Monday, April 21, 2008

எக்ஸெல் தேதியும் நேரமும்

எக்ஸெல் தேதிகளையும் நேரத்தையும் புரிந்து கொள்ள தனக்கென ஒரு பாணியை வைத்துள்ளது. அந்த முறையில் அமைக்கப்படும் தேதிகளை கூட்டி கழித்தும் பார்க்கலாம். எடுத்துக் காட்டாக ஒரு தேதியிலிருந்து இன்னொரு தேதி வரை எத்தனை நாட்கள் என்பதனைக் கணக்கிடலாம். இப்படியே நேரத்தையும் அளவிடலாம். எக்ஸெல் எப்படி இவற்றைப் பெற்றுக் கொள்கிறது எனப்பார்க்கலாம். நீங்கள் தேதியைத் தான் செல்லில் அமைக்கிறீர்கள் என்பதனை அறிய நாள் மற்றும் மாதத்தை வேறுபடுத்தி அறிய ஸ்லாஷ் அல்லது ஹைபன் (/ அல்லது –) பயன்படுத்த வேண்டும்.



எடுத்துக் காட்டாக

1/2 என்பது ஜனவரி 2. (நாள், மாதம் என்பதனை இந்திய வழக்கப்படி அமைய முதலிலேயே அவ்வாறு செட் செய்திட வேண்டும்) 1–2 என்றாலும் ஜனவரி 2 தான். நீங்கள் நாள் மற்றும் மாதம்

எக்ஸெல் அதனை அன்றைக்கு உள்ள ஆண்டின் கணக்கை எடுத்துக் கொள்கிறது. இங்கு அது 1–2– 08 என 2008 ஆம் ஆண்டை எடுத்துக் கொள்ளும். எக்ஸெல் தொகுப்பைப் பொறுத்தவரை 1–2/08 என்பதுவும் 1/2/08 என்பதுவும் ஒன்றுதான். தேதி மாதம் ஆண்டு குறிக்க / அல்லத – அமைப்பது போல நேரத்தைக் குறிக்க எக்ஸெல் கோலன் (:) அடையாளத்தை எடுத்துக் கொள்கிறது.


எடுத்துக் காட்டாக 3: என்று ஒரு செல்லில் அமைத்தால் அது 3:00:00 AM என எடுத்துக் கொள்ளும். நீங்கள் காலையா மாலையா எனக் குறிப்பிடாவிட்டால் எக்ஸெல் அதனை காலை என்றே எடுத்துக் கொள்ளும். காலை மாலை என்பதை எப்படிக் குறிப்பது? டைம் டைப் செய்தபின் ஒரு ஸ்பேஸ் விட்டு A அல்லது P என அமைக்க வேண்டும்.


எழுத்து சிறிய எழுத்தாகவோ அல்லது கேபிடல் லெட்டராகவோ இருக்கலாம். ஆனால் மணி மட்டும் அமைக்கக் கூடாது. உடன் ஏதேனும் நிமிடத்தைக் குறிப்பிட வேண்டும். எடுத்துக் காட்டாக 3: P என்பது நேரத்தைக் குறிக்காது. 3:1 P அல்லது 3:01 P என இருக்க வேண்டும்.

No comments: