விண்டோஸ் டாஸ்க் பாரில் நாம் கேட்காமலேயே வந்து அமர்ந்து கொள்ளும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று ஸ்டார்ட் பட்டன். இது இல்லாமல் நாம் வேலை பார்க்க முடியாது. இன்னொன்று வலது ஓரத்தில் இயங்கும் கடிகாரம். கடிகாரத்தை நாம் நீக்க முடியும். பலர் இதைத் தேவை எனக் கருதினாலும் சிலர் “இது எதற்கு? நமக்குத் தான் கடிகாரம் வேறு வழிகளில் இருக்கிறதே“ என எண்ணுகின்றனர். இவர்களுக்காக கடிகாரத்தினை மறைக்கும் வழி இங்கே தரப்படுகிறது.
1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸால் வலது புறத்தைக் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில் “Properties” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இதில் Taskbar and Start Menu Properties என்ற பல டேப்கள் அடங்கிய மெனு கிடைக்கையில் அதில் “Taskbar” என்ற டேபைக் கிளிக் செய்திடவும்.
3. இதில் “Notification area” என்று ஒரு இடம் இருக்கும். இதில் என்று “Show the clock” உள்ள இடத்திற்கு எதிரே உள்ள கட்டத்தின் டிக் அடையாளத்தை மவுஸால் கிளிக் செய்து எடுத்துவிட்டுப் பின் ஓகே கிளிக் செய்து மூடவும். கடிகாரம் மீண்டும் வேண்டும் என்றால் பழையபடி அதே இடம் சென்று கட்டத்தில் டிக் மார்க் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
No comments:
Post a Comment