பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் தொகுப்புகள் நாம் சொல்ல வேண்டிய கருத்துக்களை தகவல்களை எடுத்துக் காட்ட நமக்கு வாய்த்திருக்கும் ஓர் அருமையான சாதனமாகும். நம்மில் பலர் ஒரு பிரசன்டேஷன் பைலைப் பல இடங்களில் காட்ட வேண்டியதிருக்கும். எடுத்துக்காட்டாக அலுவலகம் ஒன்றின் கிளை அலுவலகங்களுக்குச் சென்று பல அலுவலர் குழுக்களிடையே இதனைப் பயன்படுத்தி விளக்க வேண்டியதிருக்கும்.
இந்த நிலையில் இதில் தேதி மற்றும் நேரத்தை நாம் அமைத்திருந்தால் பின்னாளில் இதனைப பயன்படுத்துகையில் பழைய நாள் தேதி இருந்தால் நம்முடைய செயலாற்றும் பண்பே கேள்விக் குறியாகவும் கேலியாகவும் மாறிவிடும். இதனைத் தடுக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பைல் தானாக அன்றைய நாள் மற்றும் நேரத்தை அமைத்துக் கொள்ளும்படி செட் செய்திடலாம். முதலில் Insert கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Date and Time என்பதைத் தேர்ந்தெடுங்கள். பின் உங்களுக்கு Header and Footer டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள டேப்களில் Slide என்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதில் உள்ள Date and time என்பதில் டிக் அடையாளம் இருக்கிறதா என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் ஏற்படுத்துங்கள். பின்னர் Update automatically என்ற ரேடியோ பட்டனை அழுத்தவும்.
இதனைக் கீழாக விரித்தால் சிறிய மெனு கிடைக்கும். இதில் தேதி உங்களுக்கு எந்த பார்மட்டில் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். நீங்கள் விருப்பப்பட்டால் டைட்டில் ஸ்லைடில் இது அமையாமல் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு Don’t show on title slide என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். அதன்பின் Apply to All என்பதனைக் கிளிக் செய்து வெளியேறவும். இனி எப்போது நீங்கள் அந்த பைலை ரீலோட் செய்தாலும் அன்றைய தேதி மற்றும் நேரம் காட்டப்படும்.
No comments:
Post a Comment