Wednesday, August 6, 2008

வட்டமும் சதுரமும் சரியாக வரையலாமா!

வேர்டில் சில தகவல்களை விளக்க நாமே சிறிய படங்களை டெக்ஸ்ட்டுடன் உருவாக்கு வோம். இவற்றிற்கான வட்டங்களையும் சதுரங்களையும் வரைய வேர்ட் தொகுப்பில் சாதனங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் பலரும் இதில் சற்று மனம் தளர்கின்றனர். எவ்வளவுதான் சரியாக மவுஸ் கொண்டு இழுத்தாலும் வட்டமும் சதுரமும் சரியாக அமையவில்லையே என குறைபட்டுக் கொள்கின்றனர். தேவையே இல்லை. இதற்கான சரியான கீகளைப் பயன்படுத்தினால் நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சரியாக வட்டமும் சதுரமும் அமையும். அது எப்படி என்று பார்க்கலாம்.

இந்த சூட்சுமம் ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளைப் பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. முதலில் டிராயிங் டூல் பாரில் சரியான டூலைத் தேர்ந்தெடுங்கள். உடன் உங்கள் கர்சர் ஒரு கூட்டல் அடையாளம் ஆக மாறும். இப்போது நீங்கள் வரைய தயாராகிவிட்டீர்கள். வரையத் தொடங்கும்முன் ஷிப்ட் கீயினை அழுத்திக் கொள்ளுங்கள். கீ அழுத்துவது அப்படியே தொடரட்டும். இப்போது வரையத் தொடங்குங்கள். வித்தியாசம் தெரிகிறதா. ஆம். இதுவரை சரியாக வராத வட்டம், சதுரம் மற்றும் பிற உருவங்கள் நன்றாக வருகின்றனவா? ஓகே. ஏதேனும் ஒரு முறை ஷிப்ட் கீயை அழுத்தாமல் வரையத் தொடங்கிவிட்டு பின் அடடா! ஷிப்ட் கீயை அழுத்த மறந்துவிட்டோமே என்று அங்கலாய்க்கிறீர்களா? கவலையே வேண்டாம். வரைவது பாதியில் இருக்கையில் ஷிப்ட் கீயை அழுத்துங்கள். வரைந்த பகுதி மற்றும் இனி வரையப் போகும் பகுதி அனைத்தும் சரியாக மாறிவிடுவதனைப் பார்க்கலாம். இன்னொன்றை கவனித்தீர்களா! நீங்கள் எந்த உருவம் வரைந்தாலும் அது இடது மூலையிலிருந்தேதான் தொடங்கும். அதாவது நீங்கள் எந்த பாய்ண்ட்டில் கிளிக் செய்கிறீர்களோ அந்த புள்ளி வரையப் போகும் உருவத்தின் இடது மூலையாக அமைகிறது. அடடா! நடுவில் இருந்து வரைய வேண்டும் என்றால் என்ன செய்வது? கவலையே வேண்டாம்.இங்கு தான் கண்ட்ரோல் கீ உதவுகிறது. கண்ட்ரோல் கீயை ஷிப்ட் கீக்குப் பதிலாக அழுத்திக் கொண்டு வரையத் தொடங்கினால் உருவத்தின் நடுப் பகுதியிலிருந்து நீங்கள் விரும்பும் டிசைன் கிடைக்கும். சில வேளைகளில் நாம் படத்தை வரைந்து விட்டு பின் குறிப்பிட்ட இடத்தில் அமைக்க அதனை நகர்த்த சிரமப்படுவோம். அது போன்ற இடங்களில் இந்த கண்ட்ரோல் கீ நமக்கு உதவி செய்கிறது. தேவையான இடத்தில் கர்சரை நடுநாயகமாக வைத்து வரைவதனைத் தொடங்கலாம். இந்த இரண்டு கீகளையும் இவ்வாறு படம் வரையும் சாதனத்துடன் இணைத்துப் பயன்படுத்தி சரியான முறையில் படங்களைப் பெறலாம். கிளிப் ஆர்ட் படங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை உங்கள் விருப்பப்படி மாற்றுகையில் இந்த இரண்டு கீகள் தரும் உதவி உங்களுக்குப் புரிய வைக்கும்.

2 comments:

Anonymous said...

Anything.

Anonymous said...

Shame and shame!