Wednesday, July 23, 2008

எங்கே உள்ளது சீரியல் நம்பர்?

புதியதாக கம்ப்யூட்டர் ஒன்றினை சென்னையில் இருக்கும் போது வாங்கியதாகவும் பின் அதனை மதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் இயக்கும்போது பிரச்னை வர மதுரையில் உள்ள அந்த நிறுவனத்தின் டெக்னீஷியனை அழைத்திருக்கிறார் நம் வாசகர்களில் ஒருவர். டெக்னீஷியன் வந்து பார்த்துவிட்டு இந்த கம்ப்யூட்டரின் சீரியல் எண் தெரிய வேண்டும்.

அப்போது தான் இந்த கம்ப்யூட்டரின் வாரண்டி காலம் மற்றும் பிற விபரங்கள் தெரியும் என்று கூறி உள்ளார். வாசகர் தான் வாங்கியபில் வாரண்டி கார்ட் கொடுத்த பின்னரும் அவர் கம்ப்யூட்டரில் ஒட்டப்பட்டிருக்கும் அதனைக் காணோமே என்று அங்கலாய்த்துப் பின் தன் நிறுவன மேனேஜரிடம் சொல்வதாகச் சென்றுள்ளார். வாசகர் தினமலருக்கு கடிதம் எழுதி கேட்டுள்ளார்.
அந்த வாசகர் குறிப்பிடும் நிறுவனத்துடன் மற்ற நிறுவனங்களும் இது போல கம்ப்யூட்டருக்கான சீரியல் எண்ணை சிறிய ஒட்டும் ஸ்லில்ப்பாக சிபியு டவரில் ஒட்டி வைப்பார்கள். அந்த எண்ணைப் பார்த்து கம்ப்யூட்டர் தயாரான காலம், வழங்கிய துணை சாதனங்கள், வாரண்டி காலம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

இந்த ஸ்லிப் சிபியு டவரின் இடது அல்லது வலது புறம் ஒட்டப்பட்டிருக்கும். வாசகர் வீட்டில் இது போல ஸ்டிக்கர் லேபிளைப் பார்த்தால் அதனைக் கிழித்தெறியும் பழக்கம் உள்ளவர் எவரேனும் அதனை அழகாகத் தனியே எடுத்து தாங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி மீதோ அல்லது டேபிள் மீதோ ஒட்டியிருக்கலாம். அதனால் வாசகருக்கு இப்போது இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கம்ப்யூட்டர் மட்டுமல்ல பிரிண்டர், கீ போர்டு போன்ற அனைத்து சாதனங்களுக்கும் ஒரு எண் தரப்படும். இந்த எண் சாதனம் குறித்த அனைத்து விபரங்களையும் தரும். ஒரு முறை இங்க் ஜெட் பிரிண்டர் ஒன்றுக்கான டிரைவரை டவுண்லோட் செய்திட முயற்சி செய்கையில் இதே போல சீரியல் எண்ணை அந்த தளம் கேட்டது. கொடுத்த பின்னரே அதனை சோதித்து பின் டிரைவரை டவுண்லோட் செய்திட அனுமதி அளித்தது. லேப்டாப் மற்றும் பிரிண்டர்களுக்கு அவற்றின் அடிப்பாகத்தில் இவை ஒட்டப் பட்டிருக்கும். அல்லது எம்பாஸ் என்ற வகையில் கேஸில் பதிக்கப்பட்டிருக்கும். இவற்றை ஒருமுறை பார்த்து வேறு இடங்களில் குறித்து வைப்பதுவும் நல்லது.

No comments: