Wednesday, July 9, 2008

அந்நியச் செலவாணி மையம்

வெளிநாடுகளுக்குச் செல்வது, அந்நாட்டு பணத்தில் சம்பாதிப்பது, வெளிநாட்டு கரன்சியை வீட்டில்வைத்திருப்பது எல்லாம் இப்போடு அனைத்து வீடுகளிலும் உள்ள ஒரு பழக்கமாக மாறி வருகிறது. நகரமானாலும் கிராமமானாலும் பத்து வீடுகளில் ஒன்றில் யாராவது ஒருத்தர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார். வெளிநாடுகளுடனான வர்த்தகம் பெருகும்போதும் சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும் இங்கு வெளிநாட்டு கரன்சி பரிமாற்றம் ஏற்படுகிறது. இந்த வேகத்தில் போனால் மற்ற நாடுகளில் இருப்பது போல நம் ஊர் பெட்டிக் கடைகளில் கூட வெளிநாட்டுக் கரன்சிகளைக் கொடுத்து இந்தியப் பணமாக மாற்றும் காலம் வரும்.

பல நாட்டு கரன்சிகளுக்கான மாற்று விகிதம் குறித்து அறிவிக்கும் ஓர் இணைய தளம். Forex Flower என்ற பெயரில் இயங்கும் இந்த இணைய தளம் http://www.forexflower.com/ என்ற முகவரியில் இயங்குகிறது. வேகமாக இந்த தளத்தில் அன்றைய நிலவரப்படியான கரன்சி மாற்ற விகிதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் கரன்சிக்கான அடுத்த நாட்டு கரன்சி மதிப்பு எனத் தெரிந்து கொள்ளலாம். இந்த தளத்தில் சென்று அங்கு கிடைக்கும் விரியும் மெனு பெட்டியில் எந்த கரன்சிக்கு மாற்று வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து எவ்வளவு என்று அமைக்கவும். தொடக்கத்தில் மெனுவில் 1 என இருக்கும். அடுத்து எந்த கரன்சியில் மதிப்பு வேண் டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்ததாக உள்ள அட்ணிதணt ஞணிது நீங்கள் விரும்பும் கரன்சியில் மதிப்பு காட்டப்படும். அவ்வப்போது உலக அளவில் கரன்சி விகிதங்கள் மாறும்போது இந்த தளத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே அன்றாடம் இந்த தளம் காட்டும் மாற்று கரன்சி மதிப்பை சரியானதாக நீங்கள் எடுத்துக் கொண்டு கையாளலாம். இவை எத்தனை தசம ஸ்தானத்தில் வேண்டும் என்பதனையும் நீங்கள் அமைக்கலாம். இந்த தளத்தின் வலது பக்கத்தில் இந்த தளம் குறித்த செய்திகளைக் காணலாம். அத்துடன் உங்கள் கருத் துக்களை அமைக்கவும் சிறிய பெட்டி தரப்பட்டுள்ளது.உங்களிடம் வெளிநாட்டு கரன்சி இருக்கிறதோ இல்லையோ இந்த தளம் சென்று அது செயல் படுவதைப் பாருங்களேன்.

No comments: