Friday, August 1, 2008

ஐகான்களை விருப்பப்படி அமைத்திட.!

விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்தில் நம் கம்ப்யூட்டர் ஐகான்களை நம் இஷ்டப்பட்ட இடைவெளியில் அமைக்கலாம். ஐகானின் சைஸைக் கூட மாற்றலாம்; என்ன அப்படியா! என்கிறீர்களா!! அது எப்படி என்று பார்ப்போம்.

டெஸ்க்டாப்பில் எங்காவது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties பிரிவைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். கிடைக்கும் விண்டோவில் உள்ள Appearance டேபில் கிளிக் செய்திடவும். அங்குள்ள Advance பட்டனில் அதன்பின் கிளிக்கிடவும். அங்கு Item என்ற பிரிவில் உங்கள் ஐகானை எப்படி எல்லாம் வளைக்கலாம் என்று காணலாம். எடுத்துக்காட்டாக நெட்டு வரிசையிலும் படுக்கை வரிசையிலுமாக ஐகான்கள் அமைக்கப்படும் இடைவெளியை மாற்றலாம். அனைத்தையும் முடித்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் செட் செய்தபடி ஐகான்கள் அமைந்திருக்கும்.

எழுத்துக்களை இன்ஸ்டால் செய்திட


எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் எழுத்து வகைகளை எப்படி இன்ஸ்டால் செய்வது என்றும் நீக்குவது என்றும் பார்க்கலாம். எழுத்து என்பது டாகுமென்ட் ஒன்றில் நாம் உருவாக்கும் வடிவங்களின் அமைப்பு என்று அடிப்படையில் கொள்ளலாம். மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படுகையில் சில வகை எழுத்துக்கள் தாமாக பதியப்பட்டே கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்:


Verdana, MS Serif, MS Sans Serif, Arial, Times New Roman, Symbl, Wingdings இவை எல்லாம் ட்ரூ டைப் (True Type) என்ற வகை எழுத்து வடிவங்களாகும். நீங்கள் புதியதாக ஒரு எழுத்து வகையினை கம்ப்யூட்டரில் பதிக்க விரும்பினால் அது இந்த வகையில் அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த எழுத்துவகை பைலை அப்படியே முதலில் ஜஸ்ட் காப்பிசெய்து கொள்ளுங்கள். பின் விண்டோஸ் டைரக்டரியைத் திறக்க வேண்டும். சில வேளைகளில் மறைக்கப்பட்ட டைரக்டரிகளைத் திறக்கவா என்று கேள்வி கேட்கப்படும்; அதற்கு ஓகே கிளிக் செய்தால் பாண்ட்ஸ் என்னும் போல்டர் காட்டப்படும். இதனைக் கிளிக் செய்து திறக்க வேண்டும். பின் வழக்கமாக பைலை பேஸ்ட் செய்வது போல பேஸ்ட் கட்டளை கொடுத்தால் அந்த எழுத்து வகை இன்ஸ்டால் செய்யப்படும். போல்டரை ரெப்ரெஷ் செய்தால் நீங்கள் இன்ஸ்டால் செய்த எழுத்து வகை அகர வரிசையில் பட்டியலில் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். எந்த எழுத்து வகையினையேனும் நீக்க எண்ணினால் இதே பாண்ட்ஸ் போல்டரைத் திறந்து குறிப்பிட்ட பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் கட்டளை கொடுத்தால் போதும். எழுத்துவகைகளுடன் செயல்படுகையில் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். எந்த எழுத்துவகையையும் பாண்ட்ஸ் போல்டரிலிருந்து நேரடியாக இமெயில் அட்டாச்டு பைலாக அனுப்ப முடியாது. எனவே அதனை வேறு ஒரு டிரைவ் அல்லது போல்டருக்குக் காப்பி செய்து பின்னரே அட்டாச் செய்து அனுப்ப முடியும்.

No comments: