Thursday, July 3, 2008

வேர்ட் - தெரிந்ததும் தெரியாததும்...!


* வேர்டில் ஒரு டாகுமெண்ட் பைலில் ஒரு சொல் எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டிருக் கிறீர்களா? தொடர்ந்து அதே சொல்லைத் தேட Find and Replace விண்டோவினை திறந்தே வைத்திருக்க வேண்டியதில்லை. ஜஸ்ட் ShiftF4 அழுத்தினால் போதும். தொடர்ந்து அந்த சொல் தேடப்பட்டு முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

* டாகுமெண்ட் ஒன்ற எடிட் செய்கையில் Format | Change Case பயன்படுத்தி எழுத்துக்களின் தன்மையை மாற்றுகிறீர்களா! இந்த டயலாக் பாக்ஸில் உங்களுக்கு ஐந்து ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இருந்தும் உங்களுக்குப் பயன்படுவது uppercase, lowercase மற்றும் title case என்ற மூன்று தான். இதனை ShiftF3 என்ற கீகளை அழுத்துவதன் மூலம் பெறலாம்.

* வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் எத்தனை சொற்களை நீங்கள் அமைத்திருக்கிறீர்கள் என்று தெரியவேண்டுமா? தொடர்ந்து அவ்வப் போது இதனை செக் செய் திட வேண்டுமா? இதற்கு View | Toolbars என்று சென்று அதில் Word Count என்ப தனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டூல்பாரை அப்படியே மவுஸால் அழுத்திப் பிடித்து ஏற் கனவே இருக்கும் டூல்பாரின் வலது பக்கத் திற்குக் கொண்டு சென்று உங்கள் திரையின் மேலாக விட்டுவிடவும். வேர்ட் கவுண்ட் டூல் பார் அங்கேயே இருக்கும்.

எத்தனை சொற்களை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று காட்டும் விண்டோவினை யும் நீங்கள் உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம். இதற்கு Tools | Customize | Toolbars என்று சென்று கிடைக்கும் விண்டோவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் இருக்கும் போது அளவை மாற்றும் பணியை மேற் கொள்ளலாம். இனி எப்போது சொற்களின் எண்ணிக்கை தெரியவேண்டும் என்றாலும் டூல்பாரில் உள்ள Recount பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் தெரிந்து கொள்ளலாம்.

* வேர்டில் டேஷ் கோடு மூன்றை டைப் செய்தால் வேர்ட் உடனே அதனை பெரிய திக்கான கோடாக மாற்றி விடும். இதனை நீக்கும் வழியும் உடனே கிடைக்காது. இந்த செயல்பாடு வேர்ட் புரோகிராமில் பதியப்படும் போதே அமைக்கப்பட்டு விடுகிறது. இதனை நீக்க Format | Borders and Shading என்று செல்லவும். பின் Borders டேப்பில் கிளிக் செய்து None என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

* வேர்ட் சில பார்மட்டிங் பணிகளைத் தானாக மேற் கொள்ளும். இவற்றில் மிகவும் பயனுள்ள பணி + மற்றும் –– (ப்ளஸ் மற்றும் ஹைபன்) அடையாளங் களை பயன்படுத்தி டேபிள் களை உருவாக்குவதுதான். ஒரு + அடையாளத்தை டைப் செய்து பின் சில ஹைபன் அடையாளத்தை டைப் செய்திடுங்கள்.

மீண்டும் + அடையாளம் டைப் செய்து மீண்டும் ஹைபன் அடை யாளங்களை அமைத்திடுங்கள். பின் என்டர் தட்டினால் டேபிள் ரெடி. பின் இதனை வழக்கம்போல் டேபிளில் என்ன மாற்றங்கள் மற்றும் டேட்டாவை அமைப்பீர் களோ அதே போல் அமைத்துக் கொள்ளலம்.

* வேர்ட் ஸ்ப்ரட் ஷீட் அல்ல. ஆனாலும் சில எளிய கணக்குகளை உங்களுக்காக மேற்கொண்டு விடைகளைத் தரும். அவை என்னவென்று பார்ப்போமா!
முதலில் டேபிளில் தேவையான செல்களை அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு படுக்கை வரிசையில் உள்ள எண்களை கூட்டித் தெரிய வேண்டும் என வைத்துக் கொள்வோம். வரிசையாக எண்களை அமைத்துக் கொள் ளுங்கள். வலது பக்கம் உள்ள செல்லைக் காலியாக விடுங்கள். இப்போது அந்த காலியாக உள்ள செல்லில் கிளிக் செய்திடுங்கள். பின் Table | Formula தேர்ந்தெடுக்கவும். வேர்ட் உங்களுக்குத் தரும் ஆப்ஷன்களில் =SUM(LEFT) என்று இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தால் கூட்டல் ரெடி.

சரி, நெட்டு வரிசையில் உள்ள எண்களைக் கூட்ட வேண்டுமா? வரிசையாக எண்களை அமைத்து பின் கீழாக உள்ள செல்லைக் காலியாக வைத்துக் கொண்டு அதில் கிளிக் செய்து பின் Table | Formula தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் ஆப்ஷன்களில் =SUM(ABOVE) என்பதனைத் தேர்ந்தெடுத்தால் விடை ரெடி. சில வேளைகளில் மேலே உள்ள எண்களை மாற்றலாம். அப்போது மீண்டும் விடை உள்ள செல்லில் கர்சரைக் கொண்டு சென்று F9. அழுத்தவும். அப்டேட்டட் டோட்டல் கிடைக்கும்.

இதோ சில நினைவில் வைக்க வேண்டிய ஷார்ட் கட் கீகள்


ShiftF3: இந்த கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் lowercase, initial capitals, and uppercase என மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.


F4: நீங்கள் மேற்கொண்ட கடைசி வேலையை மீண்டும் ஏற்படுத்தும். இது எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். தேடுதல், டைப் செய்தல், பார்மட் செய்தல் என எந்த பணியாக இருந்தாலும் அது மீண்டும் மேற்கொள்ளப்படும்.


ShiftF4: இறுதியாக மேற்கொண்ட (Find) சொல் தேடும் பணி மீண்டும் மேற்கொள்ளப்படும்.


ShiftF5: கடைசியாக மாற்றங்கள் ஏற்படுத்திய இடத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இது பைலை மூடித் திறந்தாலும் மேற்கொள்ளப்படும். எடுத்துக் காட்டாக ஒரு டாகுமென்ட் பைலின் 73 ஆவது பக்கத்தில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொண்டு பின் பைலை மூடிவிடுகிறீர்கள். பின் சில நாட்கள் கழித்து அதனைத் திறக்கிறீர்கள். எதுவரை திருத்தங்கள் மேற்கொண்டோம் என்று தெரியவில்லை. கவலையே வேண்டாம். ShiftF5 கீகளை அழுத்தினால் போதும். கர்சர் நீங்கள் பைலை மூடிய இடத்தில் நிற்கும்.


CtrlF6: திறந்திருக்கும் டாகுமெண்ட்களிடையே செல்ல இந்த கீகள் பயன்படும்.


F7: ஸ்பெல் செக்கர் திறக்கப்படும்.


F12: Save அண் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்

வேர்ட் வீட்டில் பர்னிச்சர் மாற்றலாமா!


வேர்ட் தொகுப்பில் மேலாக மெனு பட்டன்கள் பைல் என்பதில் தொடங்கி வரிசையாக அதற்கான ஐகான்களுடன் அமைந்திருப்பதனை நாள்தோறும் பார்த்து பழகி பயன்படுத்தி வருகிறீர்கள். சில வேளைகளில் இந்த குறிப்பிட்ட டூல் பார் பட்டன் இதன் பக்கத்திலேயே இருந்தால் நன்றாக இருக்குமே ! என்று எண்ணியிருக்கலாம்.

குறிப்பாக நீங்கள் அடிக்கடி எழுத்துவகையை மாற்றி அமைப்பவர் என்றால் பாண்ட், அளவு ஆகிய விண்டோக்களை வேறு ஒரு மெனுவிற்கு அருகில் அமைத்திருக்கலாமே என்று எண்ணுகிறீர்களா! அல்லது இன்ஸெர்ட் பக்கத்தில் பார்மட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று விரும்புகிறீர்களா! இவ்வாறு வேர்ட் வீட்டில் உங்கள் பர்னிச்சர்களை இடம் மாற்ற திட்டமிடுகிறீர்களா! நீங்கள் விரும்பும்படி செய்திடத்தானே கம்ப்யூட்டர் இருக்கிறது.

முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு செங்குத்து பாராக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் வேர்ட் வீட்டில் பர்னிச்சர் மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள்.

No comments: