Wednesday, July 23, 2008

சி.பி.யு., எந்த அளவிற்கு வேலை செய்கிறது?

சி.பி.யூ. என அழைக்கப்படும் கம்ப்யூட்டரின் மூளையான மையச் செயலகத்தின் வேலைப்பாட்டினை நாம் மிக எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். முதலில் வேலைப் பாடு என்பது என்ன? நாம் அதனை எந்த அளவிற்கு வேலை வாங்குகிறோம் என்பது தான். எடுத்துக்காட்டாக ஒன்றுக்கு மேற்பட்ட பல புரோகிராம்களை நாம் திறந்திருந்து பணியாற்றிக் கொண்டிருந்தால் சிபியூவினை அதிக வேலை வாங்குகிறோம் என்றாகிறது. அப்படியானால் ஒரு புரோகிராமையும் திறக்கவில்லை என்றால் சிபியூ வேலைத் திறனை நாம் பயன்படுத்தவில்லை என்று ஆகாது. ஆண்டி வைரஸ், பயர்வால் மற்றும் வேர்ட் பிராசசர்களுக்கான சில ஸ்பெஷல் டிரைவர்கள் என பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் சிபியூவின் திறனைப் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும்.

சரி, இதனை எப்படி அறிவது?

இதற்கு நீங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Task Manager ஐத் திறக்க வேண்டும். இதற்கு நீங்கள் மேற்கொள்ள வேண்டிய எளிய வழி Ctrl + Alt + Del என்ற மூன்று பட்டன்களையும் ஒரு சேர அழுத்த வேண்டியதுதான். அழுத்தியவுடன் பாப் அப் பாக்ஸ் ஒன்று மேல் எழுந்து வரும். இதில் இகக் க்ண்ச்ஞ்ஞு என்று உள்ள இடத்தில் சிபியூ பயன்பாடு எத்தனை சதவிகிதம் உள்ளது என்று தெரியும். தொடர்ந்து இது மாறிக் கொண்டே இருக்கும். இதிலுள்ள மற்ற டேபுகளையும் அழுத்தி அவை என்ன காட்டுகின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

No comments: