Friday, August 1, 2008

எங்கிருந்து வந்தாய்!

நீங்கள் கூகுள் தரும் ஜிமெயில் புரோகிராமினை ஆர்வத்துடன் தொடர்ந்து பயன்படுத்துபவரா?
உங்களுக்கு வரும் ஸ்பேம் மெயில் அல்லது புதிய இமெயிலினை அது எங்கிருந்து வந்தது என்று அறிந்து கொள்ள ஆவலா? அப்படியானால் இதனை நீங்கள் நிச்சயமாய்ப் படிக்க வேண்டும். இந்த விபரத்திற்கான அடிப்படை விபரங்கள் இமெயிலின் ஹெடரில் இருக்கும். முதலில் எந்த மெயில் குறித்துத் தெரிய விரும்புகிறீர்களோ அந்த இமெயில் மெசேஜைத் திறந்து கொள்ளவும். அதன்பின் மேலாக வலது மூலையினைப் பார்க்கவும்.

அங்கு ஒரு அம்புக் குறி இருக்கிறதா? அதில் கிளிக் செய்திடவும். இதில் கீழ் நோக்கி ஒரு மெனு விரியும். இதில் Show Original என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுக்கு பல சொற்கள் குவிந்து பல வகை வரிசையாய் விளங்காத வகையில் எண்களும் சொற்களும் இருக்கும். இதில் உங்களுக்குத் தேவையானது அந்த இமெயில் அனுப்பப்பட்ட ஐ.பி. முகவரிதான். அந்த குழப்பமான வரிசைகளை உற்று நோக்கினால் ஐ.பி. முகவரியினைக் கண்டறியலாம். ஐ.பி .முகவரி தெரிந்து விட்டதா? இது யாரிடமிருந்து எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று இன்னும் விபரமாகத் தெரிய வேண்டுமா? அப்படியானால் http://www.who.is என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அங்கு ஐ.பி. முகவரியினை டைப் செய்ய வேண்டிய இடம் ஒன்று இருக்கும். அதில் இந்த ஐ.பி. முகவரியினை பேஸ்ட் செய்திடவும்; அல்லது டைப் செய்திடவும். உடன் உங்களுக்கு யாரிடமிருந்து இந்த இமெயில் மெசேஜ் வந்தது என்ற விபரம் கிடைக்கும்.

No comments: