Monday, April 28, 2008
எக்ஸெல் - குறிப்புகள்!
இதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் எழுத்து வகையினை நிலைத்த எழுத்தாக அமைப்பதுதான். இதனை செட் செய்திடக் கீழ்க்காணும்படி அமைத்திடுங்கள்.
1. “Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “General” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது கிடைக்கும் விண்டோவில் “Standard font” என்பதற்கு நேர் எதிராக பாண்ட் மற்றும் சைஸ் விண்டோ இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் எழுத்துவகையினைத் தேர்ந்தெடுத்து மற்றும் அதற்கான அளவினையும் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து விண்டோக் களை மூடவும். இனி எப்போது எக்ஸெல் ஒர்க் ஷீட்டைத் திறந்தாலும் காலி இடத்தில் இந்த பாண்ட் தான் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கும்.
எக்ஸெல் : வரிசைகளைத் தேர்ந்தெடுக்க எக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளை (Column, Row) முழுமையாகத் தேர்ந்தெடுக்க அந்த வரிசையில் கர்சரை வைத்து கீழாகவோ அல்லது பக்க வாட்டிலோ கர்சரை இழுத்து ஹைலைட் செய்கிறீர்கள் அல்லவா? இந்த இழுபறி வேலையை இரண்டு கீகள் எளிதாக்குகின்றன. எந்த நெட்டுவரிசையினை (இணிடூதட்ண) ஹைலைட் செய்திட வேண்டுமோ அல்லது தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதில் உள்ள செல்கள் ஒன்றில் கர்சரை வைத்துப் பின் கண்ட்ரோல் கீயுடன் ஸ்பேஸ் பாரினை Ctrl + Spacebar அழுத்தவும். இப்போது அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்படும். இதே போல படுக்கை வரிசையில் ஹைலைட் செய்திட Shift + Spacebar அழுத்தவும்.
அதிக ஒர்க் ஷீட்டுடன் எக்ஸெல் திறக்க:எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றினைத் திறக்கையில் அது மூன்று ஒர்க் ஷீட்கள் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். பலர் இதுவே போதும் என்று பயன்படுத்துவார்கள். சிலர் ஒரு ஒர்க்ஷீட்டிலேயே தங்கள் பணியை முடித்துக் கொள்வார்கள். சிலருக்கு அதிக எண்ணிக்கையில் ஒர்க் ஷீட் தேவையாய் இருக்கும். இன்ஸெர்ட் மெனு சென்று ஒர்க் ஷீட் எண்ணிக்கையை ஒவ்வொரு முறையும் கூட்டிக் கொள்வார்கள். இதற்குப் பதிலாக அதிக எண்ணிக்கையில் ஒர்க் ஷீட்களுடன் ஒர்க் புக் திறக்கும்படி அமைத்திடலாம். இதற்கு Tools மெனு சென்று அதில் Options பிரிவில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபினைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவினைப் பார்க்கவும்.
இதில் இரண்டாவது பிரிவில் முதலாவதாக Sheets in New Workbook என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் 3 என்ற எண் இருக்கும். இதன் மீது கர்சரைக் கொண்டு சென்று உங்களுக்குத் தேவையான ஒர்க் ஷீட் எண்ணிக்கை எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்திடலாம். அல்லது அருகே உள்ள சிறிய அம்புக் குறிகளை மேல் கீழாக அழுத்தி எண்ணிக்கையை அதிகப் படுத்தலாம்; அல்லது குறைக் கலாம். செய்து முடித்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை ஒர்க் ஷீட் வேண்டு மென்று செட் செய்தீர்களோ அத்தனை ஒர்க் ஷீட்களுடன் புதிய ஒர்க் புக் திறக்கப்படும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், புதிய ஒர்க் புக் தான் இந்த மாற்றங்களோடு கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வைத்திருக்கும் ஒர்க் புக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படாது.
செல்களை நகர்த்த: எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றை நகர்த்துவது மிக எளிது. அப்படியே இழுத்துச் சென்று விடும் வசதி இங்கு தரப்பட்டுள்ளது. எந்த செல்லை அப்படியே அதன் மதிப்புடன் மாற்றி இன்னொரு இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த செல்லின் பார்டரில் எங்காவது கிளிக் செய்திடவும். இதில் அந்த செல்லின் கீழாக வலது மூலையில் கிடைக்கும் Fill Handlez தவிர்க்கவும். கிளிக் செய்த பின் மவுஸின் இடது பக்கத்தை அழுத்தியவாறே செல்லை இழுத்துச் செல்லவும். இவ்வாறு இழுத்துச் செல்கையில் பாய்ண்ட்டர் எந்த செல்லின் மீது செல்கிறதோ அந்த செல்லின் முகவரி, எந்த ரோ மற்றும் காலம் என்ற தகவல், சிறிய செய்தியாக மிதக்கும் பெட்டியில் காட்டப்படும். ஒர்க் ஷீட் முழுவதும் கூட நீங்கள் இதனை இழுத்துச் செல்லலாம். பின் எங்கு இதனை அமைக்க வேண்டுமோ அந்த செல் இடம் கிடைத்தவுடன் மவுஸை விட்டுவிட்டால் புதிய இடத்தில் செல் அமைந்துவிடும்.
பவர் பாய்ண்ட்- டிப்ஸ்
ஜியோமெட்ரி பாக்ஸ் டூல்ஸ் போல இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் இவற்றைப் பெற சில செட் அப் வழிகளை மேற்கொள்வோம்.
1. முதலில் ரூலர் பெறும் வழியைப் பார்ப்போம்.
2. “View” கிளிக் செய்து பின் “Ruler” என்பதைத் தேர்ந்தெடுத்தால் ரூலர் லைன் கிடைக்கும்.
அடுத்து இவற்றைச் சீர்படுத்தத் தேவையான சாதனங்களைப் பெற லாம். அடுத்ததாக “View” “Grid and Guides” கிளிக் செய்திடவும். ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Snap objects to grid” என்ற பிரிவின் முன் டிக் அடையாளம் ஏற்ப டுத்தவும். இதனால் ஸ்லைடில் பயன் படுத்தப்படும்ஆப்ஜெக்ட்களை சரியாக வைத்திடுமாறு பவர்பாய்ண்ட்டுக்கு கட்டளையினை ஏற்படுத்துகிறீர்கள். வைக்கப்படும் ஆப்ஜெக்ட்ஸ் ஒன்றுக்கொன்று அருகே இணையாக இருக்க வேண்டும் என்றால் “Snap objects to other objects” என்ற வரியின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இந்த கிரிட் கட்டங்களுக்கு இடையே சிறிது இடைவெளி வேண்டும் அல்லவா? இது எவ்வளவு இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கலாம். லைன் ஸ்பேஸ் செட் செய்வது போல் செட் செய்திடலாம்.
“Spacing” என்பதில் கிளிக் செய்தால் சிறிய மெனு கிடைக்கும். இதில் லைன் ஸ்பேஸ் தேர்ந்தெடுக்கவும். இந்த கட்டங்கள் எப்படி அமைந்துள்ளன என்பதனைத் திரையில் பார்க்க “Display grid on screen” என்பதில் டிக் செய்திடவும். இன்னும் உங்களுக்கு உதவிட, காட்சியைச் செம்மையாக அமைத்திட “Display drawing guides on screen” என்பதில் டிக் செய்திடவும். இனி நீங்கள் ஸ்லைடுகளை அமைக்கையில் திரையில் ஒவ்வொரு ஆப்ஜெக்ட்டும் எந்த அளவில் எங்கு இடம் பெறுகின்றன என்று உங்களுக்குக் காட்டப்படும். உங்கள் கற்பனை வளத்திற்கேற்ற வகையில் அவற்றைத் திருத்தி அமைத்து சூப்பர் பிரசன்டேஷனை நீங்கள் அமைக்கலாம்.
பவர் பாய்ண்ட்டில் ஆப்ஜெக்ட் செலக்ஷன்:பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றைத் தயார் செய்து எடிட் செய்து கொண்டிருக் கிறீர்கள். பல ஆப்ஜெக்டுகள் ஒவ்வொரு ஸ்லைடிலும் உள்ளன. இவற்றைத் தேர்ந்தெடுக்க என்ன செய்வீர்கள். வழக்கம்போல ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஒவ்வொரு ஆப்ஜெக்டாகச் சென்று மவுஸால் கிளிக் செய்வீர்கள். இடையே ஷிப்ட் கீயை விட்டுவிட்டால் மறுபடியும் முதலிலிருந்து தொடங்க வேண்டும். இதெல்லாம் வேண்டாம். ஒரே கீயில் அனைத்து ஆப்ஜெக்டுகளையும் செலக்ட் செய்திடலாம்.
டெஸ்க் டாப் திரையில் உள்ள ஐகான்களை செலக்ட் செய்திட என்ன செய்கிறீர்கள். மவுஸால் ஒரு செவ்வக வடிவில் கர்சரை இழுக்கிறீர்கள். இந்த செவ்வகக் கட்டத்தில் மாட்டும் ஐகான்கள் எல்லாம் செலக்ட் செய்யப்படுகிறதல்லவா? அதே போல் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைடிலும் ஒரு நாள் செய்து பார்த்தேன். ஆஹா! அதே போல ஆப்ஜெக்டுகள் அனைத்தும் செலக்ட் ஆயின. எவ்வளவு எளிது பார்த்தீர்களா! நீங்கள் இன்று சோதித்துப் பார்த்துவிடுங்களேன்.
Sunday, April 27, 2008
மைக்ரோசாப்ட் - பெயிண்ட்
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தொகுப்புடன் இணைந்து தரப்படும் எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம் சிறுவர்களும் பெரியவர் களும் மகிழ்ச்சியாகப் பயன்படுத்தும் புரோகிராம் ஆகும். நம் இஷ்டப்படி, கற்பனைப்படி பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம். புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள் தரப்படுகின்றன. எம்.எஸ்.பெயிண்ட் என்பது இலவசமாகத் தரப்படும் கிராபிக்ஸ் புரோகிராம் ஆகும். படங்களை எடிட் செய்திட, அளவை மாற்றிட, பெரிதாக் கிப் பார்க்க, படத்தில் டெக்ஸ்ட் அமைக்க, சிறிய சிறிய அளவுகளில் விரும்பும் உருவத்தை அமைக்க, அமைத்த உருவங்களில் வண்ணத்தைப் பூசிப் பார்த்து மகிழ என படம் சம்பந்தமான எத்தனையோ வேலைகளை இதில் மேற்கொள்ளலாம். படங்களின் பார்மட்டுகளை இதன் மூலம் மாற்றவும் முடியும். இதனை இயக்க Start menu >> All Programs > Accessories > Paint எனச் செல்லவும். பெயிண்ட் புரோகிராம் திறக்கப்பட்டவுடன் மேலாகவும் இடது புறமாகவும் மற்றும் கீழாகவும் பல டூல் பார்கள் இருப்பதனைக் காணலாம். இவை எல்லாம் படங்களைக் கையாள நாம் பயன்படுத்தலாம். இவற்றை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் View மெனு சென்று Tool Box, Color Box மற்றும் Status Bar அனைத்தும் டிக் செய்யப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும்.
இல்லை என்றால் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அனைத்து டூல் பார்களும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த டூல் பார்கள் எதற்கு என்று தெரிய வேண் டும் என்றால் அந்த ஐகானில் மவுஸின் கர்சரை சிறிது நேரம் வைத்தால் அதன் வேலை என்ன என்று காட்டப்படும். | |
அடுத்து புதிய படம் ஒன்றை எப்படி வரைவது எனப் பார்ப்போம். File > New என்பதைக் கிளிக் செய்திடவும். படம் வரைவதற்கான கேன்வாஸ் அகலம் நீளம் உங்களுக்கு போதாது என்று எண்ணுகிறீர்களா? Image > Attributes செல்லவும். இதில் உங்கள் கேன்வாஸின் அளவை நீட்டிக்கலாம்; சுருக்கலாம். கீழேயிருக்கும் கலர் பாக்ஸில் ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் படம் ஒன்றை வரையலாம்.
இடது பக்கம் இருக்கும் டூல் பாக்ஸ் உங்களுக்கு படம் வரைய அனைத்து வகைகளிலும் உதவும். எடுத்துக் காட்டாக உங்கள் படத்தில் சிறிய செவ்வகக் கட்டம் வேண்டுமா? Rectangle tool என்னும் டூலைத் தேர்ந்தெடுத்து கேன்வாஸில் மவுஸால் இழுத்தால் ஒரு செவ்வகக் கட்டம் கிடைக்கும். இது நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கலரில் கிடைக்கும். இனி இன் னொரு வண்ணத்தைத் தேர்ந் தெடுத்து பின் Fill With Colour பட்டனைத் தேர்ந்தெடுங்கள்.
இனி நீங்கள் ஏற்கனவே வரைந்த கட்டத் தில் எங்கு வேண்டு மானாலும் மவுஸால் கிளிக் செய்திடுங்கள். தேர்ந்தெடுத்த வண்ணத்தால் கட்டம் நிறைவடையும். இதே போல இடது பக்கம் உள்ள டூல் பாக்ஸில் கிடைக்கும் கோடு, வளை கோடு, வளைவு உள்ள செவ்வகம் என அனைத்து டூல்களையும் பரிசோதித்து பார்த்து தேவையான சாதனத்தைப் பயன்படுத்தி படம் வரையுங்கள். தவறாக ஏதேனும் செய்துவிட்டால் எரேசர் என்னும் அழி ரப்பர் படத்தை ஒரு முறை கிளிக் செய்துவிட்டு நீக்க வேண் டியதை நீக்கி விடலாம். அப்படியா! என்று ஆச்சரியப் படாதீர்கள். செய்து பாருங்கள்.
மீசை வைக்கலாம். இது போல வேடிக் கையான செயல்களையும் சீரிய ஸான செயல் களையும் இதில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள பட பைலை இதில் திறக்க File > Open என்ற மெனு மூலம் அந்த படம் உள்ள டைரக்டரி சென்று பட பைலின் பெயர் மீதுகிளிக் செய்து இங்கு திறக் கலாம். ஏற்கனவே உள்ள கேன் வாஸில் ஒரு படத்தை அமைக்க Edit > Paste From என்ற மெனு மூலம் மேற் கொள்ளலாம். படத்தின் அமைப் பை மாற்ற Image > Stretch/Skew என்பதைப் பயன் படுத்தலாம். Image மெனு வில் Flip/Rotate பயன் படுத்தி படங்களைச் சுழட்டலாம். உங்களின் விருப்பப்படி படத் தை அமைத்துவிட்டீர்களா? சேவ் கட்டளை மூலம் படத்தை சேவ் செய்திடுங்கள். சேவ் செய் திடுகை யில் படத்தை எந்த பார்மட்டில் சேவ் செய்திட வேண்டும் என்பத னை முடிவு செய்து அந்த பார் மட்டைத் (..BMP, .JPEG, அல்லது .GIF) தேர்ந்தெ டுத்து சேவ் செய்திடுங்கள். பின் இதனை பிரிண்ட் செய்திட வேண்டு மென்றால் வழக்கம்போல் பிரிண்ட் செய்திடலாம். அதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ மூலம் படம் எப் படி அச்சில் கிடைக்கும் என்பத னையும் பார்த்துக் கொள்ளலாம். | |
Monday, April 21, 2008
அவுட்லுக் எக்ஸ்பிரஸின் நியூஸ்குரூப் வசதிகள்
அவுட்லுக் எக்ஸ்பிரஸின் நியூஸ்குரூப் வசதிகள்
கலந்துரையாடல் குழுக்களில் உள்ள கட்டுரைகளைப் பெறவும், நம் கட்டுரைகளை அந்தக் குழுக்களுக்கு அனுப்பவும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் உதவுகிறது. மேலும் அந்த அப்ளிகேஷனில் அளிக்கப்படும் வசதிகளைப் பார்ப்போமா?
|
பவர் பாயிண்ட்!
பவர் பாயிண்ட்
எம்.எஸ் ஆபிஸில் பல அலுவலக தொகுப்பு மென்பொருட்கள் தொகுக்கப்பட்டுள்ளது. அணைவரும் அறிந்ததே இவற்றில் எந்த ஒரு அலுவலக மென்பொருளிலும் இல்லாத சிறப்பான மென்பொருள் என பவர்பாய்ண்டை குறிப்பிடலாம். பவர்பாய்ண்ட் இல்லாமல் எந்த ஒரு அலுவலக நிகழ்ச்சியோ, கருத்தரங்கமோ அல்லது விவாதமோ இல்லை என்று கூறலாம். மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பில் அனிமேஷன் எபெக்ட்ஸ்கள், ஒலி அமைப்புகள் மற்றும் கண்ணைக் கவரும் கிராபிக்ஸ் காட்சிகளை உள்ளடக்கிய சாஃப்ட்வேராக பவர் பாயிண்ட் விளங்குகிறது. இதில் ப்ரசன்டேஷன் பணிகளை மிக எளிமையாக செய்ய முடியும். |
அனிமேஷன் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட டெக்ஸ்டின் மேல் மவுஸ் சென்றால் அதற்கு ஒலி அமைப்புகளை கொடுத்துக் கொள்ள முடியும். பவர் பாயிண்ட் உள்ளேயே நிறைய சவுண்டு ஃபைல்கள் உள்ளது. புதிதாக ஏதேனும் சவுண்டு ஃபைலை சேர்க்க வேண்டுமென்றால் இம்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்தி சவுண்டு ஃபைலை சேர்த்துக் கொள்ள முடியும். |
ஒரு நிறுவனம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, அதன் படிப்படியான வளர்ச்சி, அதில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள், அதன் தற்போதைய நிலவரம் போன்ற அனைத்து விபரங்களையும் பவர்பாயிண்டில் மிக எளிமையாகவும், கண்ணைக்கவரும் ஒலி, ஒளி அமைப்புடன் அழகாக செய்யலாம். இதில் உள்ள ஆட்டோ கன்டன்ட் விசார்டில் பல வகையான லேஅவுட் அமைப்புகள் இருக்கும். இதில் நமக்கு பிடித்தமான லேஅவுட்டை தேர்வு செய்து டைப் செய்து அதற்கு ஏதேனும் எபெக்ட்ஸை கொடுக்கலாம். |
எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் கூடுதலாக இதில் சேர்த்துக் கொள்ளலாம். டைப் செய்த டெக்ஸ்டிற்கு கலர் கொடுத்த பிறகு இங்குள்ள விதவிதமான அனிமேஷன் ஆப்ஷன்களை பயன்படுத்தி டெக்ஸ்டை அனிமேட் செய்யலாம். |
பவர் பாயிண்ட்டின் உள்ளேயே பல வகைகளில் கிளிப் ஆர்ட்கள் உள்ளது. டெக்ஸ்டிற்கு ஏற்றவாறு அதை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக கிளிப் ஆர்ட்களை பயன்படுத்த வேண்டுமென்றால் இம்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம். |
இதில் உள்ள ஸ்லைடு ஷோ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து அதில் உள்ள வியூ ஷோ என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் ஃபுல் ஸ்கிரின் மோடுக்கு நாம் செய்த பணிகள் வந்து விடும். ஒவ்வொரு முறை மவுஸின் மூலம் கிளிக் செய்து அடுத்தடுத்த பக்கத்திற்கு போகலாம். ஸ்லைடு ஷோவை F5 கீயை அழுத்தியும் விரைவாக இயக்க முடியும். பவர் பாயிண்டில் சேமிக்கப்படும் ஃபைல்கள் .ppt என்ற ஃபார்மெட்டில் சேமிக்கப்படும் |
அவுட்லுக் எக்ஸ்பிரஸின் சிறப்பு வசதிகள்
அவுட்லுக் எக்ஸ்பிரஸ்
சில எளிய பயன்பாடுகள்: மைக்ரோசாஃப்ட்டின் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தும் எல்லா பயனாளர்களுக்கும் மிகப் பெரிய கொடையாக உள்ளது. . இதன் சிறப்பான வசதிகள் சிறந்த பயன்பாட்டு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் இதன் சில பயன்பாடுகள் பயனாளருக்கு எளிதாக புரிவதில்லை அல்லது பயனாளருக்கு அதனை புரிந்து கொள்ளுமளவிற்கு நேரம் கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு எளிய முறையில் அவுட்லுக் எக்ஸ்பிரஸை பயன்படுத்த சில எளிதான வழிமுறைகளை நாம் காண்போம்.1. தேதிகளை எளிதாக டைப் செய்ய... ஏதேனும் ஒரு புதிய டாஸ்கை உருவாக்க விரும்புவோர் அதன் தொடக்க இறுதி நாட்களை உள்ளிட முழுவதுமாக டைப் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் குறிப்பிட வேண்டிய தேதி தற்போதைய மாதத்திலேயே இருந்தால் நாளை மட்டும் டைப் செய்தால் அவுட்லுக்கே மற்ற விவரங்களை சேர்த்து விடும். அதாவது மார்ச் மாதத்தில் இருக்கும் போது நீங்கள் 25 என்று தட்டச்சு செய்கிறீர்கள் என்றால் அவுட்லுக் எக்ஸ்பிரஸானது தானாகவே அதனை மார்ச் 25 என்று புரிந்து கொள்ளும். மேலும் தற்போதைய மாதத்தில் இல்லாத நாட்களில் உள்ளவற்றை டைப் செய்ய வேண்டுமென்றாலும் அதிலும் ஒரு எளிதான வழியை கொண்டுள்ளது அதாவது குறிப்பிட்ட நாளையும், மாதத்தையும் குறிப்பிட்டால் வருடத்தை தானாக அவுட்லுக் எக்ஸ்பிரஸே சேர்த்து கொண்டுவிடும். நீங்கள் பயன்படுத்திய நாள் குறிப்பிட்ட வருடத்தில் ஏற்கனவே முடிந்திருந்தால் மறு வருடத்தையும் இல்லாவிட்டால் இதே வருடத்தையும் எடுத்துக் கொள்ளும். 2. அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை சிறப்பாக சேமித்து வையுங்கள் நாம் எப்போதெல்லாம் ஒரு மின்னஞ்சலுக்கு பதில் அனுப்புகிறோமோ அந்த மின்னஞ்சல்கள் 'செண்ட் மெயில்' (அனுப்பப்பட்ட அஞ்சல்கள்) என்ற ஃபோல்டரில் சேமிக்கப் படுகின்றன. இவ்வாறு சேமிக்கப்படுவதிலிருந்து ஏதெனும் ஒரு குறிப்பிட்ட தகவலை தேடி எடுக்க முற்படுவது மிகவும் சிரமமான காரியமாகும். எடுத்துகாட்டாக ஒருவர் தனக்கு வரும் மின்னஞ்சல்களை ஒரு குறிப்பிட்ட ஒரு ஃபோல்டருக்குள் சேமிக்கிறார் எனக்கொள்வோம். அதே போல் அந்த மின்னஞ்சல்களுக்கு இவர் அனுப்பும் பதில்களையும் அதே ஃபோல்டரில் சேமிக்க விரும்புகிறார் என்றால் அதற்கு அவர் செய்ய வேண்டிய படிகள். (i) "டூல்ஸ்" மெனுவிலிருந்து "ஆப்ஷன்ஸ்" என்ற மெனுவை தேர்வு செய்யவும். (ii) அதில் "பிரஃபரன்ஸஸ்" என்ற பிரிவிலிருந்து "ஈ-மெயில் ஆப்ஷன்ஸ்" என்ற பிரிவை தேர்ந்தெடுக்கவும். (iii) அதில் மெசெஜ் ஹாண்டலிங் செக்ஷன் என்ற பிரிவில் அட்வான்ஸ்ட் ஈ-மெயில் ஆப்ஷன்ஸ் என்பதை தேர்வு செய்யவும். (iv) பின் ஸேவ் மெசெஜஸ் என்ற பிரிவில் "ஸேவ் ரிப்ளைஸ் வித் த ஒரிஜினல் மெசெஜ்" என்ற பெட்டியை கிளிக் செய்யவும். இதன் பின்னால் அவுட்லுக்கானது நீங்கள் உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்ற எல்லா ஃபோல்டர்களுக்கும் இதே அமைப்பை பின்பற்றும். 3. குறிப்பிட்ட அனுப்புனர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை கண்டறியுங்கள். குறிப்பிட்ட சிலரிடமிருந்து வரக்கூடிய மின்னஞ்சல்களை மட்டும் சில வண்ணங்களை அந்த மின்னஞ்சல்களுக்கு தருவதன் மூலம் கண்டறிய முடியும். முதலில் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு உரியவரிடமிருந்து வந்த ஏதேனும் ஒரு மின்னஞ்சலை தேர்வு செய்க. அவ்வாறு ஏதுமில்லையென்றால் முகவரியை தட்டச்சு செய்வதன் மூலம் தொடங்கலாம். முதலில் டூல்ஸ் மெனுவிலிருந்து "ஆர்கனைஸ்" என்பதை தேர்வு செய்யவும். அதில் "ஆர்கனைஸ் மெயில்" எனும் பிரிவில் கலர்ஸ் எனும் தொடர்பை தேர்வு செய்யவும். "கண்டிஷனல் ஸ்டேட்மெண்ட்" என்ற பிரிவில் "ஃப்ரம்" என்பதை தேர்வு செய்யவும். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு செய்தியை தேர்வு செய்திருந்தால் அந்த செய்திக்குரியவரின் பெயர் "ஃப்ரம்" லிஸ்டில் காட்டப்படும். தேவையான பெயரைத் தேர்வு செய்த பின்இரண்டாவது லிஸ்டில் இருந்து தேவையான நிறத்தை தேர்ந்தெடுக்கவும்.இறுதியாக "அப்ளை கலர்" என்பதை கிளிக் செய்யவும். இதன் பின்னால் நீங்கள் தேர்வு செய்த மின்னஞ்சல் முகவரியிடமிருந்து ஏற்கனவே வந்துள்ள, வரக்கூடிய மின்னஞ்சல்கள் எல்லாமும் நீங்கள் தேர்வு செய்த நிறத்தில் காட்டப்படும். 4. யுனிக்கோட்-ல் மின்னஞ்சல் அனுப்புவதற்கான வழிகள் முதலில் நீங்கள் யாருக்காவது மின்னஞ்சல் அனுப்புவதற்கான மின்னஞ்சலை தட்டச்சு செய்யும்போது, ஃபார்மெட் --> என்கோடிங் என்பதை தேர்வு செய்யவும். அதில் UTF-8 என்பதை எனேபிள் செய்து விட்டு யுனிக்கோடில் தட்டச்சு செய்து அனுப்பினால் அந்த தகவல் சரியாக யுனிக்கோடில் அனுப்பப் பட்டுவிடும். அவ்வாறு செய்யாவிட்டாலும் தகவலை அனுப்பும் போது கீழே காணுமாறு ஒரு விண்டோ திறக்கும். இதில் "send as unicode" என்பதை தேர்வு செய்தால் தகவலானது யுனிகோடில் அனுப்பப்பட்டு விடும். சிறப்பு வசதிகள்: ஈ-மெயில்களை அனுப்பவும், பெறவும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் உதவுவது அனைவரும் அறிந்ததே. இதைத்தவிர அவுட்லுக் எக்ஸ்பிரஸில் என்னென்ன சிறப்புகள் உள்ளதென பார்ப்போமா?
|
கம்ப்யூட்டர் பாகங்களின் ஒரு அறிமுகம்
CPUவில் எல்லா பாகங்களும் இணைக்கப்படும் அடிப்படையான சர்க்யூட் போர்டு. எல்லாவற்றிற்கும் தாய். தாயைப் போலவே ஊமையாக உழைக்க வேண்டும். கம்ப்யூட்டர் தலைமைச் செயலகமான ப்ராஸஸர், பல்வேறு ப்ரோக்ராம்களை ஒரே சமயத்தில் திறக்க உதவும் மெமரி ஆகியவை இதன் மடியில் தான் தாலாட்டப்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரைக் குறிப்பிடும் போது ப்ராஸஸர், ராம், ஹார்ட் டிஸ்க் பற்றியெல்லாம் பெருமையாக குறிப்பிடுவீர்கள். ஆனால் மதர் போர்டு?
மைக்ரோ ப்ராஸஸர்:
சுருக்கமாகச் சொன்னால் அரசன். முக்கியமான கணக்குகளைத் தானே போட்டு, எல்லாப் பாகங்களுக்கும் ஆணைகள் இட்டு செய்து முடிப்பவன்.
மெமரி (RAM):
ஓடிக்கொண்டிருக்கும் எல்லா ப்ரோக்ராம்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும். அரசன் ஆணையிடும் போது தகவல்கள் அனுப்பும் மந்திரி.
ஹார்ட் டிஸ்க்:
கருவூலம் அல்லது நூலகம் என்று சொல்லலாம். இன்றைய விண்டோஸ் யுகத்தில் ஹார்ட் டிஸ்க் இல்லாத கம்ப்யூட்டர் வைத்திருப்பவரை காதலி கூட சீண்ட மாட்டாள்! இதன் ஞாபகக் கொள்ளளவு ஒவ்வொரு இரண்டு வருடங்களில் இரட்டிப்பாவதாக கூறப்பட்டாலும். தற்போது அதைவிட வேகமாக கூடுவதாகத் தோன்றுகிறது.
கம்ப்யூட்டரில் உள்ள எல்லாப் ப்ரொக்ராம்களும் இந்த நூலகத்தில் தான் வைக்கப்படுகின்றது.
ப்ளாப்பி ட்ரைவ்:
ரொம்ப நாளாக (வருடங்களாக) கம்ப்யூட்டரில் மாறாமல் இருக்கும் ஒரே பாகம். உங்கள் கணக்குகளை கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாப்பியில் நகலெடுத்து பையில் வைத்துக் கொண்டு போகலாம். எல்லாக் கம்ப்யூட்டரிலும் போடும்படியாக இருக்க வேண்டும் என்பதால் இது மாறவே இல்லை. ஆனால் தற்போதைய அளவில் இதன் ஞாபகச் சக்தி மிகவும் குறைவு.
இதற்கு மாற்றாக 100MB கொள்ளளவு கொண்ட ஜிப் ட்ரைவ், MO டிஸ்க் ட்ரைவ் போன்றவை சந்தையில் இருந்தாலும் விலை அதிகமென்பதால் வீட்டு உபயோகத்திற்கு அதிகமாக வரவில்லை.
சிடி ட்ரைவ்:
ப்ளாப்பிக்கு கிட்டத்தட்ட சீப்பான மாற்றாக சிடி வந்துள்ளது. சாதாரண சிடி 675MB வரை கொள்ளும், விலையும் மிகக் குறைவு. வீட்டில் உபயோகிக்கும் சிடி ட்ரைவ்கள் சிடி-ரோம் ட்ரைவ்கள், அதாவது சிடியைப் படிக்க மட்டுமே முடியும் எழுத முடியாது. சிடியும் கூட ஒரு முறை எழுதினால் அழித்து எழுத முடியாது. ஆகவே ப்ரோக்ராம்களை விற்க வசதியான சாதனமாக உள்ளது. சினிமாக்களால் சிடியை அனைவரும் தற்போது அறிந்துள்ளனர்.
சிடி-ரோம் மட்டுமல்ல CD-W, CD-RW போன்ற வகைகளும் உள்ளன. CD-W(rite) ட்ரைவ் சிடியை எழுத உபயோகிக்கலாம். CD-RW (Rewrite) ட்ரைவில் சிடியை அழித்து மீண்டும் எழுதலாம். இதில் உபயோகிக்கும் சிடி சற்று வித்தியாசமானது, ஆனால் சாதாரண சிடி-ரோம் ட்ரைவில் உபயோகிக்க முடியும்.
மோடம்:
கம்ப்யூட்டரை டெலிபோனுடன் இணைக்கும் சாதனம். இதில் மற்ற பேக்ஸ் சாதனங்களுக்கு கம்ப்யூட்டரிலுள்ள பக்கங்களை பேக்ஸாக அனுப்பவும், பேக்ஸ் சாதனங்கள் அனுப்பும் பக்கத்தை பெறவும் முடியும். இண்டர்நெட் வீட்டிற்கு வரும் வழி.
ஆட்டோ டெக்ஸ்ட் தயாரிக்கலாம்
ஒவ்வொரு முறையும் இதனை அடிக்காமல் ஒரு சில கீகளின் சேர்க்கையிலேயே இந்த பெயர் முழுவதும் வர ஆட்டோ டெக்ஸ்ட் பட்டியலில் இதனை அமைத்திடலாம். இதற்கு ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரி செய்திட வேண்டும்.
ஒரு முறை செய்துவிட்டால் பின் இந்த நீள பெயருக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு சில கீகள் இந்த பெயரைத் தரவா என்று கேட்கும். இந்த ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரியை எப்படி மேற்கொள்கிறீர்கள்? Insert மெனு சென்று அதில் AutoText என்ற துணை மெனுவைத் தேர்ந்தெடுத்து பின் அதில் ஆட்டோ டெக்ஸ்ட் விண்டோவில் நீங்கள் தர வேண்டிய நீளப் பெயரைத் தருகிறீர்கள். நீங்கள் ஆட்டோ டெக்ஸ்ட் விண்டோ வில் இருக்கையில் “Show AutoComplete suggestions” என்பதற்கு எதிரே உள்ள கட்டத் தில் டிக் அடையாளம் உள்ளதா என்பதனை ஒரு முறைக்கு இரு முறை உறுதிப்படுத்தவும். இந்த வழிமுறை உங்களுக்கு ஆட்டோ கம்ப்ளீட் வசதியைத் தரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த டெக்ஸ்ட்டை என்டர் செய்து ஆட்டோ டெக்ஸ்ட் அமைப்பது சிறிது சுற்றுவேலை இல்லையா? இந்த மெனு மற்றும் சப்மெனு இல்லாமல் ஆட்டோ டெக்ஸ்ட் அமைத்திட முடியாதா? என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.
அதற்கான வழி:– முதலில் எந்த டெக்ஸ்ட்டை ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரிக்குக் கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுத்து ஹை லைட் செய்திடவும். டெக்ஸ்ட் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் போதே ALT + F3 கீகளை அழுத்தவும். இப்போது Create AutoText window என்ற விண்டோ திறக்கப்படும். இந்த விண்டோ வில் ஹைலைட் செய்யப்பட்ட டெக்ஸ்ட் இருக்கும். நீங்கள் மிகப் பெரிய சொல் தொகுதியை எடுத்திருந்தால் அதில் ஓரிரு சொற்களும், சிறியதாக இருந்தாலும் முழுவதுமாக இந்த விண்டோவில் தெரியும்.
உங்களுக்குக் காட்டப்படும் சொற்கள் சரியானதாகத் தென்பட்டால் ஓகே டிக் செய்து வெளியேறவும். அடுத்து இந்த டெக்ஸ்ட்டின் ஓரிரு எழுத்துக்களை டைப் செய்திடுகையிலேயே டெக்ஸ்ட் முழுவதும் காட்டப் பட்டு இந்த டெக்ஸ்ட் வேண்டு மென்றால் என்டர் தட்டுக என்ற செய்தி காட்டப்படும். நீங்கள் முழுவதுமாக டைப் செய்திடாமல் என்டர் தட்டிவிட்டுப் பின் தொடர்ந்து மற்ற சொல் தொகுதிகளை டைப் செய்து கொண்டு போய்க் கொண்டே இருக்கலாம். மெனு, சப் மெனு என்றில்லாமல் ஆட்டோ டெக்ஸ்ட் ரெடி.
பொருளடக்கம் தயாரிக்கும் முறை
முதலில் எந்த வரிகளில் உள்ள சொற்கள் உங்கள் பொருளடக்கத்தில் வரவேண்டும் என்பதனை முடிவு செய்து அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் பாண்ட்ஸ் புல் டவுணை அடுத்து இருக்கும் இடத்தில் கர்சரை வைத்து மெனுவைப் பெறவும். பின் பொருளடக்கத்தில் மெயினாக வரவேண்டிய சொற்களை Header என்பதற்கு மாற்றவும். துணைத் தலைப்புகளை Header 2 2 என்பதற்கு மாற்றவும். இப்போது எங்கு உங்களுக்கு பொருளடக்க அட்டவணை வேண்டுமோ அங்கு கர்சரை வைத்துக் கொண்டு பின்“Insert” மற்றும் “Index and Tables” என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்களுடன் வரும் டயலாக் பாக்ஸில் “Table of Contents” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதிலேயே கொடுத்துள்ள வசதிகளைப் பயன்படுத்தி பக்க எண்கள் வேண்டுமா என்பதனையும் முடிவு செய்து பின் ஓகே கிளிக் செய்திடவும். பின் பொருளடக்க அட்டவணை கிடைக்கும். அதன்பின் ஆவணத்தில் மாற்றங்கள் செய்தால் எந்த பீல்டை அப்டேட் செய்திட வேண்டுமோ அதில் கர்சரை வைத்துக் கொண்டு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Update Field” என்பதனைக் கிளிக் செய்துவிடவும்.
டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்
உங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு அ மற்றும் ஆ எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் அ மற்றும் ஆ எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.
1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும். (குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)
2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.
3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.
4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.
5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.
1.Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.
2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.
3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.
6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.
ஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.
1.Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.
2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.
3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்
அழிக்க முடியாத பைல்கள்
பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.
சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம். எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.
1. முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.
இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது. டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!
கடிகாரத்தை நீக்க முடியுமா?
1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸால் வலது புறத்தைக் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில் “Properties” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இதில் Taskbar and Start Menu Properties என்ற பல டேப்கள் அடங்கிய மெனு கிடைக்கையில் அதில் “Taskbar” என்ற டேபைக் கிளிக் செய்திடவும்.
3. இதில் “Notification area” என்று ஒரு இடம் இருக்கும். இதில் என்று “Show the clock” உள்ள இடத்திற்கு எதிரே உள்ள கட்டத்தின் டிக் அடையாளத்தை மவுஸால் கிளிக் செய்து எடுத்துவிட்டுப் பின் ஓகே கிளிக் செய்து மூடவும். கடிகாரம் மீண்டும் வேண்டும் என்றால் பழையபடி அதே இடம் சென்று கட்டத்தில் டிக் மார்க் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
எக்ஸெல் தேதியும் நேரமும்
எடுத்துக் காட்டாக
1/2 என்பது ஜனவரி 2. (நாள், மாதம் என்பதனை இந்திய வழக்கப்படி அமைய முதலிலேயே அவ்வாறு செட் செய்திட வேண்டும்) 1–2 என்றாலும் ஜனவரி 2 தான். நீங்கள் நாள் மற்றும் மாதம்
எக்ஸெல் அதனை அன்றைக்கு உள்ள ஆண்டின் கணக்கை எடுத்துக் கொள்கிறது. இங்கு அது 1–2– 08 என 2008 ஆம் ஆண்டை எடுத்துக் கொள்ளும். எக்ஸெல் தொகுப்பைப் பொறுத்தவரை 1–2/08 என்பதுவும் 1/2/08 என்பதுவும் ஒன்றுதான். தேதி மாதம் ஆண்டு குறிக்க / அல்லத – அமைப்பது போல நேரத்தைக் குறிக்க எக்ஸெல் கோலன் (:) அடையாளத்தை எடுத்துக் கொள்கிறது.
எடுத்துக் காட்டாக 3: என்று ஒரு செல்லில் அமைத்தால் அது 3:00:00 AM என எடுத்துக் கொள்ளும். நீங்கள் காலையா மாலையா எனக் குறிப்பிடாவிட்டால் எக்ஸெல் அதனை காலை என்றே எடுத்துக் கொள்ளும். காலை மாலை என்பதை எப்படிக் குறிப்பது? டைம் டைப் செய்தபின் ஒரு ஸ்பேஸ் விட்டு A அல்லது P என அமைக்க வேண்டும்.
எழுத்து சிறிய எழுத்தாகவோ அல்லது கேபிடல் லெட்டராகவோ இருக்கலாம். ஆனால் மணி மட்டும் அமைக்கக் கூடாது. உடன் ஏதேனும் நிமிடத்தைக் குறிப்பிட வேண்டும். எடுத்துக் காட்டாக 3: P என்பது நேரத்தைக் குறிக்காது. 3:1 P அல்லது 3:01 P என இருக்க வேண்டும்.