Monday, April 21, 2008

அவுட்லுக் எக்ஸ்பிரஸின் நியூஸ்குரூப் வசதிகள்

அவுட்லுக் எக்ஸ்பிரஸின் நியூஸ்குரூப் வசதிகள்

கலந்துரையாடல் குழுக்களில் உள்ள கட்டுரைகளைப் பெறவும், நம் கட்டுரைகளை அந்தக் குழுக்களுக்கு அனுப்பவும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் உதவுகிறது. மேலும் அந்த அப்ளிகேஷனில் அளிக்கப்படும் வசதிகளைப் பார்ப்போமா?
  • நாம் கட்டுரைகள் அடங்கிய பட்டியலையும், தேர்வு செய்யப்பட்ட கட்டுரையில் காணப்படும் தகவல்களையும் ஒரே நேரத்தில் பார்வையிடமுடியும். நியூஸ் செர்வர்களின் பெயர்களும் அவற்றின் குழுக்களின் பெயர்களும் அந்த சட்டத்திலேயே காணப்படுவதால் ஒரு செர்வரில் இருந்து அல்லது ஒரு குழுவில் இருந்து மற்றொன்றிற்கு எளிதாக மாற்றி செயல்படுத்திட முடியும்.
  • குறிப்பிட்ட கட்டுரைகளின் பொருளடக்கங்களையும் மட்டும் பார்வையிட்டு அவற்றில் எது பிடித்திருக்கின்றதோ அதனை மட்டும் டவுன்லோடு செய்து விரிவாகப்படித்து தெரிந்து கொள்ளலாம்.
  • இன்டர்நெட்டில் உள்ள கம்ப்யூட்டரை இணைத்து, பின்பு கட்டுரைகளை ஒவ்வொன்றாய் பார்ப்பதால் நாம் இன்டர்நெட் பயன்படுத்திடும் நேரம் வீணாகிறது. இதற்குப் பதில் கட்டுரைகளை டவுன்லோடு செய்து முடித்தவுடன் இன்டர்நெட் இணைப்பைத் துண்டித்து கட்டுரைகளைப் படிக்கலாம்.
  • ஒரு நியூஸ் செர்வர் போதாத நிலை ஏற்பட்டால் பல நியூஸ் செர்வர்களைக் கையாளும்படி அவுட்லுக் எக்ஸ்பிரஸை கான்ஃபிகர் செய்யலாம். இதனால் பல நியூஸ் செர்வர்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான குழுக்களில் காணப்படும் கட்டுரைகளை நீங்கள் படிக்கமுடியும். உங்கள் கட்டுரைகளையும் அவற்றிற்கு அனுப்பலாம்.
  • ஒரு நியூஸ் செர்வரில் காணப்படும் பல்லாயிரக்கணக்கான நியூஸ்குரூப்புகளில் நமக்கு வேண்டியதைத் தேடிக்கண்டு பிடிப்பது மிகக்கடினம். ஆனால் அவுட்லுக் எக்ஸ்பிரஸில் நியூஸ்குரூப்புகளை எளிதாகத் தேடலாம். நாம் விருப்பப்படும் நியூஸ்குரூப்புகளில் உறுப்பினராகலாம்.

No comments: