Thursday, July 3, 2008

சிஸ்டம் டிப்ஸ்


மை கம்ப்யூட்டருக்கு புதிய வழி

நாம் எல்லாரும் அடிக்கடி பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பிரிவு மை கம்ப்யூட்டர் ஆகும். ஏனென்றால் இதன் மூலமே நாம் நம் ஹார்ட் டிஸ்க்கை அணுகுகிறோம். சிடி மற்றும் இயக்கி எடுக்கக் கூடிய பிளாஷ் டிரைவ்களையும் அணுகுகிறோம். மை கம்ப்யூட்டர் போல்டரைப் பெற டெஸ்க் டாப்பில் உள்ள அதன் ஐகானைக் கிளிக் செய்கிறோம்.

அல்லது இன்னும் சற்று சுற்று வழியாக ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் எக்ஸ்புளோர் சென்று பின் அதனைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவில் பெறுகிறோம். இந்த வேலையெல்லாம் வேண்டாம்; எனக்குத் திரை யிலேயே ஒரு மெனு வர வேண்டும்.

அதன் மூலம் மை கம்ப்யூட்டர் பெற வேண்டும் என விரும்புகிறீர்களா! அதற்கான வழியும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஸ்டார்ட் மெனு செல் லுங்கள். அங்கு கிடைக்கும் இரட்டை மெனுவில் வலது பக்கம் பார்வையைச் செலுத்துங்கள். அங்கு மை கம்ப்யூட்டர் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்தால் நேராக மை கம்ப்யூட்டர் போல்டருக்குச் செல்வீர்கள். இந்த மெனுவிலேயே மை மியூசிக், மை பிக்சர்ஸ், மை நெட்வொர்க் பிளேசஸ் என்ற போல்டர்களுக்கும் வழி இருப்பதனை நீங்கள் பார்க்கலாம்.

என்ன புரோகிராம் என்ற அறிவிப்பு

கம்ப்யூட்டரில் டூல்பார் அல்லது டெஸ்க்டாப்பில் ஐகான் மீது உங்களுடைய மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால் உடனே புரோகிராம் பெயர் சிறிய மஞ்சள் கட்டத்தில் கிடைக்கும். சில புரோகிராம்களுக்கு நாம் மேலும் சில குறிப்புகளை எழுதி வைத்து நமக்கு நினைவூட்டும் படி செய்திடலாம். எடுத்துக் காட்டாக என்னிடம் பிராட்பேண்ட் இணைப்பு இருந்தாலும் அது காலை வாரிவிடும் பட்சத்தில் டெலிபோன் வழியே இணைப்பிற்கான வழியையும் ஏற்படுத்தி ஐகானை உருவாக்கி வைத்திருக்கிறேன். அதனைப் பயன்படுத்தும் முன் சிபியுவின் பின்புறம் இருந்து வரும் டெலிபோன் இணைப்பிற்கான கேபிளை டெலிபோனுடன் இணைக்க வேண்டும்.

இதனை அடிக்கடி மறந்து போவோம். எனவே இந்த புரோகிராம் ஐகான் மீது கிளிக் செய்திட கர்சரைக் கொண்டு சென்றவுடன் Fix the Telephone line first என்ற செய்தி வரும்படி அமைத்துக் கொண்டேன். இதே போல பல புரோகிராம்களுக்கு எச்சரிக்கை செய்தியினைப் போட்டு வைக்கலாம். இதனை ஏற்றுக் கொள்ளும் புரோகிராம்களை இயக் குகையில் நமக்கு ஒரு நினைவூட்டல் கிடைக்கும் அல்லவா! இதனை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்ப்போம்.

எந்த புரோகிராமிற்கு இந்த செய்தி இணைப்பு வேலை நடைபெற வேண்டுமோ அந்த புரோகிராமின் ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்லவும். பின் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் கீழாக Comment என்ற பிரிவில் உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய செய்தியை டைப் செய்து வைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அந்த ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்லும் போதெல்லாம் அந்த செய்தி உங்களுக்குக் காட்டப்படும்.

No comments: