Friday, June 13, 2008

நீங்கள் விரும்பும் வண்ணங்கள்


விண் டோஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பக்கங்களை நீங்கள் விரும்பும் வகையிலான எழுத்துக்களிலும் வண்ணங்களிலும் அமைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிகள் இதோ:

1. முதலில் ஸ்டார்ட் கண்ட்ரோல் பேனல் (Start, Control Panel) சென்று கண்ட் ரோல் பேனலைத் திறக்கவும்.

2.டிஸ்பிளே (Display) ஐகானில் டபுள் கிளிக் செய்திடவும். (இதற்கு கிளாசிக் வியூவில் உங்கள் கண்ட்ரோல் பேனல் இருக்க வேண்டும்)

3. Display Properties விண்டோவில் Appearance டேப் சென்று அதில் Advanced பட்டனில் கிளிக் செய்திடவும்.

4. Advanced Appearance விண்டோவில் Item என்ற கீழ் விரியும் மெனுவில் கிளிக் செய்து பட்டியலில் Window என்பதில் கிளிக் செய்திடவும்.

5. Color1 பாக்ஸ் என்பது பேக்ரவுண்ட் கலர். Color பாக்ஸ் என்பது டெக்ஸ்ட் கலர். இந்த பாக்ஸ்களில் கிளிக் செய்து நீங்கள் விரும்பும் கலரைத் தேர்ந்தெடுத்து செட் செய்யலாம்.

6. தேர்ந்தெடுத்து முடித்த பின் அட்வான்ஸ்டு அப்பியரன்ஸ் விண்டோவில் ஓகே கிளிக் செய்து மூடி பின் டிஸ்பிளே புராபர்ட்டீஸ் விண்டோவிற்கும் ஓகே கிளிக் செய்து மூடவும். இனி கம்ப்யூட்டரில் எந்த போல்டர் சென்றாலும் நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணங்களில் விண்டோவும் எழுத்துக்களும் அமைந்திருப்பதனைக் காணலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலமாக நீங்கள் பார்க்கும் அனைத்து எச்.டி.எம்.எல். பக்கங்களும் இதே போல நீங்கள் விரும்பும் வண்ணங்களில் அமைந்திட வேண்டும் என்றால் இந்த ஆப்ஷனை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் ஏற்படுத்த வேண்டும்.

7. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோ ஒன்றைத் திறந்து Tools Internet Options சென்று அதில் Accessibility Options கிளிக் செய்திடவும்.

8. Accessibility விண்டோவில் Formatting பிரிவில் உங்களுக்குப் பிடித்த வகையில் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து டிக் செய்திடுங்கள். பின் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இணைய தளப் பக்கங்கள் நீங்கள் செட் செய்தபடியான வண்ணங்களில் அமைந்திருக்கும்.

இன்டர்நெட் தள பக்கங்கள் விண்டோவிற்கென அமைத்த வண்ணங்களில் அல்லாமல் வேறு வண்ணங்களில் அமைந் திட வேண்டும் என விரும்பினால் இதனை இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் விண்டோ பெற்று அமைத்திட வேண்டும்.

9.இதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோ ஒன்றைத் திறந்து Tools Internet Options செல்லவும்.

10. இதில் Colors பட்டனை அழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் தேவையான கலரைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். பக்கங்களுக்கென ஒரு கலரையும் அதில் கிடைக்கும் லிங்க்குகளுக்கென ஒரு கலரையும் செட் செய்திடலாம்.

11. அடுத்து Fonts என்ற பட்டனை அழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் நீங்கள் விரும்பும் எழுத்து வகையினை அமைக்கலாம். இதன் மூலம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பக்கங்கள் நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணங்களிலான எழுத்துவகையில் காட்டப்படும். இது போல உங்கள் மனதிற்குப் பிடித்த வண்ணங்களில் விண்டோக்கள், அதில் சொற்கள், இணைய தளப் பக்கங்கள் ஆகியவற்றை அமைத்துவிட்டால் உங்கள் கம்ப்யூட்டர் புதிய ஒன்றாகக் காட்சி அளிக்கும். உங்களுக்கும் மனதிற்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

No comments: