Wednesday, July 23, 2008

உங்கள் வால் பேப்பரை நீங்களே தயாரிக்கலாம்

கம்ப்யூட்டரில் பயன்படுத்த வகை வகையான வால் பேப்பர்கள் இன்டர்நெட்டில் பல தளங்களில் கிடைக்கின்றன. சிலர் எதனையாவது டவுண்லோட் செய்து பயன்படுத்தி மற்றவர்களிடமும் காட்டி மகிழ்வார்கள்.

இதில் என்ன பிரச்னை என்றால் இத்தகைய வால்பேப்பர்களுடன் வைரஸ் தொகுப்புகளும் சேர்ந்து வரும். வால் பேப்பர்களை அமைத்திடும் முன் இவை இயங்கத் தொடங்கி நம்மைச் சிரிப்பாய்ச் சிரிக்க வைத்திடும். இதற்குப் பதிலாக நாமே நம் படங்களை வால் பேப்பராக அமைத்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றுகிறதா? செய்யலாமே. அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.

1. முதலில் உங்கள் திரையின் ரெசல்யூசன் தன்மையினை செட் செய்திடலாம். அதற்கு முன் எந்த அளவில் படம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திடவும். இது மிக எளிது. டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் காட்டப்படும் திரையில் செட்டிங்ஸ் என்னும் டேபைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். அங்கு ஸ்கிரீன் ரெசல்யூசன் ஏரியாவைக் கண்டுபிடித்து தற்போதைய செட்டிங் என்ன என்பதை அறிந்து கொள்ளவும்.

2. ஓகே. இப்போது உங்களின் பட அளவைக் குறித்துக் கொண்டீர்கள். அடுத்து நீங்கள் வால் பேப்பராக மாற்ற விரும்பும் போட்டோவினைத் தேர்ந்தெடுக்கவும். போட்டோக்களை வைத்திருக்கும் டிரைவ் சென்று நல்லதாக ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

3. அடுத்து அந்த போட்டோ பைலைத் திறக்கவும். போட்டோவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களைத் தீர்மானிக்கவும். பின் அவற்றை ஏற்படுத்தவும். இந்த மாற்றங்கள் உங்களுடைய மானிட்டர் ரெசல்யூசனுக்கேற்றபடி அமைய வேண்டும்.

4. பொதுவாக இந்த வேலைகளுக்குப் பயன்படுத்தும் இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் தொகுப்புகளில் “constrain proportions” என்று ஒரு வசதி இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்துவிட்டால் நீங்கள் போட்டோவில் ஏற்படுத்தும் அளவு மாற்றங்களுக்கேற்ப அதன் மற்ற குணாதிசயங்களும் மாற்றப்படும். எனவே போட்டோவின் தன்மைகளை மாற்ற முயற்சிக்கும் முன் இந்த வசதியினைச் செயல்படுத்தும் வகையில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். படங்களில் மாற்றங்கள் தாமாக மாறுகையில் எதனால் ஏற்படுகிறது என்பதனை நீங்களே உணர்ந்து சரி செய்திடும் வழியைக் கண்டறியலாம். அதற்கேற்றபடி செயல்படவும்.

5. நீங்கள் விரும்பும் போட்டோ கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு ஏற்றபடியும் மற்ற வசதிகளுக்கேற்றபடியும் மாற்றப்பட்டுவிட்டதா! அதனை இன்னொரு பெயரில் இப்போது சேவ் செய்திடுங்கள். ஜேபெக் வடிவில் சேவ் செய்திடவும். இதனை நீங்கள் நினைவில் கொள்ளும் வகையிலான டிரைவில் சேவ் செய்து கொள்ளுங்கள்.

6. அடுத்து இறுதி நிலைக்கு வந்துவிட்டீர்கள். மீண்டும் டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்து மெனுவில் பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். இனி டெஸ்க்டாப் டேப்பிற்குச் செல்லவும். அங்கு சென்று போட்டோவை சேவ் செய்த டிரைவைக் கிளிக் செய்து நீங்கள் சேவ் செய்த போட்டோ பைலைக் காணவும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்களின் நெஞ்சை அள்ளிய அந்த போட்டோ வால் பேப்பராக கம்ப்யூட்டரில் இருக்கும்.

No comments: