Friday, June 13, 2008
எக்ஸெல் டிப்ஸ்... டிப்ஸ்...
உங்கள் எக்ஸெல் ஒர்க் புக்கில் குழப்பமான வகையில் பார்முலாக்களைப் பயன்படுத்துகிறீர்களா? அதாவது ஒரு பார்முலாவின் முடிவை ஒரு செல்லுக்குக் கொண்டு சென்று பின் அந்த முடிவினை இன்னொரு பார்முலாவில் பயன்படுத்தும் வகையில் பார்முலா எழுதிப் பின் அந்த முடிவினையும் இதே போல இன்னொரு பார்முலாவில் இணைத்து என சிலந்தி வலை போல பார்முலாக்களை இணைக் கிறீர்களா! இதனால் சில வேளைகளில் பல இடியாப்பச் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு.
ஏதேனும் ஒரு செல்லில் டேட்டாவினைத் தவறாக அமைத்துவிட்டால் தவறு எங்கே ஏற்படுகிறது என்று நாம் கண்டறிய முடியாது. எந்த செல்லில் உள்ள பார்முலா இந்த தவறான தகவலைத் தருகிறது என்று எப்படி அறிந்து கொள்வது? எந்த எந்த செல் பார்முலா இதில் இணைந்து ள்ளது என நாம் ஒரு காட்சியாகவே காணும் வாய்ப்பினை எக்ஸெல் தருகிறது. இதற்கு ஒரு சில சரியான பட்டன்களைக் கிளிக் செய்தால் போதும். இதற்கு View மெனு சென்று அதில் Toolbars என்னும் மெனுவினைப் பெறவும்.
அதில் உள்ள பிரிவுகளில் Formula Auditing என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது எக்ஸெல் பார்முலாக்களை எப்படி இணைத்துள்ளது என்பதனை நமக்குக் காட்டுமாறு செய்திடும் வழிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு Trace Precedents என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இது இடதுபுறத்தில் இரண்டாவது பட்டனாக இருக்கும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள செல்லுக்கு எந்த எந்த செல் பார்முலாக்கள் முடிவினை அளிக்கின்றன என்பது அம்புக்குறிகளால் காட்டப்படும்.
அடுத்து அதே பட்டனை இரண்டாவது முறையாகக் கிளிக் செய்திடவும். இப்போது Remove Precedent Arrows என்று உள்ள பட்டனில் கிளிக் செய்தால் எவ்வகையான தொடர்பில் பார்முலாக்கள் உள்ளனவோ அவ்வரிசையில் ஒவ்வொன்றாக அம்புக்குறிகள் மறையும். ஒவ்வொரு முறை கிளிக் செய்திடுகையில் ஒரு அம்புக் குறி மறையும். இதிலிருந்து எந்த செல் பார்முலாவிலிருந்து நாம் தேர்ந்தெடுத்த செல்லிற்கு டேட்டா வந்தது என அறியலாம். அடுத்தபடியாக உள்ள Trace Dependents என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் உள்ள மதிப்பை அடிப்படியாகக் கொண்டு எந்த எந்த செல்களுக்கான பார்முலாக்கள் செயல்படுகின்றன என்பதனை யும் காணலாம்.
எனவே இங்கு குறிப்பிட்ட செல்லுக்கு எப்படி மதிப்பு வருகிறது என்பதற்கு மாறாக இந்த செல்லின் மதிப்பு எந்த எந்த செல்லின் மதிப்பை மாற்றுகிறது என அறியலாம். இந்த தடங்கள் அனைத்தையும் தோற்றத்திலிருந்து எடுத்துவிட Remove Dependent Arrows button என்ற பட்டனை கிளிக் செய்திடவும். இதற்குப் பதிலாக Remove All Arrows button என்ற பட்டனையும் கிளிக் செய்திடலாம். இந்த வழிகள் நமக்கு நாம் அமைத்த பார்முலாக்கள் சரியாகச் செயல்படுகின்றனவா என்று காட்சி வடிவில் காட்டுவது நாம் தவறு ஏதேனும் செய்திருந்தால் திருத்திக் கொள்ள உதவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment