சரியான அளவுகளில் டெக்ஸ்ட் மற்றும் படங்கள் பவர்பாய்ண்ட் ஷோவிற்கான ஸ்லைடுகளை அமைப்பதில் மிகச் சரியான அளவில் அழகாகத் தோற்ற மளிக்க வேண்டும் என எண்ணினால் உங்களுக்கு அதில் ரூலர்கள் தேவை. டெக்ஸ்ட், படங்கள், சார்ட்கள் மற்றும் போட்டோக்களை சரியான அளவெடுத்து ஸ்லைடுகளில் அமைக்க இந்த ரூலர்கள் உங்களுக்கு உதவும்.ரூலர் மட்டுமின்றி கைட் மற்றும் கிரிட்லைன் ஆகியவையும் இதில் அடங்கும்.
ஜியோமெட்ரி பாக்ஸ் டூல்ஸ் போல இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் இவற்றைப் பெற சில செட் அப் வழிகளை மேற்கொள்வோம்.
1. முதலில் ரூலர் பெறும் வழியைப் பார்ப்போம்.
2. “View” கிளிக் செய்து பின் “Ruler” என்பதைத் தேர்ந்தெடுத்தால் ரூலர் லைன் கிடைக்கும்.
அடுத்து இவற்றைச் சீர்படுத்தத் தேவையான சாதனங்களைப் பெற லாம். அடுத்ததாக “View” “Grid and Guides” கிளிக் செய்திடவும். ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Snap objects to grid” என்ற பிரிவின் முன் டிக் அடையாளம் ஏற்ப டுத்தவும். இதனால் ஸ்லைடில் பயன் படுத்தப்படும்ஆப்ஜெக்ட்களை சரியாக வைத்திடுமாறு பவர்பாய்ண்ட்டுக்கு கட்டளையினை ஏற்படுத்துகிறீர்கள். வைக்கப்படும் ஆப்ஜெக்ட்ஸ் ஒன்றுக்கொன்று அருகே இணையாக இருக்க வேண்டும் என்றால் “Snap objects to other objects” என்ற வரியின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இந்த கிரிட் கட்டங்களுக்கு இடையே சிறிது இடைவெளி வேண்டும் அல்லவா? இது எவ்வளவு இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கலாம். லைன் ஸ்பேஸ் செட் செய்வது போல் செட் செய்திடலாம்.
“Spacing” என்பதில் கிளிக் செய்தால் சிறிய மெனு கிடைக்கும். இதில் லைன் ஸ்பேஸ் தேர்ந்தெடுக்கவும். இந்த கட்டங்கள் எப்படி அமைந்துள்ளன என்பதனைத் திரையில் பார்க்க “Display grid on screen” என்பதில் டிக் செய்திடவும். இன்னும் உங்களுக்கு உதவிட, காட்சியைச் செம்மையாக அமைத்திட “Display drawing guides on screen” என்பதில் டிக் செய்திடவும். இனி நீங்கள் ஸ்லைடுகளை அமைக்கையில் திரையில் ஒவ்வொரு ஆப்ஜெக்ட்டும் எந்த அளவில் எங்கு இடம் பெறுகின்றன என்று உங்களுக்குக் காட்டப்படும். உங்கள் கற்பனை வளத்திற்கேற்ற வகையில் அவற்றைத் திருத்தி அமைத்து சூப்பர் பிரசன்டேஷனை நீங்கள் அமைக்கலாம்.
பவர் பாய்ண்ட்டில் ஆப்ஜெக்ட் செலக்ஷன்:பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றைத் தயார் செய்து எடிட் செய்து கொண்டிருக் கிறீர்கள். பல ஆப்ஜெக்டுகள் ஒவ்வொரு ஸ்லைடிலும் உள்ளன. இவற்றைத் தேர்ந்தெடுக்க என்ன செய்வீர்கள். வழக்கம்போல ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஒவ்வொரு ஆப்ஜெக்டாகச் சென்று மவுஸால் கிளிக் செய்வீர்கள். இடையே ஷிப்ட் கீயை விட்டுவிட்டால் மறுபடியும் முதலிலிருந்து தொடங்க வேண்டும். இதெல்லாம் வேண்டாம். ஒரே கீயில் அனைத்து ஆப்ஜெக்டுகளையும் செலக்ட் செய்திடலாம்.
டெஸ்க் டாப் திரையில் உள்ள ஐகான்களை செலக்ட் செய்திட என்ன செய்கிறீர்கள். மவுஸால் ஒரு செவ்வக வடிவில் கர்சரை இழுக்கிறீர்கள். இந்த செவ்வகக் கட்டத்தில் மாட்டும் ஐகான்கள் எல்லாம் செலக்ட் செய்யப்படுகிறதல்லவா? அதே போல் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைடிலும் ஒரு நாள் செய்து பார்த்தேன். ஆஹா! அதே போல ஆப்ஜெக்டுகள் அனைத்தும் செலக்ட் ஆயின. எவ்வளவு எளிது பார்த்தீர்களா! நீங்கள் இன்று சோதித்துப் பார்த்துவிடுங்களேன்.
No comments:
Post a Comment