Wednesday, July 9, 2008

இமெயில் திறந்து மூட சிரமமா?

இமெயில் படிப்பது என்பது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்ட நிலையில் அவற்றை ஒவ்வொன்றாகத் திறந்து படிப்பது சிரமமான வேலைதான்.

குறிப்பாக சில தகவல்களை நாம் அவசரமாக ஒரு மெயிலில் படித்து தெரிந்திருப்போம். பின் ஆற அமரப் பார்க்க முற்படுகையில் அந்த செய்தி யார் அனுப்பிய அல்லது எந்த தளம் அனுப்பிய இமெயிலில் இருந்தது என்பது தெரிய வராது. இதற்காக ஒவ்வொரு இமெயிலையும் திறந்து மேலோட்டமாகப் பார்த்து பின் மூடுவது என்பது எரிச்சலூட்டும் செயலாக இருக்கும்.
இதற்கான ஒரு சிறு வழியை இங்கு பார்ப்போமா! இவ்வாறு ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்காமல் ஒரு மெயிலின் தகவல் கோட்டில் கர்சரைக் கொண்டு சென்றாலே அந்த மெயிலில் உள்ள சமாச்சாரங்கள் கோடி காட்டப்பட்டால் நன்றாகத்தானே இருக்கும். வேர்ட் தொகுப்பில் பைல் பிரிவியூ இருப்பது போல இருந்தால் வேலை எளிதாகுமே. இமெயில்களையும் அவ்வாறு பார்க்கலாம். எம்.எஸ். அவுட்லுக் தொகுப்பில் இதற்கு Preview Pane என்று ஒரு வசதியைத் தந்துள்ளனர். அவுட்லுக் 2007 தொகுப்பில் இதனை Reading Pane என பெயரிட்டுள்ளனர். இதனை செயல்படுத்த வியூ மெனு சென்று ரீடிங் பேன் என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வேண்டியதுதான். பின் புரோகிராம் விண்டோவில் இது எப்படி காட்டப்பட வேண்டும் என்பதையும் முடிவு செய்து அமைக்கலாம். உங்கள் விண்டோவின் அடிப்பாகம் இந்த ரீடிங்/பிரிவியூ கட்டமாக மாறி இருக்கும். அங்கு உங்கள் கர்சர் இருக்கும் இமெயில் கடிதம் காட்டப்படும். இங்கு சென்று இமெயில் முழுவதையும் பார்க்கலாம். அல்லது சிறிது பார்த்துவிட்டு கர்சரை அடுத்த இமெயில் செய்திக்குக் கொண்டு சென்று அந்த இமெயிலைப் பார்க்கலாம். எனவே இமெயிலைத் திறப்பது, மூடுவது என்ற கூடுதல் வேலை இதனால் தவிர்க்கப்படுகிறது. இந்த பிரிவுகளுக்கு இடையே கோடு ஒன்று இருக்கும். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று கர்சர் இரு புற அம்புக் குறியாக மாறுகையில் அதனை மேலும் கீழும் இழுத்துச் சென்று இந்த பகுதிகள் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனையும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செட் செய்திடலாம்.

யாஹூ மெயிலை பிளெய்ன் டெக்ஸ்ட்டாக மாற்ற

உங்கள் யாஹூ மெயில் அக்கவுண்ட் ஏற்படுத்தும்போது உங்கள் மெயில்களை எல்லாம் எச்.டி.எம்.எல். பார்மட்டில் அனுப்பும்படி அமைத்திருப்பீர்கள். இதில் என்ன பிரச்னை என்றால் உங்கள் நண்பர்களில் சிலர் தங்களுக்கு வரும் மெயில்களை பிளெய்ன் டெக்ஸ்ட்டாகக் கிடைக்கும்படி அமைத்திருப்பார்கள். ஒரு சிலர் எச்.டி.எம்.எல். வகையினை எந்நேரமும் விரும்ப மாட்டார்கள். இது எதற்கு வம்பு என்று நீங்கள் எண்ணினால் உங்கள் செட்டிங்ஸை பிளெய்ட் டெக்ஸ்ட்டாக மாற்றலாம்.
அதற்கான வழிகள்:


1. முதலில் mail.yahoo.com வலைத் தளம் சென்று உங்கள் அக்கவுண்ட் டைத் திறந்து கொள்ளுங்கள்.

2. உங்கள் அக்கவுண்ட் தளத்தின் வலது பக்கம் ஒரு ஆப்ஷன்ஸ் லிங்க் இருக்கும். இதனை நான்கு டேப்களான mail, contacts, calendar, மற்றும் notepad இருக்கும் இடத்திற்கு எதிராகப் பார்க்கலாம்.

3. இதில் இரண்டாவதாக உள்ள என்பதில் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் லிங்க்குகளில் மூன்றாவதாக உள்ள general preferences என்பதில் கிளிக் செய்திடவும்.

4. பின் இதில் மூன்றாவதாக உள்ள Composing Emails என்பதில் color and graphics (html) என்றும் plain text என்றும் இரண்டு ஆப்ஷன்ஸ் கிடைக்கும். உங்களுக்கு பிளெய்ன் டெக்ஸ்ட் வேண்டும் என்பதால் இரண்டாவதாக உள்ளதைத் தேர்ந்தெடுத்து பின் வெளியேறவும். இனி உங்கள் மெயில் பிளெய்ன் டெக்ஸ்ட்டாக நண்பர்களுக்குச் செல்லும்.

No comments: