Friday, August 1, 2008
போல்டரில் உள்ளவற்றிற்கான வியூ
ஒரு போல்டரில் உள்ள பைல்களை எந்த வியூவில் பார்ப்பது என்பதனை நீங்கள் செட் செய்திடலாம். பல்வேறு தோற்றங்களில் இந்த பைல்களை நாம் பார்க்கலாம். படங்கள் அடங்கிய பைல்களாக இருந்தால் தம்ப் நெயில் என்னும் முறையில் அவற்றின் சிறிய தோற்றங்கள் இருக்கும்படி செய்திடலாம். வேர்ட் டாகுமெண்ட் போன்ற பைல்கள் இருந்தால் பட்டியலாகப் பார்க்கலாம். இதன் மூலம் பைல்களைப் பெயர் வாரியாக அடுக்குவது எளிது. மேலும் பைல் உருவாக்கப்பட்ட நாள், இறுதியாகத் திருத்தப்பட்ட நாள் ஆகியவற்றைக் காணலாம். இதற்கு ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து மை டாகுமெண்ட்ஸ் திறக்கவும். அதன் பின் எந்த போல்டருக்கான தோற்றத்தை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த போல்டரில் டபுள் கிளிக் செய்திடவும். பின் டூல்பாரில் வியூ என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் என்று பல பிரிவுகள் இருக்கும். இவற்றைக் கிளிக் செய்து பார்த்து இவற்றில் எது உங்களுக்குத் தேவையோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் மூடவும். இனி இந்த போல்டரைத் திறக்கும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த தோற்றமே கிடைக்கும். இந்த விருப்பத்தினை எப்போது வேண்டுமானாலும் மேலே குறிப்பிட்டபடி மாற்றிக் கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment