Thursday, July 3, 2008

பிரிண்ட் லே அவுட்டில் டெக்ஸ்ட் ஓட்டம்


வேர்ட் தொகுப்பு பயன்படுத்துபவர்கள் வேர்ட் தரும் வியூவில் தங்களுக்கென ஒரு வியூவினைத் தங்கள் பேவரிட் வியூவாகக் கொண்டு செயல்படுவார்கள். மற்ற வியூ குறித்து என்ன சொன்னாலும் இதுதான் எனக்கேற்றது என்று அதனையே பயன்படுத் துவார்கள். நார்மல்வியூ, பிரிண்ட் லே அவுட் வியூ, வெப் லே அவுட் வியூ என இந்த வியூக்களில் நீங்கள் பிரிண்ட் லே அவுட் வியூ பயன்படுத்துகிறீர்களா! உங்களுக்கும் மற்றவர் களுக்கும் இந்த குறிப்பு பயன்படும். பிரிண்ட் லே அவுட் வியூவைப் பொறுத்த வரை நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அந்த வியூதான் பிரிண்ட் எடுக்கையில் கிடைக்கும்.

இதையே ஆங்கிலத்தில் ”What you see is what you get,” என்று கூறுவார்கள். இந்த தன்மைக் காகவே இந்த வியூவினைப் பெரும்பான்மை யானவர்கள் பயன்படுத்து கின்றனர். எந்த காரணத்திற்காக நீங்கள் இதனை விரும்பினாலும் இந்த வியூ சில சிறப்பம் சங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நம் டெக்ஸ்ட் எப்படி டாகுமெண்ட் வழியே சென்று அமைகிறது என்று இதன் மூலம் கண்காணிக்கலாம். டேபிள்கள் உடைகின் றனவா? ஒரே கருத்தைக் கூறும் பாராக்கள் பிரிகின்றனவா? என்று பார்த்து நாம் அதற்கேற்ப டாகுமெண்ட்டை அமைத்திட முடியும். இன்னொரு வகை வியூவிற்குச் செல்ல வேண்டும் என எண்ணினால் என்ன செய்கிறீர்கள். ஒரு வகை வியூவிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவது என்பதுவும் எளிதுதான். திரையின் கீழாக இடது ஓரத்தில் உள்ள வியூ கட்டங்களில் தேவையான கட்டத்தின் மீது கிளிக் செய்தால் போதும்.

ஆனால் பிரிண்ட் லே அவுட் வியூவிலேயே இந்த வசதி உள்ளது. மேலே மற்றும் கீழே உள்ள மார்ஜின் இடத்தை திருத்தி அமைத்து பிற வியூவகையிலும் காணலாம். இதற்கு உங் களுடைய கர்சரை மெதுவாக இரு பக்கங் களைப் பிரிக்கும் கோட்டின் அருகே கொண்டு செல்லவும். ஒரு இடத்தில் கர்சர் இரு புறம் காட்டும் அம்புக் குறியாக மாறும். அப்போது சிறிய செய்தி ஒன்று கிடைக்கும். அதில் “Hide White Space” எனத் தரப்பட் டிருக்கும். வேர்ட் 2007ல் “Double Click to Hide White Space” என்று கிடைக்கும். இந்த இரண்டு அம்பு கர்சர் இருக்கையில் கிளிக் செய்திடவும். மந்திரம் போட்டது மாதிரி பக்கங்களுக் கிடையே ஒரு கெட்டியான கோடு ஒன்று கிடைக்கும். இப்போது மேலே கீழே பார்த்தால் அங்கு உள்ள மார்ஜின் ஸ்பேஸ் நீக்கப்பட்டிருக் கும். மீண்டும் மார்ஜின் வேண்டுமா? கவலைப் படாதீர்கள். கருப்பாகச் செல்லும் கோட்டில் மீண்டும் கர்சரைக் கொண்டு செல்லுங்கள்.

அப்போது “Show White Space” என்று செய்தி கிடைக்கும். இப்போது கிடைக்கும் இரண்டு அம்புக்குறியைக் கவனித்தீர்கள் என்றால் அவை வெளிப்புறமாக திசை காட்டும் வகையில் இருக்கும். இங்கு ஒரு கிளிக் செய்தால் மீண்டும் உங்கள் டாகுமெண்ட் பிரிண்ட் லே அவுட் வியூவிற்குச் செல்லும்.

No comments: