Monday, April 21, 2008

பொருளடக்கம் தயாரிக்கும் முறை

வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்தி ஆவணம் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள். அதன் பொருள் குறித்து பொருளடக்கம் (Table of Contents) ஒன்றைத் தயாரிக்க எண்ணுகிறீர்கள். இதற்கு ஒவ்வொரு வரியாகச் சென்று பொருள் குறித்த வார்த்தைகளைத் தயார் செய்து பின் பொருளடக்கத்திற்கெனத் தனியாக டைப் செய்திடத் தேவையில்லை. தேவையைக் குறிப்பிட்டு விட்டால் வேர்ட் தொகுப்பு தானாகவே இந்த பொருளடக்கத்தினைத் தயாரித்து வழங்கும்.




முதலில் எந்த வரிகளில் உள்ள சொற்கள் உங்கள் பொருளடக்கத்தில் வரவேண்டும் என்பதனை முடிவு செய்து அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் பாண்ட்ஸ் புல் டவுணை அடுத்து இருக்கும் இடத்தில் கர்சரை வைத்து மெனுவைப் பெறவும். பின் பொருளடக்கத்தில் மெயினாக வரவேண்டிய சொற்களை Header என்பதற்கு மாற்றவும். துணைத் தலைப்புகளை Header 2 2 என்பதற்கு மாற்றவும். இப்போது எங்கு உங்களுக்கு பொருளடக்க அட்டவணை வேண்டுமோ அங்கு கர்சரை வைத்துக் கொண்டு பின்“Insert” மற்றும் “Index and Tables” என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்களுடன் வரும் டயலாக் பாக்ஸில் “Table of Contents” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதிலேயே கொடுத்துள்ள வசதிகளைப் பயன்படுத்தி பக்க எண்கள் வேண்டுமா என்பதனையும் முடிவு செய்து பின் ஓகே கிளிக் செய்திடவும். பின் பொருளடக்க அட்டவணை கிடைக்கும். அதன்பின் ஆவணத்தில் மாற்றங்கள் செய்தால் எந்த பீல்டை அப்டேட் செய்திட வேண்டுமோ அதில் கர்சரை வைத்துக் கொண்டு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Update Field” என்பதனைக் கிளிக் செய்துவிடவும்.

No comments: