08-28T05:59:00.001-07:002008-08-28T05:59:48.340-07:00நிகழ்ச்சிக்கேற்ற மேற்கோள் வேண்டுமா....ஒரு மனிதனை மூன்று விஷயங்கள் காட்டிக் கொடுக்கும். அவனுடைய கண்கள், நண்பர்கள் மற்றும் அவன் மேற்கோள் காட்டும் சங்கதிகள். நம் கருத்துக்கு வலு சேர்க்க, ஸ்டைலாகப் பேச, விஷயங்களைப் புதிய முறையில் சொல்ல முன்னாள் அறிஞர்கள் கூறிய கூற்றுக்களை நாம் கூறுகிறோம். ஆங்கிலத்தில் கொட்டேஷன் என்று கூறும் இவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் நம் பேச்சுக்கு மதிப்பிருக்கும்.

நாம் பேசும் பொருள் பற்றி அறிஞர்கள் கூறியது என்ன என்று எப்படி அறிந்து கொள்வது? இதற்கென ஒரு தளம்    http://www.quotesdaddy.com/ என்ற முகவரியில் உள்ளது. ஒவ்வொரு பொருள் குறித்தும் இதில் மேற்கோள்களைப் பெறலாம். அல்லது ஒரு அறிஞர் சொன்னது என்ன என்று தேடித் தரச் சொன்னால் இந்த தளம் அவற்றைத் தருகிறது. நட்பு பற்றி, வாழ்க்கை பற்றி என அன்றாடம் சில கொட்டேஷன்கள் கிடைக்கின்றன. நாம் தேடும் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான கொட்டேஷன்களும் தரப்படுகின்றன.

பிறந்த நாள், குழந்தை பிறந்ததை வாழ்த்த, மரண ஊர்வலம், பணி ஓய்வு பெறுதல், திருமணம், ஆண்டு விழா என எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்ற மேற்கோள்களை இதில் பெற்று பயன்படுத்தலம். இந்த தளத்தில் பதிந்து கொண்டால் உங்களுக்கு மேற்கோள்கள் இலவசமாக அனுப்பப்படும். உங்களின் பேச்சினையும் மற்றவர்கள் ஆர்வத்துடன் கேட்க சில கொட்டேஷன்களைப் பயன்படுத்துங்கள். அந்த அளவில் இந்த தளம் ஒரு பயனுள்ள தளமாகும்.

Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-28923557091315376812008-08-28T05:57:00.000-07:002008-08-28T05:59:03.307-07:00அது என்ன ஹெர்ட்ஸ்கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பற்றிப் பேசுகையில் நாம் அடிக்கடி மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ் என்று பேசுகிறோம், படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது என்று பார்ப்போமா!

ஹெர்ட்ஸ் என்பதனை சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். இது ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்) கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது. சி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 Hz என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.

மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர் உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.

முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய பெண்டியம் 4 கம்ப்யூட்டர் பிராசசர் 3.2 கிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளன. (ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ்.) எனவே கணக்குப் போட்டு இந்த அதிவேக துடிப்புகளை உணர்ந்து கொள்க. கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz) கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். தற்போது வரும் கம்ப்யூட்டர் பிராசசர் வேகம் இந்த அளவிலேயே சொல்லப்படுகிறது.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-50363290805940171662008-08-28T05:55:00.002-07:002008-08-28T05:57:51.001-07:00வேர்ட்அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்

நம் வாசகர்களிடமிருந்து வரும் கேள்விகளில் பெரும்பாலும் வேர்ட் தொகுப்பு குறித்த கேள்விகளே அதிகம். பல கேள்விகள் கட்டுரையில் தர வேண்டிய அளவிற்கு தகவல்களைப் பதிலாகத் தர வேண்டியதிருக்கும். அவ்வப்போது வெளியாகும் கட்டுரைகள் இது போன்ற கேள்விகளின் அடிப்படையிலேயே தரப்படுகின்றன. சில கேள்விகள் தனிப்பட்ட முறையில் ஒரு சில குறிப்புகளில் பதில் தரப்படும் வகையில் இருக்கும். அவற்றின் தொகுப்பு இங்கு பதிலுடன் வெளியிடப்படுகின்றன.

வேர்ட் தொகுப்பு இயங்கும் விதம் சில நேரங்களில் எனக்குப் பிடிக்க வில்லை. தேவையற்ற வகையில் குறுக்கீடுகளாக இவை எனக்குத் தோன்றுகின்றன. பொதுவாக இந்த குறுக்கீடுகளை நிறுத்திட என்ன செய்யலாம்?

பலவகையான செட்டிங்குகள் Tools மெனுவில் தான் உள்ளன. Options கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் பல டேப்கள் தரப்பட்டு ஒவ்வொன்றும் ஒருவகையான செயல்பாட்டிற்கென இருக்கும். நீங்கள் மாற்ற விரும்பும் செயல்பாடு எந்த டேபில் இருக்கிறது என்பதனைத் தேடி அறிந்து அதனை மாற்றலாம். பெரும்பாலும் அந்த செயல்பாடுகள் குறித்த சொல் தொடரும் அதன் எதிரே சிறு கட்டமும் இருக்கும். கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். எடுத்துவிட்டால் அந்த செயல் நடைபெறாது. Customize என்னும் கட்டளை வேர்டின் மெனுக்களையும் டூல் பார்களையும் மாற்றி அமைக்க உதவும். View மெனு வேர்ட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடும்.

தேவையற்ற வகையில் புல்லட் பாய்ண்ட் அல்லது எண்களைத் தரும் வேர்டை எப்படி அது இல்லாதவாறு நிறுத்தலாம்?

வேர்ட் தரும் முக்கிய வசதி நாம் டைப் செய்திடுகையில் அது தரும் உதவிதான். பிழையான சொற்களைத் திருத்த வழி தருகிறது. நாம் டைப் செய்கையில் தானாகவே பார்மட் செய்கிறது. 1,2,3 என அடிக்கத் தொடங்கினால் புல்லட் பாய்ண்ட்டினைக் கொடுத்து பார்மட் செய்கிறது. இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நிறுத்திவிடலாம். Tools மெனு சென்று Auto Correct டேப் கிளிக் செய்து நமக்குத் தேவயற்ற சொல் திருத்தத்தினை நிறுத்தலாம். அல்லது எந்த திருத்தங்கள் நமக்கு தேவையில்லை என எண்ணுகிறோமோ அவற்றை நீக்கலாம். பின் மீண்டும் தேவை என முடிவு செய்கையில் டிக் அடையாளம் ஏற்படுத்தி செயல்படுத்தலாம். நான் அதிகம் தமிழ் டெக்ஸ்ட் டைப் செய்கிறேன். எப்போதும் சொற்களின் கீழே சிகப்பு கோடுகள் போடப்படுகின்றன. தமிழ் என்றால் ஏன் இவ்வாறு கோடுகள் வருகின்றன? இவற்றை நிறுத்துவது எப்படி?

வேர்ட் தமிழ்ச் சொற்களை ஆங்கிலம் என்று உணர்ந்து உங்கள் கீ அழுத்தத்திற்கு நேரான எழுத்துக்களையும் சொற்களையும் எடுத்துக் கொண்டு அவை தவறான ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணம் உடையவை என்ற அடிப்படையில் சிகப்பு கோட்டினைத் தருகிறது. இந்த செயல்பாட்டினை நீக்க எளிதான வழி எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை காணும் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுதான். Check spelling as you type மற்றும் Check grammar as you type என இரு வசதிகளை Edit டேபின் கீழே பார்க்கலாம். இவற்றின் முன் உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிட்டால் சிகப்பு கோடுகள் வராது.

அடிக்கடி ஆபீஸ் அசிஸ் டன்ட் என்ற பெயரில் ஒரு சிறிய உருவம் திரையில் வந்து நம் கவனத்தை ஈர்க்கிறது. சில வேளைகளில் அந்த இடத்தில் டைப் செய்கையில் எழுத் துக்களை மறைக்கிறது. இதனை எப்படி இல்லாமல் செய்வது?

Office Assistant மேலேயே ரைட் கிளிக் செய்திடுங்கள். அதன் பின் Options என்பதில் கிளிக் செய்திடுங்கள். Use Office Assistant என்ற வரியின் முன் உள்ள சிறிய பெட்டியைல் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள்.

ஸ்கிரீனின் வலது பக்கம் ஒரு பகுதி வருகிறது. இதனை டாஸ்க் பேன் என்கின்றனர். எனக்கு இது தேவையில்லை. எப்படி நிறுத்துவது?

நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களின் வலது பக்கம் இந்த டாஸ்க் பேன்கள் கிடைக்கின்றன. இதற்கான கட்டளைகளின் அடிப்படையில் அதில் ஆப்ஷன்ஸ் மாறும். இந்த டாஸ்க் பேன் தேவையில்லை என்றால் அதில் உள்ள பெருக்கல் அடையாளத்தில் கிளிக் செய்தால் மறைந்துவிடும். வியூ மெனுவில் கிடைக்கும் ஆப்ஷன்கள் மூலமாக இதனை மூடிவிடலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட டாகுமெண்ட் பைல்களைத் திறக்கையில் முந்தைய டாகுமெண்ட்களின் விண்டோ எங்கு செல்கிறது? எப்படி அனைத்தையும் திறந்து பார்ப்பது?

ஒவ்வொரு புதிய டாகுமெண்ட்டும் தனியான விண்டோவில் திறக்கப்படும். அப்போது ஏற்கனவே உள்ள பைலின் விண்டோ பின்னால் இருக்கும். விண்டோ மெனு சென்றால் பைல்களின் பெயர்களைப் பார்த்து கிளிக் செய்து பெறலாம். இவை டாஸ்க் பாரிலும் காட்டப்படும். அங்கிருந்தும் கிளிக் செய்து பெறலாம். அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண் டும் என்றால் Window மெனு சென்று Arrange All என்பதைக் கிளிக் செய்திடுங்கள். மேலும் மாற்றி மாற்றி டாகுமெண்ட்களைக் காண Alt +Tab அழுத்துங்கள்.

டூல்பாரில் பல பட்டன்கள் உள்ளன? எது எதற்கு என்று அறிய அதன் பெயரை எப்படித் தெரிந்து கொள்வது?

மவுஸைக் கொண்டு போய் அந்த டூல்பாரின் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் காட்டப்படும்.

ரூலரைப் பெற என்ன செய்திட வேண்டும்?

View மெனு சென்று Ruler என்பதில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இதில் உங்கள் வியூ பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால் தான் மேலே உள்ள ரூலர் தெரியும்.

டூல் பாரில் பட்டன்களைச் சேர்க்கவும் நீக்கவும் என்ன செய்திட வேண்டும்?

1.View மெனுவில் இருந்து Toolbars தேர்ந்தெடுக்கவும்.

2. Customize என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Commands என்னும் டேபினைக் கிளிக் செய்திடவும்.
4. Categories என்னும் பிரிவில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அங்கு காட்டப்படும் Commands பிரிவில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
6. இந்தக் கட்டளையை Toolbar ஒன்றுக்கு இழுத்து வரவும். “I” பீம் ஒன்று காட்டப்படும். இது புதிய தேர்ந்தெடுத்ததனை இன்ஸ்டால் செய்திட உங்களுக்கு வழி காட்டும். புதிய பட்டனில் டெக்ஸ்ட் லேபில் மட்டுமே இருக்கும்.
7. புதிய Toolbar பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும்.
8. Default Style என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். (இப்போது பட்டன் சிறிய சதுரமாக மாறும்)
9. மீண்டும் புதிய Toolbar பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும்.
10. Change பட்டன் இமேஜைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் ஒரு பட்டன் இமேஜைத் தேர்ந்தெடுக்கவும்.
11. பின் Customize டயலாக் பாக்ஸை மூடவும்.

பட்டனை நீக்க:

View மெனுவில் இருந்து Toolbars தேர்ந்தெடுக்கவும். Customize என்பதை அடுத்து தேர்ந் தெடுக்கவும். எந்த பட்டனை நீக்க வேண்டுமோ அதனை டூல் பாரிலிருந்து இழுத்துவிடவும்.

நார்மல் டெம்ப்ளேட் என்பது என்ன?

வேர்ட் தொகுப்பைத் தொடங்கும் போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா? இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் அன அழைக்கப்படுகிறது. இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங்களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே புதிய நார்மல் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொள்ளும். இந்த நார்மல் டெம்ப்ளேட் பைல் நீங்கள் வேர்ட் தொகுப்பை இன்ஸ்டால் செய்த டைரக்டரியில் இருக்கும். இதனை நீங்கள் தெரியாமல் அழித்துவிட்டால் வேர்ட் தொகுப்பு புதிய நார்மல் டெம்ப்ளேட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-74145430973789097662008-08-28T05:55:00.001-07:002008-08-28T05:55:37.531-07:00சிஸ்டம் டிப்ஸ்திறந்திருக்கும் அனைத்து விண்டோக் களையும் மினிமைஸ் செய்திட மவுஸ் மூலம் ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திடலாம். மொத்தமாக மினிமைஸ் செய்திட விண்டோஸ் கீ + எம் (Windows key+M) கீகளை அழுத்தவும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் மினிமைஸ் செய்யப்படும். இவை அனைத்தையும் மீண்டும் பெற விண்டோஸ் கீ + ஷிப்ட் + எம் கீகளை (Windows key+Shift+M) அழுத்தவும். இந்த புரோகிராம் களை ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திட Alt+Space+N கீகளை அழுத்தவும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக மீண்டும் மேக்ஸிமைஸ் செய்திட Alt+Space+X கீகளை அழுத்தவும்.

ஸ்டார்ட் மெனுவில் ஷார்ட்கட்

ஏதேனும் புரோகிராம் அல்லது பைலுக்கான ஷார்ட் கட் ஒன்றை ஸ்டார்ட் மெனுவில் இடம் பெறுமாறு செய்திடலாம். இதற்கு டெஸ்க் டாப்பில் உள்ள அந்த ஷார்ட் கட் ஐகானை மவுஸால் இழுத்து வந்து ஸ்டார்ட் பட்டனில் விட்டுவிடவும். இனி ஸ்டார் பட்டனில் கிளிக் செய்து பார்த்து அந்த ஷார்ட் கட் மெனுவில் உள்ளதை உறுதி செய்திடவும்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-31934879201084657072008-08-28T05:52:00.000-07:002008-08-28T05:54:57.214-07:00பயர்பாக்ஸ் வீல் ட்ரிக்ஸ்நெட் பிட்ஸ்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்குப் பதிலாக பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பைப் பயன்படுத்து கிறீர்களா? அப்படியானால் கட்டாயம் இதனைப் படிக்க வேண்டும். உங்கள் வீல் மவுஸ் இந்த பிரவுசரில் இயங்கும் விதம் குறித்துத் தெரிந்து கொண்டு அவ்வசதிகளை அனுபவியுங்கள். முதலாவதாக டேப் பிரவுசிங் கட்டாயமாக உங்கள் கவனத்தை இழுத்திருக்கும். இதனை நிச்சயம் மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி இருப் பீர்கள். ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு விண்டோவைத் திறந்து பிரவுஸ் செய்வதை விட்டுவிட்டு அவற்றை ஒரே திரையில் பல்வேறு டேப்களில் அமைத்து பயன்படுத்தும் விதம் உங்களுக்குப் பிடித்திருக்கும். இப்போது ஏதேனும் ஒரு டேப்பில் உள்ள தளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்து பிரவுசிங் முடித்து தேவயானதை டவுண்லோட் அல்லது காப்பி செய்து முடித்துவிட்டீர்கள். இனி அதனை மூட வேண்டும். மேலே போய் கிளிக் செய்திட வேண்டாம். உங்கள் மவுஸ் வீலை ஒரு முறை கிளிக் செய்திடுங்கள். உடனே எந்த டேப் காட்டும் தளத்திலிருந்து கிளிக் செய்தீர்களோ அந்த தளம் மூடப்படும்.

இனி நீங்கள் அடுத்த டேப் காட்டும் தளத் திற்குச் செல்லலாம். பேக் அண்ட் பார்வேர்ட் பட்டன்கள் உள்ளதா? அவற்றை மவுஸ் வீலை இணைத்து கிளிக் செய்வதன் மூலம் எந்த பக்கம் போக விரும்பும் பட்டனுடன் கிளிக் செய்கிறீர்களோ அங்கு எடுத்துச் செல்லப் படுவீர்கள். இன்னும் ஒரு வசதியும் உண்டு. ஹோம் பேஜுக்கான பட்டனுடன் மவுஸ் வீலைக் கிளிக் செய்தால் உடனே உங்கள் ஹோம் பேஜ் திறக்கப்படுவதனைக் காணலாம்.

வேகமாக வெளியேறுங்கள்

சில வேளைகளில் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திடுகையில் முகவரியை அமைத்து என்டர் தட்டியவுடன் பாதி தளம் இறங்கிய நிலையில் அப்படியே திரையில் காட்டப்படும் காட்சி உறைந்து போய் நிற்கும். காரணமும் நமக்குக் காட்டப்பட மாட்டாது. இந்த சிக்கலிலிருந்து விடுதலை பெற ஒரு சிறந்த வழி எஸ்கேப் கீயை அழுத்துவதுதான். அழுத்தியவுடன் தளம் இறங்குவது நிறுத்தப்படும். அதன்பின் நீங்கள் வேறு தளத்திற்கான முகவரியை அமைத்து அந்த தளம் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்குவதைப் பார்க்கலாம். அல்லது முதலில் இறங்க மறுத்த அதே தளத்தினை மீண்டும் காட்டுமாறு முயற்சிக்கலாம். இந்த எஸ்கேப் கீ இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் இந்த பணியை மேற்கொள்கிறது.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-11005417530338232292008-08-28T05:51:00.000-07:002008-08-28T05:52:47.813-07:00உங்கள் டெக்ஸ்ட் புல்லட் பாய்ண்ட்டாகவேர்ட் டெக்ஸ்ட்டில் அடுத்தவர் கவனம் ஈர்க்க அல்லது முக்கிய விஷயங்களைக் காட்டிட புல்லட் அமைப்பது வழக்கம். அல்லது எண்களை அமைப்பது பழக்கம். புல்லட் பட்டன்கள் பலவகைப்படும். அவற்றில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அதனைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேர்ட் உங்களுக்கு வழி தருகிறது. இதற்குப் பதிலாக நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டினை புல்லட் பாய்ண்ட்டிற்குப் பதிலாக அமைக்கலாம். இதற்கு ஏற்கனவே மாறா நிலையில் உள்ள புல்லட் பாய்ண்ட்களை மாற்றி அமைத்திட வேண்டும். இதற்குக் கீழ்க்கண்டபடி செட் செய்திடவும். முதலில் வேர்ட் தொகுப்பினைத் திறந்து ஏதேனும் ஒரு டாகுமென்டைத் திறக்கவும். இனி பார்மட் மெனு செல்லவும். அதில் உள்ள பிரிவுகளில் புல்லட்ஸ் அண்ட் நம்பரிங் என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Bullets and Numbering” என்ற தலைப்பில் சிறிய டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்படும்.

இங்கு நீங்கள் பயன்படுத்தாத ஏதாவது ஒரு வகை நம்பர் பார்மட்டில் கிளிக் செய்திடவும். அதன் பின் Customize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். நீங்கள் கிளிக் செய்து தேர்ந்தெடுத்த நம்பர் பார்மட் பாக்ஸில் உங்களுக்குப் பிடித்த சொல் ஒன்றை டைப் செய்திடவும். Internet, College, Friend என எதனை வேண்டுமென்றாலும் டைப் செய்திடலாம். இதில் உங்களுக்குப் பிடித்த எழுத்து வகையினையும் பயன்படுத்தலாம். இதில் 30 கேரக்டர்களை என்டர் செய்திடலாம். அதன்பின் ஓகே செய்து வெளியேறினால் பின் டெக்ஸ்ட் அமைக்கும்போது அதில் புல்லட்டுக்குப் பதிலாக இந்த சொல்லை புல்லட் போல பயன்படுத்தலாம்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-85584674381823729872008-08-28T05:50:00.000-07:002008-08-28T05:51:34.580-07:00எக்லெஸல் சில சந்தேகங்கள்டேட்டா என்ட்ரி செய்திட

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இட அடுக்கடுக்காய் தகவல்கள் உள்ளன. அனைத்தையும் வரிசையாக படுக்கை வரிசைகளில் ஒர்க்ஷீட்டில் இட வேண்டும். ஒவ்வொரு செல்லாக கீகளை அழுத்தி அதன் பின் டேட்டாக்களை இடுவது சிரமமான காரியம் தான். டேட்டா டைப் செய்வதைக் காட்டிலும் செல்களின் ஊடே சென்று வருவதுதான் பெரிய வேலையாகத் தெரியும். அப்படியானால் இந்த செல்களினிடையே சென்று வராமல் டேட்டாக்களை டைப் செய்திட முடியுமா? ஆம். இதற்கான விடை எக்ஸெல் தொகுப்பின் டேட்டா என்ட்ரி படிவத்தில் உள்ளது. அது என்ன புதியதாக டேட்டா பார்ம் என்ற கேள்வி எழுகிறதா? எக்ஸெல் தொகுப்பின் ஆபீஸ் அசிஸ்டன்ட் அழுத்திக் கேட்டபோது டேட்டா பாரம் என்பது ஒரு டயலாக் பாக்ஸ்; ஒரு முழு வரிசை டேட்டாவை இடுவதும் பார்ப்பதும் இதில் எளிதாகிறது என்ற விளக்கம் கிடைக்கிறது. சுருக்கமாக செல்களின் இடையே கீகளை அழுத்தும் வேலை இல்லாமல் டேட்டாவை நிரப்புவதற்கான எளிய வழியினை இந்த டேட்டா என்ட்ரி பாரம் தருகிறது. இதனை எப்படி செயல்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் நீங்கள் பயன்படுத்தும் ஒர்க்ஷீட்டில் நெட்டுவரிசைகளுக்குத் தலைப்புப் பெயர் கொடுத்திருக்க வேண்டும். இனி அடுத்த படுக்கை வரிசையில் ஏதேனும் ஒரு செல்லைத் தேர்ந்தெடுங்கள். பின்னர் மெனு பாரில் டேட்டா என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் பார்ம் என்பதைக் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு டேட்டா என்ட்ரி பாரம் ஒன்று கிடைக்கும். டேட்டாவை அடுத்தடுத்த கட்டங்களில் இட டேப் கீ அழுத்தவும். அடுத்த படுக்கை வரிசைக்கான டேட்டாவை அமைக்க என்டர் கீயை அழுத்தவும்.

ஒவ்வொரு வரிசைக்கும் டேட்டா என்ட்ரி பாரத்தில் ஒரு பக்கம் கிடைக்கும். நீங்கள் டேட்டா அமைக்கும் அதே நேரத்தில் டேட்டா ஒர்க் ஷீட்டிலும் அமைக்கப்படுவதனைக் காணலாம். ஏற்கனவே டேட்டா அமைத்ததை எடிட் செய்வதற்கான கீகளும் பாரத்தில் உள்ளன. அனைத்து டேட்டாவும் அமைத்த பின் குளோஸ் பட்டனை அழுத்தவும். மீண்டும் இடையே அல்லது கீழாக டேட்டா அமைக்க சம்பந்தப்பட்ட செல்லில் கர்சரை வைத்து மெனு பார் மூலம் பாரத்தை வரவழைத்து தகவல்களை இடலாம். எவ்வளவு நேரம் மற்றும் உழைப்பு மிச்சமாகிறது பார்த்தீர்களா!

எல்லாமே எண்கள் – எப்படி மாற்ற?

வாசகர் ஒருவரின் அலுவலகக் கம்ப்யூட்டரில் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை இரண்டிலும் எண்களே இருக்கின்றன. நெட்டுவரிசைக்கான எழுத்துக்கள் இல்லை. ஒர்க்ஷீட்டின் இடது மூலையில் கர்சர் இருக்கும் கட்டம் எந்த நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை (R6C7) வைத்தே காட்டப்படுகின்றன. ஆனால் வீட்டிலும் மற்ற இடங்களிலும் உள்ள அதே எம்.எஸ்.எக்ஸெல் 2003 தொகுப்பில் வழக்கம்போல் எழுத்துக்களும் எண்களும் இருந்தன. இது எதனால் ஏற்படுகிறது? இதனை எப்படி நாம் விரும்பும் வகையில் மாற்றலாம்? என்று கேட்டிருக்கிறார். இதுவும் நாம் ஒர்க்ஷீட் செட் அப் வகையிலான பிரச்னை தான். யாரோ ஒருவர் அந்த வகையில் எண்வகைகளாகத் தோன்றும் படி அமைத்துள்ளார். இது தேவையில்லை என்றால் பழையபடி மாற்றிவிடலாம்.

ஒர்க்ஷீட்டைத் திறந்து பின் Tools >Options செல்லவும். இதில் கிடைக்கும் விண்டோவில் உள்ள General என்னும் டேபினைக் கிளிக் செய்திடவும். முதலாவதாக “R1C1 reference style” என்னும் வரி தென்படும். இதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி வழக்கபோல் நெட்டு வரிசைகளுக்கு எழுத்துக்களும் படுக்கை வரிசைகளுக்கு எண்களும் கிடைக்கும்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-45906188057236631282008-08-28T05:49:00.000-07:002008-08-28T05:50:15.889-07:00பான்ட் பிடிக்கவில்லை... என்ன செய்வது....வேர்ட் டாகுமெண்ட் அமைக்க ஒரு பைலைத் திறந்தவுடன் வரும் பாண்ட் எனக்குப் பிடிக்க வில்லை. இதனை மாற்றி எனக்குப் பிடித்த பாண்ட்டை அமைக்க என்ன செய்திட வேண்டும்?
Format மெனு சென்று அதில் Font என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உங்களுக்குப் பிடித்த எழுத்து வகையினைத் தேர்ந்தெடுத்து அதற்கான மற்ற அட்ரிபியூட்டுகளை (பண்புகளை–போல்ட், அளவு, சாய்வெழுத்து போன்றவை) அமைக்கவும். பின்னர் கீழாக உள்ள Default என்பதில் கிளிக் செய்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் அமைத்த எழுத்து அனைத்து புதிய பைல் களுக்கும் தயாராக இருக்கும். இந்த பாண்ட் தமிழ் பாண்ட் ஆகவும் இருக்கலாம். எப்போதும் கிடைக்கும் மார்ஜின் அளவு நான் தயாரிக்கும் டாகுமெண்ட்களுக்கு சரியாக இல்லை. ஒவ்வொருமுறையும் மாற்ற வேண்டியதுள்ளது. இதற்குப் பதிலாக நான் விரும்பும் வகையில் மார்ஜின் அமைக்க என்ன செய்திட வேண்டும்?

File மெனு சென்று அதில் Page Setup தேர்ந்தெடுக்க வேண்டும். கிடைக்கும் விண்டோவில் Margins டேபினைக் கிளிக் செய்திடவும். அதில் நீங்கள் விரும்பும் மார்ஜின் அளவினை அமைக்கவும். அதன் பின் Default என்பதில் கிளிக் செய்து ஓகே கொடுத்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த அளவிலேயே மார்ஜின் உங்கள் டாகுமெண்ட் களுக்குக் கிடைக்கும்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-88100493052776480122008-08-28T05:48:00.000-07:002008-08-28T05:49:33.825-07:00ஆட்டோமேடிக் டேட் அன்ட் டைம்பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் தொகுப்புகள் நாம் சொல்ல வேண்டிய கருத்துக்களை தகவல்களை எடுத்துக் காட்ட நமக்கு வாய்த்திருக்கும் ஓர் அருமையான சாதனமாகும். நம்மில் பலர் ஒரு பிரசன்டேஷன் பைலைப் பல இடங்களில் காட்ட வேண்டியதிருக்கும். எடுத்துக்காட்டாக அலுவலகம் ஒன்றின் கிளை அலுவலகங்களுக்குச் சென்று பல அலுவலர் குழுக்களிடையே இதனைப் பயன்படுத்தி விளக்க வேண்டியதிருக்கும்.

இந்த நிலையில் இதில் தேதி மற்றும் நேரத்தை நாம் அமைத்திருந்தால் பின்னாளில் இதனைப பயன்படுத்துகையில் பழைய நாள் தேதி இருந்தால் நம்முடைய செயலாற்றும் பண்பே கேள்விக் குறியாகவும் கேலியாகவும் மாறிவிடும். இதனைத் தடுக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பைல் தானாக அன்றைய நாள் மற்றும் நேரத்தை அமைத்துக் கொள்ளும்படி செட் செய்திடலாம். முதலில் Insert கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Date and Time என்பதைத் தேர்ந்தெடுங்கள். பின் உங்களுக்கு Header and Footer டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள டேப்களில் Slide என்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதில் உள்ள Date and time என்பதில் டிக் அடையாளம் இருக்கிறதா என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் ஏற்படுத்துங்கள். பின்னர் Update automatically என்ற ரேடியோ பட்டனை அழுத்தவும்.

இதனைக் கீழாக விரித்தால் சிறிய மெனு கிடைக்கும். இதில் தேதி உங்களுக்கு எந்த பார்மட்டில் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். நீங்கள் விருப்பப்பட்டால் டைட்டில் ஸ்லைடில் இது அமையாமல் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு Don’t show on title slide என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். அதன்பின் Apply to All என்பதனைக் கிளிக் செய்து வெளியேறவும். இனி எப்போது நீங்கள் அந்த பைலை ரீலோட் செய்தாலும் அன்றைய தேதி மற்றும் நேரம் காட்டப்படும்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-53843761774066840852008-08-28T05:46:00.000-07:002008-08-28T05:48:32.531-07:00வேர்ட் ரூலரும் பாரா மார்ஜினும்வேர்ட் தொகுப்பில் எல்லோரும் ரூலரை அமைத்து பயன்படுத்தி வருவீர்கள். இது ஒரு வரியின் நீளத்தையும் அதில் குறிப்பிட்ட இரு புள்ளிகளின் இடையே இருக்கும் அகலத்தையும் மற்றும் நெட்டு வாக்கில் இதே அளவையும் தெரிந்து கொள்ள தரப்பட்டிருக்கும் வசதி என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். இதில் இன்னும் பல கூடுதல் வசதிகளும் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

இந்த ரூலரில் தலைகீழாக சிறிய முக்கோணங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை எப்போதாவது பார்த்திருக் கிறீர்களா? இப்போது பாருங்கள். சரி, இவை எதற்காகத் தரப்பட்டுள்ளன? ஏன் சில நேரங்களில் இவை சிறிது தள்ளியும், சில இடங்களில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தும் அமைந்துள்ளன என்றும் இவற்றை நாமாக இழுத்துப் பிரித்தால் என்ன நடக்கும் என்று சற்று பார்த்திருக்கிறீர்களா? இல்லையா! இதோ இப்போது பார்க்கலாம். இந்த முக்கோணங்கள் எல்லாம் டெக்ஸ்ட்டில் உள்ள பாராக்களின் இன்டென்ட் எனப்படும் பத்தி இடைவெளியைக் குறிப்பனவாகும். இவற்றைப் பயன்படுத்தி பாரா இடை வெளியினை அமைக்கலாம். இதற்கென பார்மட் மற்றும் பாராகிராப் விண்டோ சென்று குறிப்பிட்ட பாரா மார்ஜின் அமைத்திடாமல் இந்த முக்கோணங்களைப் பயன்படுத்தியே அவற்றை ஏற்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது என்று பார்ப்போம். ரூலர் கோட்டின் இடது புறம் ஓரத்தில் ஹவர் கிளாஸ் தோற்றத்தில் இரு முக்கோணங் களைக் காணலாம். சரியாகப் பார்த்தால் இதில் மூன்று வித பாரா அடையாள கருவிகள் உள்ளன. இவற்றை பிரித்துப் பயன்படுத்தலாம். மேலாக உள்ள முக்கோண அடையாளம் முதல் வரி மார்ஜினிலிருந்து எவ்வளவு தள்ளி உள்ளது என்பதைக் காட்டுகிறது.

இந்த முக்கோணத்தை எங்கு இழுத்துவிடுகிறீர்களோ அந்த இடத்திலிருந்து (Firstline Indent) ஒரு பாராவின் முதல் வரி தொடங்கும். கீழாக முக்கோணம் இழுத்துவிடப்படுவதால் ஏற்படும் இடத்தில் அந்த பாராவின் மற்ற வரிகள் தொடங்கும். இதற்கு ஆங்கிலத்தில் ஹேங்கிங் இன்டென்ட் (Hanging Indent) என்று பெயர். இந்த இரு முக்கோணங் களின் கீழாக ஒரு சிறிய செவ்வகம் தெரிகிறதா? பாராவின் இடது மார்ஜினைக் குறிக்கிறது.

இதனை லெப்ட் இன்டென்ட் (Left Indent) என்று அழைப்பார்கள். இதனை இழுத்தால் முதல் இரு முக்கோணங்களும் ஒன்றாக இழுக்கப்படும். இதனால் ஒரே இடத்தில் அனைத்து வரிகளுக்கும் பாரா மார்ஜின் ஏற்படும். நமக்கு இரு வேலைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கும் நேரம் மிச்சமாகிறது. இந்த ரூலரிலேயே வலது பக்கம் ஒரு முக்கோணத்தைப் பார்க்கலாம். இதனை இழுத்து அமைப்பதன் மூலம் பாரா ஒன்றின் வலது மார்ஜினை அமைக்கலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் எந்த பாராவின் மார்ஜினை மாற்றி அமைக்க வேண்டும் என முடிவெடுக்கிறீர்களோ அந்த பாராவில் ஏதாவது ஒரு வரியில் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் எந்த மார்க்கரை நகர்த்த வேண்டும் என்பதை முடிவெடுக்கவும். அதன் மீது மவுஸ் பாய்ண்ட்டரைக் கொண்டு செல்லவும். பின் மவுஸின் இடது பக்கத்தைக் கிளிக் செய்து அழுத்திப் பிடித்து ரூலர் கோட்டின் மீது இழுக்கவும்.

இழுத்துச் சென்று எங்கு மார்ஜின் இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களோ அங்கு விட்டு விடவும். இவ்வாறு இழுக்கையில் புள்ளிகள் நிறைந்த கோடு ஒன்று உருவாகி நகர்ந்து நீங்கள் இழுக்கும் திசையில் உங்கள் கர்சருடன் நகர்ந்து செல்வதனைப் பார்க்கலாம். இந்த கோடு உங்கள் பாராவினை ஒழுங்காக அமைத்திட உதவுகிறது. இப்போது இந்த முக்கோணங்களும் செவ்வகமும் எதற்காகத் தரப்பட்டுள்ளன என்றும் இவற்றை இழுத்து வந்து சில ஒழுங்குகளைப் பாராவில் அமைக்கலாம் என்பதனையும் உணர்ந்திருப்பீர்கள். இனி இவற்றைப் பயன்படுத்துகையில் எங்கு மாற்றங்கள் ஏற்படும் என்பதனைப் பார்க்கலாம். பாரா ஒன்று டைப் செய்யப் படுமுன் இந்த பாரா மார்க்கர்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால் அந்த மாற்றம் இதன் பின் ஏற்படுத்தப்படும் பாராக்கள் அனைத்திலும் கடைப் பிடிக்கப்படும். இதற்கு முன் ஏற்படுத்திய பாராக்களில் மாற்றங்கள் ஏற்படாது.

ஏற்கனவே டைப் செய்த பாராவில் நீங்கள் மார்ஜின் வெளியில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால் அந்த பாராவில் கர்சரைக் கொண்டு சென்று பின் மார்க்கர்களை நகர்த்தவும். நகர்த்தும் மார்க்கரின் தன்மைக்கேற்ப பாராவில் மாற்றம் ஏற்படும். இது அந்த பாராவில் மட்டும் மாற்றத்தினை ஏற்படுத்தும். ஏற்கனவே டைப் செய்த பல பாராக்களில் நீங்கள் விரும்பும் மார்ஜின் இடைவெளியை ஏற்படுத்த விரும்பினால் இந்த மார்க்கர்களை நகர்த்தும் முன் மாற்ற விரும்பும் பாராக்களை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அதன்பின் பாரா மார்க்கர்களை நகர்த்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரா வெங்கும் இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

என்ன! பாரா இடைவெளி களையும் மார்ஜின்களையும் எப்படி அமைப்பது என்று தெரிந்து கொண்டீர்களா! மார்ஜினுக்கு பொங்கல் காப்பு கட்டியது போலத் தோற்றமளித்த முக்கோணங்கள் எதற்காக உள்ளன என்று தெரிந்து கொண்டீர்களா! இனி உங்கள் விருப்பத்திற்கேற்ப மார்ஜின்களுடன் பாராக் களை அமைத்து பாருங்கள்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-65963710991702385992008-08-28T05:37:00.000-07:002008-08-28T05:46:46.262-07:00இலவச டவுண்லோட் புரோகிராம்கள்இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் இணைப்பு வழங்கும் வேகத்தைப் பயன்படுத்தி நாம் டவுண்லோட் செய்திடும் பைல்களை எந்த சிக்கலுமின்றி வேகமாக இறக்கித் தர நமக்கு டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன.

அவ்வகையில் இணையத்தில் பல இலவச புரோகிராம்கள் நமக்கு கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் தொகுப்புடன் இத்தகைய வசதி இணைந்தே இருந்தாலும் டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தரும் பல வசதிகள் அதில் இல்லை. ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இøணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை கிளிக் செய்து டவுண்லோட் செய்திடும் வசதி போன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. பொதுவாக இந்த கூடுதல் வசதிகள் எல்லாம் இத்தகைய புரோகிராம்களில் கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும். ஆனால் இலவச புரோகிராம்கள் அதிகமான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு கிடைக் கும் இந்நாளில் மேல் குறிப்பிட்ட வசதிகள் இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்களிலேயே தரப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில டவுண்லோட் மேனேஜர்களில் அதிகமான எண்ணிக்கையில் இந்த வசதிகள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பாகும். அவற்றில் மிகச் சிறந்த மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன.

Free Download Manager
1. புரோகிராம் பெயர் : FreeDownload Manager
2. வழங்குபவர் : FreeDownload Manager.org
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.freeDownloadManager.org/download.htm
4. பைல் அளவு: 5754 கேபி.

இது ஒரு ஓப்பன் சோர்ஸ் சாப்ட் வேர் தொகுப்பு. இதன் பெயருக்கேற்ற வகையில் சிறப்பான பல வசதிகளை இந்த புரோகிராம் தருகிறது. அனைத்து பிரவுசர் தொகுப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இன்டர்பேஸ் இயங்குகிறது. எப்.டி.பி. மற்றும் எச்.டி.டி.பி. வகைகளுக்குத் தனித்தனியே கிளையண்ட் புரோகிராம்கள் இணைக்கப்பட்டுள்ளன.

டவுண்லோட் செய்யப்பட வேண்டிய புரோகிராம்களை பகுதி பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் வேகமாக டவுண்லோட் செய்து தருகிறது. டவுண்லோட் செய்திடும் நேரத்தில் இன்டர்நெட் தொடர்பு விட்டுப் போனாலோ அல்லது கம்ப்யூட்டர் முடங்கிப் போனாலோ அடுத்த முறை விட்டுப்போன இடத்திலிருந்து பைலை டவுண்லோட் செய்து இணைத்து தரும் திறன் கொண்டது. வீடியோ தளங்களிலிருந்து டவுண்லோட் செய்வதுடன் பார்மட்டுகளையும் மாற்றி தருகிறது. இதனுடன் இணைத்துத் தரப்பட்டுள்ள அப்லோட் மேனேஜர் புரோகிராம் பைல்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள அப்லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. ஒரு பைலை பல்வேறு லிங்க்குகளிலிருந்து ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்து தரும் திறன் கொண்டது. டவுண்லோட் செய்யப்படும் பைல்களை அதன் வகைகளுக்கிணங்க சேவ் செய்து நிர்வகிக்க உதவிடுகிறது.
ஒரு பைலை டவுண்லோட் செய்திடும் முன் அந்த பைல் குறித்து மற்றவர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று காட்டப்படுகிறது. அதே போல நீங்களும் உங்கள் கருத்தைப் பதிவு செய்திடலாம். இதனால் கெடுதல் விளைவிக்கும் பைல்களை டவுண்லோட் செய்திடுவதனைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கும் எச்சரிக்கை செய்திடலாம்.

முழு இணையதளத்தையும் அப்படியே டவுண்லோட் செய்திடும் திறன் கொண்டது. இதற்கென எச்.டி.எம்.எல். ஸ்பைடர் என ஒரு புரோகிராம் பிரிவு தரப்படுகிறது. அதனால் தான் இதனை சைட் ரிப்பர் (‘site ripper’) என அழைக்கின்றனர்.

Orbit Downloader
1. புரோகிராம் பெயர் : OrbitDownloader
2. வழங்குபவர் : OrbitDownloader.com
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.orbitdownloader.com/download.htm
4. பைல் அளவு: 2217 கேபி.

டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்களின் லீடர் என இது செல்லமாக அழைக்கப்படுகிறது. ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட துணை புரியும் நோக் கத்துடன் இந்த புரோகிராம் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய சில அம்சங்களுடன் வழக்கம்போலான இ.எக்ஸ்.இ. மற்றும் காம் பைல்கள் மட்டுமின்றி ஸ்ட்ரீமிங் மீடியா வகையைச் சேர்ந்த ஆடியோ மற்றும் வீடியோ பைல் களை டவுண்லோட் செய்திடுகிறது. யு–ட்யூப் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற சில தளங்களிலிருந்து நேரடியாக டவுண் லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. இன்றைக்குக் கிடைக்கும் சிறந்த டவுண் லோட் மேனேஜர் புரோகிராம்களில் ஒன்று எனப் பலராலும் பாராட்டுப் பெற்றது.

இதனைப் பயன்படுத்த எந்தவிதமான ரெஜிஸ்ட்ரேஷனும் தேவையில்லை. விளம்பரங்களோ அல்லது ஸ்பை வேர் புரோகிராம்களோ இல்லை என சான்று பெற்றது. யு–ட்யூப் வீடியோக்களை டவுண்லோட் செய்திட இது மிக உகந்தது என பாராட்டுப் பெற்றது. தற்போதைய பதிப்பு 2.7.3.

Flash Get
1. புரோகிராம் பெயர் : FlashGet
2. வழங்குபவர் : Trend Media
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.flashget.com/download.htm
4. பைல் அளவு: 4520கேபி.

இன்டர்நெட்டில் மிக அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண் டுள்ள புரோகிராமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. டவுண் லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது எளிதாக தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப் பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்துவகைப்படுத்தும் வழிகள்.

இந்த புரோகிராம் முதலில் சீன சொல்லை ஒட்டி ஒஞுtஞிச்ணூ என அழைக்கப் பட்டது. இதன் புதிய பதிப்பு 1.9.6. இதில் மல்ட்டி சர்வர் ஹைபர் த்ரெடிங் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல்வேறு புரோடோகால் முறைகளை இதில் பயன்படுத்தி டவுண் லோட் செய்திடலாம். இறக்கப் படும் பைலின் அளவிற்கேற்ப பைல் இறக்கப் படும் வேகம் 6 முதல் 10 முறை அதிகரிக்கப்படுகிறது.

டவுண்லோட் செய்யப் படும் பைலை பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் இந்த பகுதிகளை டவுண்லோட் செய்து பின் இணைத்துத் தருகிறது. ஒரு பைல் மட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல பைல்களை இது போல பிரிவுகளாகப் பிரித்து டவுண்லோட் செய்கிறது. அத்துடன் எந்த நேரத்தில் எந்த பைலை டவுண்லோட் செய்திட வேண்டும் என வரையறை செய்திடலாம். இதனால் நம் இன்டர் நெட் இணைப்பு வேகத்தினை ஒட்டியும் நம் தேவையை பொறுத்தும் டவுண் லோட் செய்திட முடிகிறது.

இந்த புரோகிராமைப் பயன்படுத்துகையில் எந்த அட்–வேர் புரோகிராமும் குறுக்கிடாது. எந்தவிதமான ஸ்பைவேர் புரோகிராமும் இல்லை என்று பலராலும் கணிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான ராம் மெமரியைப் பயன்படுத்துவதால் டவுண்லோட் செய்திடுகையில் நம்முடைய வேலையை கம்ப்யூட் டரில் தொடர்ந்து மேற் கொள்ளலாம். டவுண்லோட் முடிந்தவுடன் தானாக கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி டவுண்லோட் செய்யப் பட்ட பைலில் வைரஸ் எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்கிறது.

ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இøணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை டவுண்லோட் செய்திடும் வசதிபோன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. அவற்றில் மிகச் சிறந்த மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. டவுண்லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப்பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்து வகைப்படுத்தும் வழிகள்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-56475765855352421212008-08-22T16:05:00.000-07:002008-08-22T16:06:53.378-07:00எக்ஸெல் குறிப்பிட்ட சார்ட் வடிவைத் தொடர்ந்து பயன்படுத்தஎக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட் ஒன்றில் அருமையான வடிவத்தில் சார்ட் ஒன்றை அமைக்கிறீர்கள். இது உங்களுக்குப் பிடித்துப் போவதால் அந்த வடிவத்தினையே தொடர்ந்து எப்போதும் சார்ட்களுக்குப் பயன்படுத்த திட்டமிடுகிறீர்கள். ஒவ்வொரு முறையும் அதனை அமைத்திடச் செலவிடும் நேரத்தை இதனால் மிச்சம் செய்திடலாம்.
மேலும் ஒவ்வொரு முறையும் இவ்வளவு அழகாக சார்ட் வடிவம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. எனவே இதனை உங்களுக்கான டிபால்ட் (மாறாதது) சார்ட்டாக அமைக்க வழியைத் தேடுகிறீர்கள். அதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செட் செய்திட வேண்டும்.
1. முதலில் உங்களுக்குப் பிடித்த அந்த சார்ட்டைத் திறந்து கொள்ளுங்கள்.

2. பின் மெனுவிலிருந்து Chart –– அதன்பின் Chart Type தேர்ந்தெடுங்கள். இப்போது உங்களுக்கு Chart Type Dialogue பாக்ஸ் கிடைக்கும்.

3. இதில் கிடைக்கும் டேப்களில் Customs type டேப்பினை அழுத்தவும்.

4. பின் இதில் உள்ள User Defined ரேடியோ பட்டனை அழுத்தவும்.

5. அதன்பின் Add பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Add Custom Chart Type dilogue box கிடைக்கும். இதில் Name என்பதில் இதற்கான ஒரு பெயரை டைப் செய்திடவும். இதன் விளக்கத்தினை Description என்ற பெயரின் கீழ் டைப் செய்திடவும்.

5. இப்போது ஓகே பட்டன் கிளிக் செய்து மீண்டும் Chart Type Dialogue பாக்ஸ் வரவும். இந்த சார்ட் அமைப்பையே தொடர்ந்து நீங்கள் அடிப்படை அமைப்பாகப் பயன்படுத்த வேண்டும் என நினைத்தால் Set as Default Chart பட்டன் என்பதில் கிளிக் செய்திடவும்.

6. முடித்திட ஓகே பட்டன் கிளிக் செய்திடவும். இனி சார்ட் தயார் செய்திட நீங்கள் முயற்சிக்கையில் எந்த பெயரில் இதனை சேவ் செய்தீர்களோ அதனைத் திறந்து பயன்படுத்தி சார்ட் உருவாக்கலாம்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-62287831240808271032008-08-22T16:03:00.000-07:002008-08-22T16:05:36.817-07:00பவர் பாய்ண்ட் அனிமேஷன்பவர்பாய்ண்ட் தொகுப்பில் ஸ்லைடுகளின் ஊடே நகரும் ஆப்ஜெக்ட்களை அமைக்கலாம் என்பதனை அதனைப் பயன்படுத்தும் பலர் அறியாமல் இருக்கின்றனர். இந்த தொகுப்பு அலுவலக ஆய்வுக் கூடங்கள் மற்றும் வர்த்தக ரீதியான கூட்டங்களில் பெரிதும் பயன்படுத்தப்படுவதால் இது போன்ற அனிமேஷன் வசதி இருக்காது என்றே கருதுகின்றனர்.
ஆனால் இத்தகைய அனிமேஷன், பவர்பாய்ண்ட் பயன்படுத்தும் காரணங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது அதனைப் பயன்படுத்துவோருக் குத்தான் தெரியும். அனிமேஷன் களை அமைப்பது பற்றி இங்கு காண்போம்.

ஆப்ஜெக்ட் ஒன்றை, ஏதேனும் ஒரு ஆட்டோஷேப், கிராபிக்ஸ் அல்லது டெக்ஸ்ட் பாக்ஸ், ஸ்லைட் ஷோவின் இடையே திரையின் ஊடே நகர்ந்து செல்லுவதை நோக்கமாக வைத்துக் கொள்வோம். எனவே அதற்கென ஒரு பாதை ஒன்றை நாம் அனுமானித்து வைத்துக் கொள்வோம். இதனை எப்படி அமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

1.முதலில் நீங்கள் இலக்கு வைத்திடும் ஆப்ஜெக்ட் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் Slide Show/Custom Animation என்பதனைத் தேர்ந்தெடுங்கள்.

2. பின் (Task pane) டாஸ்க் பேனில் Add Effect என்பதனைத் தேர்ந்தெடுங்கள். பிளை அவுட் மெனுவில் Motion Paths என்பதன் மீது கிளிக் செய்திடவும்.

3. நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஆப்ஜெக்ட் ஒரு நேர் கோட்டில் வலது பக்கமோ இடது பக்கமோ நகரச் செய்வதாக இருந்தால் தரப்பட்டுள்ள பிளை அவுட்டில் அதற்கேற்ற முறையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் அனிமேஷன் வேடிக்கையான முறையில் அமைய வேண்டும் என எண்ணினால் Draw Custom Path என்பதைத் தேர்ந்தெடுத்து பிளை அவுட்டில் இருந்து Scribble என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Scribble என்பதைத் தேர்ந்தெடுக்கையில் மவுஸ் பாய்ண்ட்டர் ஒரு பென்சிலாக மாறும். ஒரு கோடு அல்லது வளைகோட்டினை வரையவும். அல்லது ஸ்கிரீனில் ஏதாவது கிறுக்கவும். இதனை முடித்துவிட்டவுடன் நீங்கள் எப்படி கோடு அல்லது கிறுக்கல் போட்டீர்களோ அதன்படி ஆப்ஜெக்ட் நகரும். இதன் பாதை நீங்கள் டிசைன் செய்திடும்போதுதான் உங்கள் கண்களுக்குத் தெரியும். ஸ்லைட் ஷோ பிரசன்டேஷனின் போது அது தெரியாது. ஆப்ஜெக்ட் நகர்வதுதான் தெரியும். இந்த பாதையை எந்த நேரத்திலும் நீங்கள் எடிட் செய்திடலாம். அதே போல அனிமேஷனை எதிர்புறத்திலும் பின்னோக்கி நகரச் செய்திடலாம். இதற்கு ஏற்கனவே அமைத்த பாதையில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Reverse Path Direction என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த பாதையை புதிய வடிவில் அமைத்திட மீண்டும் ரைட் கிளிக் செய்து Edit Points களைத் தேர்ந்தெடுக்கவும். இந்த பாதையில் உள்ள சில புள்ளிகளை நீக்க வேண்டும் என்றாலும் மெனு வரவழைத்து Delete Point கிளிக் செய்வதன் மூலம் நீக்கலாம். அதே போல புதிய பாய்ண்ட் அமைக்க வேண்டும் என்றால் Add Point என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். எல்லாம் முடிந்த பின் அனிமேஷன் எப்படி இருக்கும் என்பதனை பிரிவியூ பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். நீங்கள் விரும்பிய பாதையை அமைத்து இயக்கினால் சொல்ல விரும்பும் கருத்து சரியாகப் பார்ப்பவர்களுக்கு விளங்கும்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-55517646602478630362008-08-22T16:00:00.000-07:002008-08-22T16:03:06.107-07:00எக்ஸெல் பங்சனில் என்ன எழுத வேண்டும்?நீங்கள் எப்படியோ, ஆனால் எனக்கு இந்த சந்தேகம் எக்ஸெல் பயன்படுத்தும்போதெல்லாம் வரும். ஒரு எக்ஸெல் பங்சனில் என்ன ஆர்க்யுமெண்ட் எல்லாம் கொடுக்க வேண்டி இருக்கும். அதாவது = PMT( ) என்றால் அடுத்து அடைப்புக்குறிகளுக்குள் என்ன தர வேண்டும், அவற்றை எப்படித் தர வேண்டும் என்பது பல வேளைகளில் நினைவுக்கு வராது. ஆனால் இந்த பங்சன் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் நாம் இருப்போம்.

எனவே உள்ளே தரப்பட வேண்டிய ஆர்க்யுமென்ட்கள் எப்படி இருக்க வேண்டும் என Function Wizard சென்று பார்க்க முயற்சிப்பேன். அப்படி இருந்தும் கூட பல வேளைகளில் இந்த ஆர்க்யுமென்ட்களை தவறாகவே நான் தந்திருக்கிறேன். ஆனால் இந்த சுற்றுவழியெல்லாம் இல்லாமல் ஒரு சுருக்கு வழி உள்ளது. வழக்கம்போல பங்சன் பெயரெல்லாம் கொடுத்துவிட்டு Ctrl + Shift + A அழுத்தவும். எடுத்துக் காட்டாக கடன் செலுத்தும் தொகையைக் காண =PMT( ) என ஒரு பங்சன் அமைக்கும்போது இவ்வாறு கீ தொகுப்பு கொடுத்தால் உடனே = PMT(rate,nper,pv,fv, type ) எனக் கிடைக்கும். இந்த உதவியைக் கொண்டு நீங்கள் டேட்டா அல்லது எந்த செல்லில் இந்த டேட்டா இருக்கிறதோ அதனை அமைக்கலாம். அதன் பின் விஷயம் எளிதாகிவிடும்.

ஒர்க் ஷீட் டேப் கலர் செட் செய்யலாமா!

எக்ஸெல் ஒர்க் ஷீட் டேப்களில் கலர் கொடுப்பதன் மூலம் ஒரே தன்மையிலான ஒர்க் ஷீட்களை நாம் அடையாளம் காண முடியும். எடுத்துக் காட் டாக ஸ்டேஷனரி, பல சரக்கு, செருப்பு மற்றும் ஷூ வகையறாக்களை விற்பனை செய்திடும் கடையில் உருவாக் கப்படும் வித்துமுதல் விற்பனை ஒர்க் ஷீட்களில் மேற்கண்ட ஒவ்வொரு வகைப் பொருளுக்கும் ஒரே மாதிரியான வண்ணம் கொடுப்பதன் மூலம் நாம் அவற்றை எளிமையாக அடையாளம் கண்டு இயக்க முடியும்.

1.முதலில் எந்த ஒர்க் ஷீட்டிற்கான வண்ணத்தை மாற்ற வேண்டுமோ அந்த டேபினைத் தேர்ந்தெடுத்து அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும்.

2.கிடைக்கும் பாப் அப் மெனுவில் டேப் கலர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Format Tab Color Box என்ற டயலாக் பாக்ஸ் கிடைக் கும்.

3. கிடைக்கும் பல வண்ண பாக்ஸில் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்.

4. ஏற்கனவே அந்த ஒர்க் ஷீட் டேபிற்கு ஒரு கலர் கொடுத்திருந்து அது வேண்டாம் என நீங்கள் எண்ணினால் Nணி இணிடூணிணூ என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். வேறு கலர் என்றால் அதனைத் தேர்ந் தெடுக்கவும்.
5. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-65672254597394098502008-08-22T15:55:00.000-07:002008-08-22T15:58:26.636-07:00பிளாஷ் டிரைவிற்கு ஆண்டி வைரஸ் பாதுகாப்புகையில் எடுத்துச் செல்லும் சிறிய கம்ப்யூட்டர் போல தற்போதைய பிளாஷ் டிரைவ் உருவாகி வருகிறது. சென்ற இதழ்களில் பிளாஷ் டிரைவில் வைத்து எந்த கம்ப்யூட்டரிலும் இயக்கக் கூடிய சில தொகுப்புகள் குறித்த தகவல்கள் தரப்பட்டன. அப்படியானால் இந்த பிளாஷ் டிரைவ்களிலும் ஆண்டி வைரஸ் தொகுப்புகளைப் பதிந்து வைத்து அதில் வைரஸ்கள் நுழைந்துவிடாமல் பாதுகாக்கலாமே என்று பல வாசகர்கள் கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். இந்த எண்ணத்துடன் இணையத்தை தேடியபோது சில பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.

பிளாஷ் டிரைவ்களை நாம் பல்வேறு கம்ப்யூட்டர்களில் இணைத்துப் பயன் படுத்துகிறோம். பெரும்பான்மையான கம்ப்யூட்டர்களில் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்று தெரியாது. அவற்றை அவ்வப்போது செக் செய்திடவும் முடியாது. அவை தரும் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதத்தையும் பெற முடியாது. அப்படியே அந்த கம்ப்யூட்டரில் ஆண்டி வைரஸ் புரோகிராம் இருந்தாலும் அது அப்டேட் செய்யப்பட்டதா எனவும் நாம் உறுதி செய்து கொள்ள முடியாது. எனவே பாதுகாப்பற்ற ஒரு கம்ப்யூட்டரில், பிளாஷ் டிரைவை இணைத்துப் பயன்படுத்துகையில் நம் பிளாஷ் டிரைவ் வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் உள்ள தகவல்களை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்நிலையில் தான் நம் பிளாஷ் டிரைவினையும், வைரஸ் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதுள்ளது. அதற்கான ஒரு புரோகிராம் குறித்து இங்கு காணலாம். AntiVir personal Edition என்னும் புரோகிராம் இவ்வகையில் சிறந்த புரோகிராமாக நமக்குக் கிடைக்கிறது. இதனை http://www. freeav.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராமினை பிளாஷ் டிரைவில் பதிந்து அதிலிருந்தே இயக்கலாம். இதனால் வைரஸால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரிலிருந்து வைரஸ்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. இந்த புரோகிராமினையும் தேவைப்படும்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதை நம் பிளாஷ் டிரைவில் பதிந்து கொள்வதும் எளிதாக உள்ளது.

AdAware SE Personal Edition 1.06 : இந்த புரோகிராம் நம் பிளாஷ் டிரைவிற்குள் எந்த ஸ்பை வேர் புரோகிராமும் நுழையவிடாமல் பாதுகாக்கிறது. இவ்வகையில் இதன் திறன் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

இந்த புரோகிரமினை இன்ஸ்டால் செய்திடுகையில் நேரடியாக உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் முதலில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதன் பின் Start, Programs, எனச் சென்று அங்கு கிடைக்கும் AdAware பைலினை உங்கள் பிளாஷ் டிரைவில் காப்பி செய்து விடுங்கள். பிளாஷ் டிரைவ் பாதுகாப்பில் இருக்கும் படி செட் செய்துவிடுங்கள். ஒரு சிலர் இவ்வளவு வேலை இருக்கிறதா? பேசாமல் பிளாஷ் டிரைவினை நம்பிக்கையற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இணைக்க வேண்டாம் என்று எண்ணுவார்கள். இந்தக் காலத்தில் நம்பிக்கை உள்ள மற்றும் நம்பிக்கை இல்லாத கம்ப்யூட்டர் என்று எதுவுமே இல்லை. எதில் வேண்டு மானாலும் மோசமான வைரஸ் இருக்கலாம். ஒரு முறை தலைமைச் செயலகத்தில் ஆணையர் ஒருவரின் பெர்சனல் கம்ப்யூட்டரில் இருந்து வீட்டில் பைல் பார்ப்பதற்காக பைல் ஒன்றினைக் காப்பி செய்திட வேண்டி இருந்தது. தலையில் சத்தியம் செய்யாத குறையாக வைரஸ் எதுவுமில்லை என்று சொன்னதால் பைலைக் காப்பி செய்து என் வீட்டிற்குக் கொண்டுவந்தேன். அதிக அதிகாரமிக்க அதிகாரியின் கம்ப்யூட்டரில் வைரஸ் எங்கிருக்கப் போகிறது என்று அசட்டுத் தைரியம். உயர் அதிகாரி சொல்லும் போது கேட்கத்தானே வேண்டும் என்கிற மரியாதை. பைலைக் காப்பி செய்து என் கம்ப்யூட்டருக்குமாற்றினேன். அடுத்த முறை பூட் செய்திடுகையில் பைல்கள் எல்லாம் தடுமாறின; தலைகீழாக மாறின; ஒவ்வொரு பைலும் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக மாறின. அவ்வளவு தான் அன்று இரவு சிவராத்திரி. என்ன செய்தும் வைரஸ் நகர மறுத்தது. இறுதியில் வேறு வழியின்றி ஹார்ட் டிஸ்க்கில் சி டிரைவினை ரீ பார்மட் செய்து பைல்களை மீண்டும் காப்பி செய்து உறங்க அதிகாலை மூன்று மணி ஆயிற்று. இத்தனைக்கும் என் கம்ப்யூட்டரில் நல்ல திறன் கொண்ட ஆண்டி வைரஸ் உள்ளது. எனவே பாதுகாப்பு வளையங்களை மட்டும் அதிகப்படுத்தினால் போதாது. எச்சரிக்கையுடனும் கம்ப்யூட்டர்களைக் கையாள வேண்டும்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-55559608944775434552008-08-22T15:47:00.000-07:002008-08-22T15:55:26.654-07:00உங்களை நேரத்தில் துயில் எழுப்பஉங்கள் கம்ப்யூட்டருடன் உள்ள இன்டர்நெட் இணைப்பு நீக்கப்பட்டுவிட்டாலும் உங்களை எழுப்பும் அலாரம் தருவதுதான் KuKu Klok என்ற ஆன்லைன் அலாரம். இது http://kukuklok.com/  என்ற தளத்தில் கிடைக்கிறது.

இந்த தளம் சென்றவுடன் அதில் காட்டப்பட்டுள்ள டிஜிட்டல் கடிகாரத்தில் ப்ளஸ் அல்லது மைனஸ் அடையாளத்தில் கிளிக் செய்து நீங்கள் விரும்பும் நேரத்தை செட் செய்திடவும். அலாரத்திற்கான நேரம் செட் செய்யப்பட்டவுடன் உங்களுக்கு எந்த சத்தம் கொண்டு எழுப்ப என்பதனை செட் செய்திட வேண்டும். சேவல் கூவுவது, எலக்ட்ரானிக் கிடார் என நான்கு வகையான ஒலிகள் தரப்பட்டுள்ளன. இவை எப்படி இருக்கும் என சோதித்தும் பார்க்கலாம். இந்த இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் Set Alarm என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது அலாரம் ரெடி. உங்கள் இன்டர்நெட் இணைப் பினைத் துண்டித்து விட்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடித்து உங்களை எழுப்பிவிடும். அலாரம் செட் செய்த பின் Set Alarm பட்டன் Cancel பட்டனாக மாறிவிடும். எனவே நேரம் அல்லது அலாரம் ஒலியினை நீங்கள் மாற்ற வேண்டும் என எண்ணினால் மாற்றிவிடலாம். அலாரம் அடிக்கையில் இந்த பட்டன் Stop பட்டனாக மாறிவிடும். அலாரம் அடித்துக் கொண்டிருக்கையில் இதனை அழுத்தினால் அலாரம் அடிப்பது நின்றுவிடும். நான் மதியம் தூங்கும்போது, அடுப்பில் சிலவற்றை வைத்துவிட்டு சமையல் செய்கையில், வாஷிங் மெஷின் ஓடுகையில், நல்ல தூக்கம்மேற்கொள்கையில் எனப் பல விஷயங்களுக்கு இந்த அலாரத்தினைப் பயன்படுத்தி உள்ளேன். மிகவும் பயனுள்ள விஷயம் இது.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-34919655780239071812008-08-22T15:45:00.000-07:002008-08-22T15:47:27.327-07:00இலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகள்வைரஸ்களைத் தடுத்து நிறுத்தி அழித்திடும் தொகுப்புகள் இன்று கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டாயத் தேவையாய் ஆகிவிட்டன. ஆப்பரேட்டிங் சிஸ்டமும் பிரவுசர் தொகுப்பும் எத்தனை பாதுகாப்பாய் அமைக்கப்பட்டாலும் வைரஸ்களும் ஸ்பைவேர்களும் நாளுக்கு நாள் பெருகி கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு சவாலாய் உள்ளன.

எனவே தான் ஆண்டி வைரஸ்கள் பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை அப்டேட் செய்யப்பட வேண்டும் என்று இந்த பக்கங்களில் குறிப்புகள் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன. வாசகர்கள் பலர் இதற்கான தொகுப்புகளை விலை கொடுத்து வாங்கி ஆண்டு தோறும் அதனை மேம்படுத்த கட்டணம் செலுத்துவதும் இயலாததாய் உள்ளது என்றும் இலவசமாக கிடைக்கும் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளில் சிறந்தவை எவை என்று கேட்டு எழுதி வருகின்றனர். அவர்களுக்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. சைமாண்டெக், மேக் அபி, இசெட் மற்றும் மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் தொகுப்புகளை தயாரித்து வழங்குகின்றன. இவற்றில் சில அனைத்து வகை பாதுகாப்பையும் தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் தொடக்க கட்டணம் ரூ.4,000 லிருந்து ரூ. 7,000 வரை உள்ளன. இதனால் தான் பலரும் இலவச தொகுப்புகளை நாடுகின்றனர். இணையத்தில் பல தொகுப்புகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால் இலவசமாக ஆண்டி வைரஸ் தொகுப்பு தருகிறேன் என்று சொல்லி பல தளங்கள் வைரஸ்களையும் கம்ப்யூட்டர் செயல்பாட்டை முடக்கும் புரோகிராம்களையும் அனுப்பி கெடுதல் விளைவிக்கின்றன. இருப்பினும் சில ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் முற்றிலும் இலவசமாகவே பாதுகாப்பினைத் தருகின்றன. அவற்றில் சில பற்றிய குறிப்புகள்:

தொகுப்பு 1:

1. பெயர்: Avast! 4 Home EditIon
2. நிறுவனம் : ALWIL Software
3. பைல் அளவு: 26309 கேபி
4. கட்டணம் : இலவசம்
5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்
6.இணைய தள முகவரி :  http://files.avast. comiavs4prosetupeng.exe

இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகளை வழங்கி வருகிறது. பல நிறுவனங்கள் இதன் தொகுப்புகளை மாடலாகக் கொண்டு இதே போல இலவச புரோகிராம்களை வழங்கி வருகின்றன. 4 ஏணிட்ஞு உஞீடிtடிணிண என்பது அண்மைக் காலத்திய பதிப்பாகும். இதில் ஒரு இன்ஸ்டண்ட் மெசேஜ் ஸ்கேனர், இமெயில் ஸ்கேனர், வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் வளையம் மற்றும் அனைத்து பைல்களையும் ஸ்கேன் செய்திடும் ஸ்கேனர் தரப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு அவ்வப்போது உருவாகி வரும் வைரஸ்களுக்கு எதிராகத் தன்னை வளப்படுத்தி எதிர்த்து தொடர்ந்து பாதுகாப்பு வழங்குகிறது. இதனுடைய ஸ்கேனிங் செய்திடும் வேகமும் கூடுதலாகவே உள்ளது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முதலில் ஓர் ஆண்டிற்கு இலவசமாகப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். வெகு எளிதாகப் பதிந்து பெறும் வசதி தரப்பட்டுள்ளது.

தொகுப்பு 2:

1. பெயர்: Avast! AVG Antivirus 8 Free Edition
2. நிறுவனம் : Grisoft Inc
3. பைல் அளவு: 47924 kb
4. கட்டணம் : இலவசம்
5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்
6.இணைய தள முகவரி : http://www.goisoft.cz/filedir/inst/avg frestfen 8138a1332.எஷெ

பல ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பு இது. ஒரு சில அலுவலகங்களில் பணம் கட்டி வேறு ஆண்டி வைரஸ் தொகுப்பு வாங்கினாலும் கம்ப்யூட்டரை இயக்குபவர்கள் தங்களுக்கு இதுதான் வேண்டும் என்று ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொகுப்பைப் பயன்படுத்துகையில் ஓரளவிற்கே சிஸ்டம் தரும் மெமரியைப் பயன்படுத்துவதால் பிரச்னை எதுவும் இதன் இயக்கத்தால் ஏற்படுவதில்லை. பைல்களை ஸ்கேன் செய்வதில் இந்த தொகுப்பு காட்டும் வேகம் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலவசமாகவே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறந்த அம்சம். அதைப் போல இதன் அப்டேட்டுகளும் என்றைக்கும் இலவசமே.

தொகுப்பு 3:

1. பெயர்: Avira Anti Personal Edition
2. நிறுவனம் : Avira GmbH
3. பைல் அளவு: 24462 kb
4. கட்டணம் : இலவசம்
5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்
6.இணைய தள முகவரி : http://dl1.avgate.net/down/windows/antivirorkstation_win_en_h.exe

இந்த தொகுப்பிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். அவாஸ்ட் தொகுப்பு போல பல வகைகளில் இது வைரஸ் தொகுப்பிற்கு எதிரான பாதுகாப்பினை வழங்கி வருகிறது. பயன் படுத்துவோரை வழி நடத்த இந்த தொகுப்பு தரும் டயலாக் பாக்ஸ்கள் குறிப்பிடத் தக்கவையாகும். பைல்களை மிக வேகமாக ஸ்கேன் செய்கிறது. ஆனால் அடிக்கடி வரும் பாப் அப் விண்டோக்கள் சில சமயம் எரிச்சலைத் தருகின்றன. முழுவதும் என்றும் இலவசமாய் இயங்கும் தொகுப்பு இது. இணையத்தில் இன்னும் பல சிறந்த ஆண்டி வைரஸ் தொகுப்புகள் உள்ளன. வரும் காலத்திலும் நிறைய கிடைக்கலாம். ஆனாலும் எச்சரிக்கையுடன் புதிய தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். எனவே தான் சோதிக்கப்பட்டு பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான மூன்று தொகுப்புகள் குறித்த விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது. வாசகர்கள் இவற்றைப் பயன்படுத்தலாம்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-53497959665066438472008-08-22T15:42:00.000-07:002008-08-22T15:44:56.041-07:00வேர்ட் டிப்ஸ்வேர்டில் பாரா இன்டென்ட்

வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளிவிட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம்.

இதில் இன்டென்ட் மற்றும் ஹேங்கிங் இன்டென்ட் என்று வகைகள் உண்டு. இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு அமைப்பது. ஹேங்கிங் இன்டென்ட் என்பது முதல் வரி தவிர்த்து மற்ற வரிகளை இன்டென்ட் செய்து ஸ்பேஸ் விட்டு அமைப்பது. இதற்கு கீ போர்டில் இருந்து கைகளை எடுத்து பின் மவுஸ் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் கர்சரை வைத்து பின் மீண்டும் கீ போர்டு பயன்படுத்தி இன்டென்ட் அமைக்கிறோம். மவுஸ் இல்லாமல் கீ போர்டு மூலம் இன்டென்ட் அமைக்க கீழ்க் குறிப்பிட்டுள்ள கீகளைப் பயன்படுத்தவும்.

Ctrl + M கொடுத்தால் மொத்த பாராவும் அரை அங்குலம் நகர்ந்து கொடுக்கும். மேலும் அதிகம் நகர்ந்து செல்ல அடுத்தடுத்து கொடுக்கவும்.

Ctrl + Shift + M : கொடுத்தால் அரை அங்குலம் இன்டென்ட் இருப்பதைக் குறைக்கும். அதாவது ஏற்கனவே கொடுத்த இடைவெளியை முழு பாராவிற்கும் குறைக்கும்.

Ctrl + T : இந்த கீகள் ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்கு வலது புறமாக நகர்த்தும்.

Ctrl + Shift + T : ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்குக் குறைக்கும். கீ போர்டு மூலமாகவே இன்டென்ட் அமைப்பது எளிதாக உள்ளதா!

எனக்கு வேண்டாம் டிராயிங் கேன்வாஸ்

வேர்ட் தொகுப்பில் படம் ஒன்றினை இன்ஸெர்ட் செய்திட முயற்சிக்கையில் ஒரு டிராயிங் கேன்வாஸ் நமக்குக் காட்டப்படுகிறது. இந்த கேன்வாஸில் Create your drawing here என்று கிரே கலரில்ஒரு செய்தி காட்டப்படுகிறது. நாம் இங்கு படத்தை ஒட்டுகையில் அல்லது வரைய முற்படுகையில் பல வேளைகளில் இந்த கேன்வாஸுக்கு வெளியே படங்கள் செல்கின்றன. நாம் அவற்றை மீண்டும் இழுத்து அமைக்க வேண்டியுள்ளது. இது போன்ற கேன்வாஸ் இல்லை என்றால் நாம் நினைத்தபடி படத்தினை வரையலாம்; அல்லது ஒட்டலாம். ஆனால் இந்த கேன்வாஸ்வந்துவிடுகிறதே. என்ன செய்யலாம்? ஒன்றுமில்லை வேர்ட் தொகுப்பிடம் இந்த கேன்வாஸ் எல்லம் எனக்கு வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன் என்கிறபடி செட் செய்திட்டால் போதும். இதற்கு Tools மெனு சென்று Options பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் General என்னும் டேபைத் திறந்து கிடைக்கும் கட்டத்தில் “Automatically create drawing canvas when inserting AutoShapes” என்று இருக்கும் வரியின் முன்னால் டிக் செய்யபட்டிருந்தால் எடுத்துவிடவும். இனி மேல் நீங்களாக இதனை மாற்றும் வரை டிராயிங் கேன்வாஸ் வராது, வராது, வராது.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1133893192589262125.post-79980260365359786242008-08-22T15:40:00.000-07:002008-08-22T15:41:53.072-07:00ஒர்க் ஷீட்டில் வாட்டர் மார்க்ஒர்க் ஷீட் ஒன்றில் அதன் தன்மை பொறுத்து ஏதேனும் பெயர் ஒன்றினை வாட்டர் மார்க்காக அமைக்க விரும்பினால் அதற்கு எக்ஸெல் உதவிடும். எடுத்துக் காட்டாக ஏதேனும் நிறுவன நிதி நிலை குறித்து ஒர்க் ஷீட் ஒன்று தயாரிக்கலாம்.

அதில் “Confidential” என அமைக்க விரும்பலாம். அல்லது நிறுவனப் பெயரினையே அமைக்க விரும்பலாம். இதற்கான செட்டிங்ஸ் வழிகளைப் பார்க்கலாம்.

1.முதலில் ஏதேனும் ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் WordArt என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி வேர்ட் ஆர்ட் டூல்பாரில் Insert WordArt என்ற ஐகானைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

2. கிடைக்கும் வேர்ட் ஆர்ட் காலரியில் உங்களுக்குப் பிடித்த வேர்ட் ஆர்ட்டினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் அதனை எடிட் செய்திடும் விண்டோ கிடைத்திடும். டெக்ஸ்ட்டை நீங்கள் அமைக்க விரும்பும் சொல்லாக மாற்றவும். பின் பாண்ட் அதன் அளவு ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

3. இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த சொல் வேர்ட் ஆர்ட் படிவத்தில் ஒர்க் ஷீட்டில் கிடைக்கும். அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். Format WordArt என்பதைத் தேர்ந் தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில Colors and Lines என்ற டேபில் கிளிக் செய்திடவும். இதில் Fill என்ற பகுதியில் No Fill என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Line என்ற பிரிவில் மிகவும் வெளிறிப்போன வண்ணமாக இல்லாமல் ஓரளவிற்குத் தெரிகின்ற வண்ணமாகத் தேர்ந்தெடுக்கவும்.

4. மீண்டும் வேர்ட் ஆர்ட் மீது ரைட் கிளிக் செய்திடவும். வரும் மெனுவில் Order என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Send to Back என்பதில் கிளிக் செய்து மெனுவை மூடவும். 5. இப்போது வேர்ட் ஆர்ட்டில் உள்ள அந்த சொல்லை எந்த இடத்தில் எந்த கோணத்தில் வைத்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அதே போல் வைக்கவும். இந்த வேர்ட் ஆர்ட் சில செல்கள் மீது இடம் பெற்றிருந்தாலும் அந்த செல்களில் நீங்கள் உங்கள் தகவல்களை இடலாம். தகவல்கள் வேர்ட் ஆர்ட் மீதாக குறிப்பிட்ட செல்களில் அமையும். இப்போது ஒர்க் ஷீட்டில் நீங்கள் தேர்ந்தெடுத்து அமைத்த வாட்டர் மார்க் இடம் பெறும். இது அச்சிலும் தெரியவரும்.

எக்ஸெல் ஒர்க் ஷிட்டில் செல் ஒன்றில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளலாம். இதற்கான பார்முலாவினை அந்த செல்லுக்காய் அமைத்தால் போதும். எடுத்துக் காட்டாக A1 செல்லில் Do you have today’s Dinamalar? என டைப் செய்திடுங்கள். அதன் பின் கீழ்க்குறித்த பங்சனைப் பயன்படுத்தவும்.=IF(LEN(A1)=0,0,LEN(TRIM(A1))LEN(SUBSTITUTE(TRIM(A1),” “,””))+1) விடை 5 எனக் கிடைக்கும்.Murthyhttp://www.blogger.com/profile/11915603698478074041noreply@blogger.com0