Monday, April 21, 2008

ஆட்டோ டெக்ஸ்ட் தயாரிக்கலாம்

ஆவணம் ஒன்றை வேர்ட் தொகுப்பில் தயாரித்துக் கொண்டிருக்கையில் ஒரு குறிப்பிட்ட சொல் தொகுதி அல்லது நீளமான பெயரினை அடிக்கடி டைப் செய்திட வேண்டி உள்ளது. எடுத்துக் காட்டாக கடைப் பெயராக Parameswari Automobiles, Chinnalapatti என அடிக்கடி டைப் செய்வதாக வைத்துக் கொள் வோம்.



ஒவ்வொரு முறையும் இதனை அடிக்காமல் ஒரு சில கீகளின் சேர்க்கையிலேயே இந்த பெயர் முழுவதும் வர ஆட்டோ டெக்ஸ்ட் பட்டியலில் இதனை அமைத்திடலாம். இதற்கு ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரி செய்திட வேண்டும்.


ஒரு முறை செய்துவிட்டால் பின் இந்த நீள பெயருக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு சில கீகள் இந்த பெயரைத் தரவா என்று கேட்கும். இந்த ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரியை எப்படி மேற்கொள்கிறீர்கள்? Insert மெனு சென்று அதில் AutoText என்ற துணை மெனுவைத் தேர்ந்தெடுத்து பின் அதில் ஆட்டோ டெக்ஸ்ட் விண்டோவில் நீங்கள் தர வேண்டிய நீளப் பெயரைத் தருகிறீர்கள். நீங்கள் ஆட்டோ டெக்ஸ்ட் விண்டோ வில் இருக்கையில் “Show AutoComplete suggestions” என்பதற்கு எதிரே உள்ள கட்டத் தில் டிக் அடையாளம் உள்ளதா என்பதனை ஒரு முறைக்கு இரு முறை உறுதிப்படுத்தவும். இந்த வழிமுறை உங்களுக்கு ஆட்டோ கம்ப்ளீட் வசதியைத் தரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த டெக்ஸ்ட்டை என்டர் செய்து ஆட்டோ டெக்ஸ்ட் அமைப்பது சிறிது சுற்றுவேலை இல்லையா? இந்த மெனு மற்றும் சப்மெனு இல்லாமல் ஆட்டோ டெக்ஸ்ட் அமைத்திட முடியாதா? என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.


அதற்கான வழி:– முதலில் எந்த டெக்ஸ்ட்டை ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரிக்குக் கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுத்து ஹை லைட் செய்திடவும். டெக்ஸ்ட் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் போதே ALT + F3 கீகளை அழுத்தவும். இப்போது Create AutoText window என்ற விண்டோ திறக்கப்படும். இந்த விண்டோ வில் ஹைலைட் செய்யப்பட்ட டெக்ஸ்ட் இருக்கும். நீங்கள் மிகப் பெரிய சொல் தொகுதியை எடுத்திருந்தால் அதில் ஓரிரு சொற்களும், சிறியதாக இருந்தாலும் முழுவதுமாக இந்த விண்டோவில் தெரியும்.



உங்களுக்குக் காட்டப்படும் சொற்கள் சரியானதாகத் தென்பட்டால் ஓகே டிக் செய்து வெளியேறவும். அடுத்து இந்த டெக்ஸ்ட்டின் ஓரிரு எழுத்துக்களை டைப் செய்திடுகையிலேயே டெக்ஸ்ட் முழுவதும் காட்டப் பட்டு இந்த டெக்ஸ்ட் வேண்டு மென்றால் என்டர் தட்டுக என்ற செய்தி காட்டப்படும். நீங்கள் முழுவதுமாக டைப் செய்திடாமல் என்டர் தட்டிவிட்டுப் பின் தொடர்ந்து மற்ற சொல் தொகுதிகளை டைப் செய்து கொண்டு போய்க் கொண்டே இருக்கலாம். மெனு, சப் மெனு என்றில்லாமல் ஆட்டோ டெக்ஸ்ட் ரெடி.

No comments: