Thursday, July 3, 2008

திறக்க முடியாத பைல்கள்

தான் பயன்படுத்தி வந்த கம்ப்யூட்டர் சிறிது சிறிதாகப் பிரச்னை கொடுத்துப் பின் மொத்தமாய் செயல் இழந்து முடங்கிப் போனதால் புதிய கம்ப்யூட்டருக்கு மாறிய ஒரு வாசகர் தன்னால் பழைய இரு வகை பைல்களை புதிய கம்ப்யூட்டருக்கு மாறிய பின் திறக்க முடியவில்லை என எழுதியுள்ளார். அந்த பைல்கள் .odt மற்றும் .ods என துணைப் பெயருடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு பைல்களையும் திறக்க ஓப்பன் ஆபீஸ் என்னும் புரோகிராம் வேண்டும். இது இல்லாததால் இவற்றைத் திறக்க முடியவில்லை.

இந்த ஆபீஸ் புரோகிராம் இலவசமாக http://download.openoffice.org என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது. புதிய கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2000 அல்லது ஆபீஸ் 2003 அல்லது எக்ஸ்பி இன்ஸ்டால் செய்திருந்தால் இவற்றிலும் மேலே சொன்ன வகை பைல்களைத் திறந்து பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு ஒரு ப்ளக்–இன் பைல் சேர்க்கப்பட வேண்டும். இந்த ப்ளக் இன் புரோகிராமினை www.sun.com/software/star/odf_plugin/index.jsp என்ற முகவரியில் உள்ள தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இலவசம் தான். ஆனால் இந்த ப்ளக் இன் புரோகிராம் ஆபீஸ் 2007 தொகுப்புடன் இணைந்து செயலாற்றாது.

No comments: