Friday, June 6, 2008
எக்ஸெல் டிப்ஸ்
ஆட்டோ சம் பங்சன்
ஆட்டோ சம் எனப்படும் கால்குலேஷன் பட்டன் குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். குறிப்பிட்ட செல்களைத் தேர்ந்தெடுத்து அதன் கீழாக உள்ள செல்லில் கர்சரைக் கொண்டு சென்று ஆட்டோ சம் பங்சனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தேர்ந்தெடுத்த செல்களில் உள்ள தகவல்களைக் கூட்டி சொல்ல பார்முலாவினை எக்ஸெல் அமைத்திடும். சரி, இதற்கு இணையான கீ போர்டு ஷார்ட் கட் எது?
மவுஸ் கிளிக் இல்லாமல் இந்த பார்முலாவை கீகளின் துணை கொண்டு அமைக்க முடியாதா? முடியும். அடுத்த முறை கூட்ட வேண்டிய தகவல்கள் உள்ள செல்களைத் தேர்ந்தெடுத்தபின் இறுதியாக உள்ள செல்லில் Alt + = எனத் தரவும். ஆஹா! ஆட்டோ சம் பங்சன் கீயை அழுத்தினால் என்ன பார்முலா அமைந்திடுமோ அதே பார்முலா அமைக்கப்பட்டுவிட்டதே.
ஸ்பெல் செக்
எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் ஸ்பெல் செக் செய்வதற்குக் கட்டளை கொடுத்தால் அப்போது எந்த ஒர்க் ஷீட் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அந்த ஒர்க் ஷீட்டில் உள்ள சொற்கள் மட்டும் செக் செய்யப்படும். ஒர்க் புக்கில் உள்ள மற்ற ஒர்க் ஷீட்களில் ஸ்பெல் செக் நடைபெறாது. அனைத்து ஒர்க் ஷீட்களிலும் இந்த ஸ்பெல் செக்கினை மேற்கொள்ளவும் வழி உள்ளது. முதலில் ஒர்க் புக்கில் உள்ள அனைத்து ஒர்க் ஷீட்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதற்கான குறுக்கு வழியையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஏதேனும் ஒரு ஒர்க் ஷீட் டேபில் ரைட் கிளிக் செய்திடவும். விரியும் மெனுவில் Select All Sheets என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி நம்பிக்கையோடு ஸ்பெல் செக் செய்வதற்கான கட்டளையைக் கொடுக்கவும். அனைத்து ஒர்க் ஷீட்களிலும் ஸ்பெல் செக் நடைபெறும்.
ஷார்ட் கட்ஸ்
எக்ஸெல் தொகுப்பில் செயல்படுகையில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட் கட் வழிகள் இங்கு தரப்படுகின்றன.
CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
SHIFT+SPACEBAR : கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL+ HOME : ஒர்க் ஷீட்டின் தொடக்கத்திற்கு செல்ல
CTRL+END: ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல
SHIFT+F3 : பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட
CTRL+A: பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்
CTRL+A: பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக்கும்.
CTRL+‘: (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலாவை அடுத்தடுத்துக் காணலாம்.
F11 or ALT+F1 : அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும்.
CTRL+; – (செமிகோலன்) தேதியை இடைச் செருக
CTRL+: (கோலன்) நேரத்தை இடைச் செருக
CTRL+ENTER : தேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க
F5: Go To டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+1: Format Cells டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+C : காப்பி செய்தல்
CTRL+V : ஒட்டுதல்
CTRL+Z : செயல்படுத்தியதை நீக்க
CTRL+S : சேவ் செய்திட
CTRL+P : பிரிண்ட் செய்திட
CTRL+O :புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment