Friday, June 6, 2008

விண்டோஸ் மீடியா பிளேயர் பாடல்களை அழிப்பது எப்படி?


பாடல்கள் கேட்கவும் ஆடல்களை ரசிக்கவும் விண்டோஸ் மீடியா பிளேயர் மிக அருமையான ஒரு புரோகிராம். இதனால் இந்த புரோகிராமில் வீட்டில் அல்லது அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் பிளே லிஸ்ட்டை உருவாக்கி அதில் ஆடல், பாடல் பைல்களை சேவ் செய்து வைக்கிறார்கள்.

சில நாட்கள் அல்லது மாதங்கள் சென்ற பின் பாடல் காட்சிகள் புளித்துப் போக அவற்றை அழிக்க எண்ணுகிறார்கள். ஆனால் வழி தெரியாமல் நீக்க முடியாமல் விட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கான குறிப்புகள் இதோ:


1. முதலில் விண்டோஸ் மீடியா பிளேயரைத் திறக்கவும். விண்டோஸ் மீடியா பிளேயரை உங்கள் ஆடியோ வீடியோ பைல்களுக்கான டிபால்ட் புரோகிராமாக அமைத்திருந்தால் எந்த ஆடியோ அல்லது வீடியோ பைல்களை டபுள் கிளிக் செய்தால் உடனே விண்டோஸ் மீடியா பிளேயர் திறக்கும். அல்லது ஏற்கனவே விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் ஒன்றினை டெஸ்க்டாப்பில் அமைத்திருந்தால் அதில் கிளிக் செய்தாலும் திறக்கும். இல்லை எனில் ஸ்டார்ட் கிளிக் செய்து பின் ஆல் புரோகிராம்ஸ் தேர்ந்தெடுத்து அதில் அக்செசரீஸ், என்டர்டெய்ன்மென்ட் கிளிக் செய்து வரும் மெனுவில் விண்டோஸ் மீடியா பிளேயர் என்பதில் கிளிக் செய்திடலாம். சரி, இப்போது விண்டோஸ் மீடியா பிளேயரைத் திறந்துவிட்டீர்கள்.

2. அடுத்ததாக உஙக்ள் கம்ப்யூட்டர் ஸ்கிரீனின் இடது பக்கம் “Library” என்றிருப்பதில் கிளிக் செய்து அதனைத் திறக்கவும். அடுத்து மியூசிக் ஆர்ட்டிஸ்ட், பாடல்கள், ஆல்பம் தலைப்பு அல்லது இவற்றின் பட்டியல் காட்டப்படும்.

3. அடுத்து எந்த பாடல் அல்லது ஆடல் பைலை அழிக்க எண்ணுகிறீர்களோ அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை அழிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கலாம். பைல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கீ போர்டில் உள்ள டெலீட் கீயினை அழுத்தவும். இந்த பைலை அழிக்கவா? என்று ஒரு உறுதி செய்யும் விண்டோ கேள்வியுடன் தோன்றும்.

பொதுவாக மியூசிக் பாடல்கள் லைப்ரரியிலும் மை மியூசிக் போல்டரிலும் சேவ் செய்து வைக்கப்பட்டிருக்கும். எனவே உங்களை அறியாமல் ஏதேனும் பைலை அழித்துவிட்டால் மீண்டும் அந்த பைலை பதிய வேண்டியதிருக்கும். எனவே நீங்கள் அழிக்க எண்ணும் பாடல் அதுதானா என்று உறுதி செய்து கொண்டு அழிக்கவும். உங்கள் ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்திட திட்டமிட்டால் இந்த பாடல்களை இன்னொரு மீடியாவில் சேவ் செய்தபின் ரீ பார்மட் செய்திடலாம்.

No comments: