ஒரு பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பலர் ஒரே ஒரு ஸ்லைட் டிசைனை மட்டுமே கையாள்வார்கள். ஸ்லைடில் காட்டப்படும் விபரங்கள் முற்றிலும் மாறினாலும் அனைத்து ஒரே வகை ஸ்லைட் டிசைனிலேயே இருக்கும். ஏனென்றால் ஒரே ஸ்லைட் டிசைன்தான் ஒரு பிரசன்டேஷன் பைலில் வர முடியும் என இவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். வெவ்வேறு ஸ்லைட் பிரசன்டேஷனை ஒரு பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் கொண்டு வர முடியும். அதற்கான வழிகளை இங்கு காண்போம்.
மிகப் பெரிய அளவில் அதிக எண்ணிக்கையுள்ள ஸ்லைடுகளைக் கொண்டு பிரசன்டேஷன் பைல்களைத் தயாரிப்பவர்களுக்கு இந்த உதவியாக இருக்கும். ஸ்லைட் டிசைனை மாற்றுவதால் அதன் மூலம் சொல்லப்படும் கருத்து அல்லது தகவல் மாறியுள்ளது என்று காட்சி மாறுவதன் மூலம் சொல்ல முடிகிறது. இதற்காக நாம் ஒவ்வொரு ஸ்லைடிற்கும் ஒரு டிசைனை அமைக்கப்போவதில்லை. பல பிரிவுகளில் கருத்து சொல்ல இந்த டிசைன் மாற்றம் உதவும். முதலில் நார்மல் வியூவினை குறிப்பிட்ட பைலுக்குத் தேர்ந்தெடுங்கள். View மெனு சென்று Normal என்னும் பிரிவில் கிளிக் செய்திடுங்கள். முதலில் Slide Design Task Pane என்னும் பிரிவிற்குச் செல்லுங்கள். இதற்கு Format மெனு சென்று Slide Design என்பதனைத் தேர்ந்தெடுங்கள். இந்த புரோகிராம் விண்டோவின் இடது பக்கம் Slides tab என்று ஒரு பிரிவு இருக்கும். இப்போது நீங்கள் புதிய ஸ்லைட் டிசைன் எந்த ஸ்லைடுகளுக்கெல்லாம் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறோமோ அவற்றை Shift / Ctrl கீகளை அழுத்தியவாறே தேர்ந்தெடுக்கவும். பின்னர் எந்த ஸ்லைட் டிசைன் டெம்ப்ளேட் உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அதனை ஸ்லைட் டிசைன் டாஸ்க் பேன் பிரிவில் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுக்கையில் அருகில் உள்ள கீழ் நோக்கிக் காணப்படும் சிறிய அம்புக் குறியில் அழுத்தவும். கிடைக்கும் மெனுவில் Apply to Selected Slide என்பதில் கிளிக் செய்திடவும். புதிய ஸ்லைட் டிசைன் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஸ்லைடுகளுக்கு மட்டும் இணைக்கப்பட்டு மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படும்.
No comments:
Post a Comment