Thursday, July 3, 2008
பக்கங்களை வேகமாக நகர்த்த
உங்களிடம் ஸ்குரோலிங் வீல் உள்ள மவுஸ் உள்ளதா? அப்படியானால் இந்த டிப்ஸை அவசியம் நீங்கள் படிக்க வேண்டும். டாகுமெண்ட்டில் ஒரு இடத்தில் உள்ள நீங்கள் 12 பக்கங்கள் முன்னரோ பின்னரோ உள்ள இடத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள்.
என்ன செய்கிறீர்கள்? வேகமாக பக்கம் தாண்டிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள். சைட் பாரில் உள்ள கட்டத்தினை அழுத்தி இழுக்கப் பார்க்கிறீர்கள். என்ன ஆகிறது? நீங்கள் எதிர்பார்த்த இடத்திற்கும் முன்னாலோ பின்னாலோ டாகுமெண்ட் செல்கிறது.
இங்கே தான் மவுஸின் ஸ்குரோல் வீல் நமக்கு உதவுகிறது. ஏதேனும் ஒரு இடத்தில் மவுஸை வைத்து அதன் வீலை அழுத்திப் பிடிக்கவும். இதை அழுத்தியவுடன் இரு அம்புக் குறிகள் கொண்ட பெரிய கர்சர் ஒன்று தெரியும். இப்போது வீலை அழுத்தியவாறே மவுஸை முன்புறம் லேசாகத் தள்ளினால் அந்த திசையில் டெக்ஸ்ட் நகரத் தொடங்கும். எதிர்த்திசையில் லேசாக இழுத்தால் உடனே டெக்ஸ்ட் சுழல்வது நிற்கும்.
பின் மீண்டும் எதிர்புறமாக இழுத்தால் டெக்ஸ்ட் வேகமாக நகரத் தொடங்கும். எந்த இடத்தில் டெக்ஸ்ட் வேண்டுமோ அங்கு மவுஸின் வீலை விட்டுவிட்டால் டெக்ஸ்ட் செல்வது நின்றுவிடும். இந்த ட்ரிக் அனைத்து புரோகிராம்களிலும் வேலை செய்யாது என்றாலும் பல இமெயில் புரோகிராம்களிலும், வேர்டிலும் மற்றும் சில இணைய தளங்களிலும் செயல்படுகிறது.
பைல் பிரிவியூ: அவசரமாக ஒரு பைலை தேடுகிறீர்கள். அது வேர்ட் டாகுமெண்ட் அல்லது பிரசன்டேஷன் பைலாக இருக்கலாம். ஆனால் என்ன பெயரில் பைலை சேவ் செய்தோம் என்று நினைவில் இல்லை. நாளும் நினைவில் இல்லை. என்ன செய்யலாம்? விண்டோஸ் எக்ஸ்புளோரரில் டைரக்டரியைத் திறந்து வைத்து சந்தேகப்படும் பைல்கள் ஒவ்வொன்றையும் திறந்து மூடி பின் அடுத்த பைலை திறந்து மூடி செயல்களை மேற்கொள்ள முடியுமா? எவ்வளவு சுற்றும் வேலை இது.
பைல் அருகில் கர்சரைக் கொண்டு சென்றாலே அதன் உள்ளே இருக்கும் விஷயங்களை சிறு போட்டோ போல காட்டும் வசதி இருந்தால் எவ்வளவு நல்லது. இருக்கிறது அந்த வசதி. பைல் பிரிவியூ என்று இதனை அழைக்கின்றனர். அதனை செட் செய்திடும் வழியைப் பார்ப்போம். முதலில் File மெனு சென்று அதில் Open விண்டோவினைத் திறக்கவும். இந்த விண்டோ கிடைத்தவுடன் நீங்கள் அதில் காட்டப்படும் பைல்களின் பட்டியலைத்தானே பார்க்கிறீர்கள். இப்போது அந்த விண்டோவின் வலது பக்க ஓரத்தில் பாருங்கள். அதில் Views என்று ஒரு பட்டன் இருக்கும்.
இதில் கிளிக் செய்து திறந்தால் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் Preview என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பெறவும். இப்போது விண்டோ இரு பகுதியாகப் பிரிந்து காட்டப்படுவதனைப் பார்க்கலாம். ஒரு பக்கம் பைல் பட்டியலுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் பெயர் தேர்ந்தெடுத்த நிலையில் இருக்கும். வலது பக்கம் உள்ள கட்டத்தில் அந்த பைலின் உள்ளே என்ன இருக்கிறது என்பது காட்டப் படும். இதன் முதல் பக்கம் தெரிந்தாலும் அருகே உள்ள அம்புக் குறியை அழுத்தி கீழே சென்று பைலில் உள்ளதைப் பார்க்கலாம்.
இதுதான் நீங்கள் தேடும் பைல் என்றால் உடனே அதனைக் கிளிக் செய்து திறந்து எடிட் செய்திடலாம்.இல்லை என்றால் கர்சரை பைல் பட் டியலில் அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அந்த பைலின் பிரிவியூ கிடைக்கும். இந்த தேடல் எளிதாகத் தெரி கிறதா? நேரம் மிச்சமாகிறதா! அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
சீரியல் நம்பர் டைப் செய்கிறீர்களா? புதியதாக சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை விலை கொடுத்து உங்களுடையதாக்கிக் கொண்டுள்ளீர்கள். இதனை கம்ப்யூட்டரில் பதியும் போது அல்லது முதல் முதலாகப் பயன்படுத்தும்போது வரிசை எண்ணை பதியும்படி அந்த புரோகிராம் கேட்கும். உடனே நம் லாக் கீ பேடிலிருந்து எண்களை டைப் செய்திடக் கூடாது. எழுத்துகளுக்கு மேலுள்ள கீகளிலிருந்துதான் டைப் செய்திட வேண்டும். ஏனென்றால் சில வேளைகளில் கீபேடில் உள்ள எண்களுக்கான கீகளை அழுத்துகையில் அதனை வேறு ஒன்றின் குறியீடாகக் கம்ப்யூட்டர் எடுத்துக் கொண்டு பதிவு செய்திடும் எண்ணை ஏற்றுக் கொள்ளாது.
இணைய தளத்திற்கான ஷார்ட் கட் : உங்களுக்குப் பிடித்த இணைய தளங்களுக்கு ஷார்ட் கட் ஐகான் இருந்து அவற்றைக் கிளிக் செய்தால் நேரடியாக நீங்கள் அந்த தளத்திற்குச் சென்றால் எப்படி இருக்கும்? அப்படிச் செய்ய முடியுமா?
முடியும். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தொகுப்பில் உங்களுக்குப் பிடித்த இணைய தளத்தைப் பார்க்கையில் தளத்தின் முகவரிக்கு அருகே சிறிய ஆங்கில எழுத்தான “e” இருக்கும் அல்லவா?
இப்போது உங்கள் பிரவுசர் விண்டோவைச் சிறியதாக்கி அதன் பின் அந்த சிறிய “e” எழுத்து உள்ள கட்டத்தை இழுத்து வந்து டெஸ்க்டாப்பில் உள்ள காலியிடத்தில் விட்டுவிட்டால் அதுதான் உங்களுக்குப் பிடித்த தளத்தின் ஷார்ட்கட். இந்த ஐகான்களின் மீது கிளிக் செய்தால் பிரவுசர் திறக்கப்பட்டு நீங்கள் தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
கீ லாக்கர்களிடமிருந்து தப்பிக்க: கீ லாக்கர் என்பது நாம் டைப் செய்திடும் கீகள் என்ன என்னவென்று அப்படியே காப்பி செய்து பைலாக உருவாக்கித் தரும் சாப்ட்வேர் ஆகும். எனவே இந்த புரோகிராம் இருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் நாம் இன்டர் நெட் மற்றும் நிதி பரிவர்த் தனைகளை மேற்கொண்டால் நம்முடைய பாஸ்வேர்டுகள் மற்றவருக்குத் தெரிந்துவிடும் அல்லவா? இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி உள்ளது.
பாஸ்வேர்ட் டைப் செய்திடுகையில் இடையே பாஸ்வேர்டில் இல்லாத எழுத்துக்களையும் டைப் செய்து விடுங்கள். பின் மவுஸ் மூலம் அந்த தேவையற்ற எழுத்துக் களை நீக்கிவிடுங்கள். கீ லாக்கர் புரோகிராம்கள் டைப் அடிக்கும் கீகளை மட்டுமே நினைவில் கொள்ளும். இது போல தேவையற்ற கீகளை அழுத் துகையில் எடுத்துக் கொள்ளும்; ஆனால் அவற்றை மவுஸ் மூலம் அழிக்கையில் எடுத்துக் கொள்ளாது. எனவே நம் பாஸ் வேர்ட்களை மற்றவர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியாது.
பைலின் பாத் தெரிய: ஒரு பைல் எங்கு உள்ளது என்று கூற அதற்கான பாத் (path) சரியாகத் தரப்பட வேண்டும். இதனை எப்படி அமைப்பது? அல்லது பாத் –இன் முழு வழியை எப்படி எழுதுவது என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர். இதனை மிக எளிதாகக் கண்டு பிடிக்கலாம். ஸ்டார்ட் அழுத்தி பின் ரன் விண்டோவினைத் திறக்கவும்.
விண்டோஸ் எக்ஸ்புளோரரையும் திறந்து குறிப்பிட்ட பைலை மவுஸால் இழுத்து வந்து ரன் விண்டோவில் விடவும். பைல் அங்கேயேதான் இருக்கும். ஆனால் பைலின் பெயர் முழு path உடன் காட்டப்படும். இதனை அப்படியே காப்பி செய்து எங்கு பைல் குறித்து பாத் காட்ட வேண்டுமோ அங்கு பேஸ்ட் செய்துவிடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment