Friday, August 1, 2008

வேர்டில் பார் டேப்

வேர்ட் தொகுப்பில் டேப் பயன்படுத்துகையில் பெரும்பாலும் இடது, வலது, சென்டர் மற்றும் டெசிமல் டேப் நிறுத்தங்களைக் கையாண்டிருக்கிறோம். எப்படிப்பட்ட டேப் வரவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேர்ட் பிரேமில் இடது மேல் மூலையில் டேப் அடையாளம் இருக்கும். இதன் அருகே கர்சரைக் கொண்டு சென்றால் என்ன வகையான டேப் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது என்று காட்டப்படும். அதனைப் பயன்படுத்தலாம்; அல்லது வேறு வகையான டேப்பிற்கு அதன் மீது கர்சரைக் கிளிக் செய்து தேவையான டேப் கிடைத்தவுடன் அதனைப் பயன்படுத்தலாம்.

டேப்பின் உருவைக் கொண்டு அது இடதா, வலதா அல்லது சென்டரா என்று கவனிக்கலாம். ஆனால் பலர் இவை எதுவும் இல்லாத பார் டேப் என்று ஒன்று இருப்பதனைக் கண்டிருக்க மாட்டார்கள். அது இப்படி காட்சி அளிக்கும்.
இதன் பயன் என்ன? என்ற கேள்வி எழுகிறதா? நானும் உங்களைப் போலத்தான் கேள்வியைக் கேட்டுக் கொண்டு அதனை இயக்கிப் பார்த்தேன். இந்த படம் காட்டும் செயலைத்தான் இந்த வகை டேப் மேற்கொள்கிறது. இந்த டேப்பை எங்கு செட் செய்கிறீர்களோ அந்த இடத்தில் ஒரு நெட்டுக் கோட்டினை இந்த டேப் உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக பார் டேப்பினைத் தேர்ந்தெடுத்து ரூலரில் இரண்டு அங்குல அளவில் இதனை செட் செய்தால் கர்சர் இருக்கும் இடத்தில் ஒரு நெட்டுக் கோடு ஒன்று அமைக்கப்படும். டாகுமெண்ட்டில் இருக்கும் டெக்ஸ்ட் இந்த நெட்டுக் கோடு உருவாவதில் எந்த பிரச்னையையும் ஏற்படுத்துவதில்லை. டெக்ஸ்ட் இந்த கோட்டின் ஊடாகவும் அமைக்கப்படும். இவ்வாறு நெட்டுக் கோடு அமைப்பதனால் நாம் டெக்ஸ்ட்டை அட்டவணை ஏற்படுத்தாமலேயே ஓர் ஒழுங்குக்குக் கொண்டு வரலாம். டேப்களை இடம் மாற்றுவது போல இதனையும் மாற்றலாம். இந்த கோடுகளைக் கொண்டு டெக்ஸ்ட் அமைத்தபின் அல்லது இந்த கோடுகள் தேவையில்லை என்று உணர்ந்த பின் இவற்றை நீக்கிவிடலாம். இந்த கோட்டினைக் கொண்டு பல்வேறு செயல்பாடுகளை டெக்ஸ்ட் அமைப்பதில் மேற்கொள்ளலாம். செயல்படுத்திப் பாருங்கள். இதன் பல்வேறு பயன்பாடுகள் புரிய வரும்..

No comments: