உங்கள் பட்டன் எப்போதாவது காணாமல் போயிருக்கிறதா? நான் இங்கு குறிப்பிடுவது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் உள்ள பட்டன்களை. பலர் மிக அவசரமாக மெனுக்களைக் கையாள்கையில் தங்களை அறியாமல் சில அடையாளங்களை ஏற்படுத்தி Create Mail, Reply, Forward, Send/Receive, Delete போன்ற பட்டன்க ளை மறைந்து போகச் செய்துவிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் உங்கள் இமெயில் கடிதங்களை கையாள இவை வேண்டுமே. எப்படி காணாமல் போனதோ அப்படியே அவற்றை மிக எளிதாகத் திரும்பவும் கொண்டு வந்துவிடலாம்.
இந்த பட்டன்கள் எங்கு வழக்கமாக அமருமோ அந்த இடத்தில் காலியாக கிரேயாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Customize என்பதனைத் தேர்ந்தெடுங்கள். Current Toolbars என்று காட்டப்படும் பெட்டியில் Reset என்னும் பட்டனில் கிளிக் செய்திடுங்கள். அனைத்து பட்டன்களும் மீண்டும் திரும்ப அதனதன் இடத்தில் வந்து அமரும். நீங்கள் கூடுதல் மகிழ்ச்சியோடு உங்களுக்கான இமெயில் கடிதங்களைக் கையாளலாம்.
No comments:
Post a Comment