Friday, June 6, 2008

பைல் போஸ்டர் அரேஞ்ச்மென்ட்


உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள போல்டர்களையும் பைல்களையும் வகை வகையாக அடுக்கி வைத்திட விரும்புபவரா நீங்கள்! அப்படியானால் இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான். உங்களின் ஒவ்வொரு பைலையும் நீங்கள் விரும்பியபடி அடுக்கி வைத்திட மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் உள்ள Arrange Icons வழி தருகிறது.

இதன் வழியாக உங்கள் பைல்களை பெயர் வரிசையிலும், அளவின் அடிப்படையிலும், வகையின் அடிப்படையிலும் மற்றும் அது உருவாக்கப்பட்ட நாள் அடிப்படையிலும் அடுக்கலாம். இவ்வாறு பிரித்த பின்னர் குழுவாகவும் பிரிக்கலாம். அதற்கான வழிகளை இங்கு பார்ப்போமா!

1.முதலில் Start, My Documents எனச் செல்லவும்.
2. மை டாகுமெண்ட்ஸ் சென்றவுடன் எந்த போல்டரில் உள்ள பைல்களை அடுக்க விரும்புகிறீர்களோ அந்த போல்டரில் சிங்கிள் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து அந்த பக்கத்தின் உச்சியில் உள்ள டூல் பாருக்குச் செல்லவும். அங்கு சென்று View மீது கிளிக் செய்திடவும்.
4. Arrange Icons By என்ற பிரிவிற்குக் கர்சரைக் கொண்டு செல்லவும்.
5. அங்கு இரண்டு பிரிவாக ஆப்ஷன்ஸ் கிடைக்கும். முதலில் முதல் குரூப்பை நாம் பார்ப்போம். இங்கு உங்கள் விருப்பப்படி Name, Size, Type மற்றும் Date Modified என்ற நான்கில் தேர்ந்தெடுக்கவும்.

6. இனி மீண்டும் View மெனுவில் Arrange Icons By என்பதன் மூலம் இதே செயல்பாட்டினை மேற்கொள்ளவும். இப்போது இரண்டாவது குரூப் ஆப்ஷன்ஸ் பிரிவைப் பார்க்கவும். இதில் Show in Groups, Auto Arrange or Align to Grid என்றவாறு பிரிவுகளைக் காணலாம். இதில் என்ன வகையினைத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பமாக இருக்கிறதா; இதோ உங்களுக்கு சிறிய விளக்கங்களைத் தருகிறேன்.

1. அகர வரிசைப்படி பைல்களின் பெயர்களின் அடிப்படையில் அடுக்க: Name
2. பைல் / போல்டரின் கொள்ளளவு அடிப்படையில் அடுக்க: Size
3. வகைகளின் அடிப்படையில் (வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட், பி.டி.எப் போன்ற வகையில்) Type
4. இறுதியாக எடிட் செய்யப்பட்ட பைல்கள் தேதிகளின் அடிப்படையில் முதலில் வரும்படி அமைத்திட Modified

5. அகர வரிசைப்படி குரூப்கள் அமைத்திட Show in Groups

6. தானாக நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளில் பைல் கள் அடுக்கப்பட Auto Arrange

7. காட்டப்படாத கிரிட் பாய்ண்ட்களுக்கு ஏற்றவகையில் படுக்கை நெட்டு வரிசைகளில் அடுக்கிட Align to Grid இந்த இரண்டு பிரிவுகளிலும் உங்கள் ஆப்ஷன்ஸ் தேர்ந் தெடுத்துவிட்டால் உடனே பைல்கள் அடுக்கப்பட்டுவிடும்.)

No comments: