Friday, June 13, 2008
இணையத்தில் கிடைக்கும் இலவச நூல்கள்
எலக்ட்ரானிக் புக் என்று சொல்லக் கூடிய இ–புக் நூல்கள் மாணவர்களிடமும் விஷயங்களை அறிந்து கொள்ள விரும்பும் மற்றவர்களிடமும் பிரபலமாகி வருகின்றன. இ–புக் படிப்பதில் என்ன லாபம் என்றால் இவற்றில் பெரும்பாலானவை இலவசமாகக் கிடைக்கின்றன.
சிடிக்களில் பதிந்து எடுத்துச் செல்வது எளிது. அதிலேயே குறிப்புகளையும் எழுதி வைக்கலாம். பல நூல்களில் உள்ள ஒரே விஷயத்தைத் தொகுத்து வைத்து படிக்கலாம்.
நமக்குத் தேவையான பக்கங்களை மட்டும் பிரிண்ட் எடுத்து படிக்கலாம். ஒரு சில பக்கங்களுக்காக ஒரு புத்தகத்தையே விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை. எத்தனை ஆண்டுகளானாலும் இந்த நூல்கள் கிழியவோ அழியவோ போவதில்லை. யாரும் வாங்கிச் சென்று திருப்பித் தரவில்லை என்ற பிரச்னையும் இல்லை. எளிதாக ஒரு பென் டிரைவில் காப்பி செய்து எடுத்துச் செல்லலாம். மேலும் இன்னொருவருக்கு இமெயில் மூலமாக அனுப்பவும் செய்திடலாம். இணையத்தில் பல இடங்களில் இத்தகைய நூல்கள் கிடைக்கின்றன.
அவற்றில் கீழ்க்காணும் மூன்று தளங்கள் சிறப்பாக இயங்குகின்றன. முதல் தளம் www.freeebooks.net. இதில் உள்ள நூல்களில் எத்தனை நூல்களை வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டிய உதவியினைத் தந்து தேவையான பொருளில் உள்ள நூல்களைக் காட்டுகிறது. அடுத்த தளம் www.ebooklobby.com இந்த தளத்தில் நூல்கள் வகைப்படுத்தப்படுள்ளன. வர்த்தகம், கலை, கம்ப்யூட்டிங், கல்வியியல் என அத்தனை பிரிவுகளிலும் நூல்கள் உள்ளன. எந்த வகையில் நூல்களைத் தேடுகிறீர்களோ அதனை கிளிக் செய்து உங்களுக்கான நூல்களை எடுக்கலாம், படிக்கலாம்.
www.getfreeebooks.com இதுவும் இலவசமாக நூல்களைத் தரும் தளம். எத்தனை நூல்களை வேண்டுமானாலும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இணையம் முழுவதும் தேடிப் பார்த்து அனைத்து இ புக்குகளையும் இங்கு வெளியிட்டுள்ளனர். சில நூல்களை அவர்களே தயாரித்து வழங்குகின்றனர். நீங்கள் சிறப்பானது என்று எண்ணும் இ-புக் இந்த தளத்தில் இல்லையா? இந்த தளத்தின் அட்மினிஸ்ட்ரேட்டருக்கு இமெயில் மூலம் தெரிவித்தால் அவர் அதனைப் படித்துப் பார்த்து சேர்த்துவிடுவார்.
உங்கள் பாடலை ராக் இசையில் கேட்கலாம்: உங்களுக்கு ஆங்கிலத்தில் பாடல் எழுதத் தெரியுமா? தனித் திறமை ஒன்றும் தேவையில்லை. Happy Birthday to You My dear என்று எழுதினாலும் அது ஒரு பாடல் தான். இப்படி உங்கள் பிரியமானவருக்கு பாடல் எழுதி அதனை ராக் இசைப் பாடல்களைப் பாடுபவர்கள் பாடி அதனை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பினால் எப்படி இருக்கும்? இதற்கென ஒரு வேடிக்கையான இணையதளம் உள்ளது. இதன் முகவரி http://www.srse/p1/src/ sing/ ஸ்பீச் டு டெக்ஸ்ட் தொழில் நுட்பம் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
இது டெக்ஸ்ட் டு ஸ்பீச் என்ற வகையில் செயல்படுகிறது. உடன் இசையையும் சேர்க்கிறது. தற்போதைக்கு இந்த பாடல் தளத்தின் அகராதியில் 1,400 சொற்கள் மட்டுமே இருக்கிறது. நீங்கள் உங்கள் தோழி விஜயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதை எழுதி அதைப் பாடலாக அனுப்பச் சொன்னால் இந்த மாதிரி விஜயா என்ற சொல் இல்லை. இந்த சொல் உள்ள பாடல் ஏதாவது இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள் என்ற செய்தி உங்களுக்குக் காட்டப்படும். வேடிக்கையாக இருந்தாலும் இது ஒரு புது அனுபவம்தான். தளத்திற்குச் சென்று பார்த்து அனுபவியுங்கள். முதலில் உங்களுக்கே ஒரு கவிதை ஒன்றை எழுதி இதன் மூலம் அனுப்பிப் பாருங்கள். பின் உங்கள் தோழர்களுக்கு அனுப்புங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment