Friday, June 6, 2008
எக்ஸெல் டேட்டா மாற்றம்
ஒர்க் புக் ஒன்றில் ஒரே ஷீட்டில் டேட்டாவை காப்பி செய்திட அவற்றைத் தேர்ந்தெடுத்து இழுத்து தேவையான செல்லில் விட்டுவிடுகிறோம். சரி, இன்னொரு ஒர்க் ஷீட்டில் அவற்றை அமைக்க வேண்டும் என்றால் காப்பி செய்து பின் ஒர்க்ஷீட்டைத் தேடித் திறந்து அங்கே காப்பி செய்கிறோம்.
வேறு வழி இல்லையா? அப்படியே இழுத்துச் சென்று இட முடியாதா? இருக்கிறது என்று சொல்லி நீங்கள் டேட்டாவை தேர்ந்தெடுத்து அப்படியே இழுத்து கீழே உள்ள ஷீட் டேபில் விடுவதற்குக் கொண்டு செல்கையில் என்ன நடக்கிறது?
அப்படியே அந்த ஒர்க்ஷீட் பெரிதாகி எங்கோ உள்ள நூற்றுக் கணக்கான செல்களைத் தாண்டி சென்று உங்களை விடுகிறது.
என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்கிறீர்கள். கண்ட்ரோல் + இஸட் அழுத்தி மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறீர்கள். ஓகே. அடுத்த முறை டேட்டா தேர்ந்தெடுத்து இழுக்கையில் ஆல்ட் கீயை அழுத்துங்கள்; இழுத்துச் செல்வது நிற்கும்.
ஸ்குரோலிங் நின்றுவிடுவதால் இப்போது நீங்கள் இலக்கு வைத்திடும் ஒர்க் ஷீட் டேபினைத் தேர்ந்தெடுக்க முடிகிறது அல்லவா? மவுஸ் பட்டனை அழுத்தியவாறே அப்படியே கீழே சென்று ஒர்க் ஷீட் டேபை அழுத்தவும். இப்போது அந்த ஷீட் திறக்கப்படுகிறது. நீங்கள் இழுத்துச் சென்ற டேட்டாவும் அங்கே அமைக்கப்படுகிறது. இனி இதனை எங்கு வேண்டுமானாலும் அந்த ஒர்க் ஷீட்டில் அமைத்துக் கொள்ளலாம்.
பார்டர் இல்லாத செல் டேட்டா
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பல முறை ஒரு டேட்டாவினை நாம் வேறு செல்லுக்குக் கொண்டு செல்ல வேண்டியதிருக்கும். ஆனால் முதலில் அமைத்த செல்லின் பார்டர் இல்லாமல் டேட்டா மட்டும் கொண்டு செல்ல விரும்புவோம். கட் அண்ட் காப்பி செய்தால் டேட்டா பார்டருடன் போகிறது. வெறும் டேட்டா மட்டும் தூக்கிச் செல்ல வேண்டும் என்று விரும்பினால் என்ன செய்ய வேண்டும். இதோ மேலே படியுங்கள்.
1. முதலில் எந்த செல்லில் இருந்து டேட்டாவைக் கொண்டு செல்ல வேண்டுமோ அந்த செல்லில் இருமுறை கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். அதன்பின் அதில் உள்ள டேட்டாவினை எடிட் செய்திடும் வகையில் எப்2 கீயை அழுத்துங்கள். இங்கு நாம் டேட்டாவை மாற்றப் போவதில்லை. டேட்டா மட்டும் தேவை என்று யோசித்தோம் அல்லவா? அதற்காக இந்த ஏற்பாடு.
2. இனி செல்லில் உள்ள டேட்டாவினை ஹைலைட் செய்திடவும். நேரடியாக செல்லில் உள்ள டேட்டாவினை ஹை லைட் செய்திட ஏற்கனவே நீங்கள் செட் செய்திடவில்லை என்றால் அது ஹை லைட் ஆகாது. எனவே பார்முலா பார் சென்று அதனை ஹைலைட் செய்திடுங்கள்.
3. இந்த இடத்தில் நீங்கள் கட் கட்டளை கொடுக்க ரெடியாகிறீர்கள். இதற்கு கண்ட்ரோல் + எக்ஸ் / ரைட் கிளிக் மெனுவில் கட் பட்டன் என ஏதாவது ஒரு வகையில் கட்டளை கொடுக்கலாம்.
4. இனி இந்த டேட்டாவிற்கான புது செல்லிற்குச் செல்லுங்கள். அந்த செல்லுக்குச் சென்றவுடன் வழக்கம் போல கண்ட்ரோல் + வி கீகளை அழுத்தி பேஸ்ட் செய்திடுங்கள். இப்போது வெறும் டேட்டா மட்டும் காப்பி ஆகும். பார்டர் எல்லாம் வராது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment