Friday, August 22, 2008

வேர்ட் டிப்ஸ்

வேர்டில் பாரா இன்டென்ட்

வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளிவிட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம்.

இதில் இன்டென்ட் மற்றும் ஹேங்கிங் இன்டென்ட் என்று வகைகள் உண்டு. இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு அமைப்பது. ஹேங்கிங் இன்டென்ட் என்பது முதல் வரி தவிர்த்து மற்ற வரிகளை இன்டென்ட் செய்து ஸ்பேஸ் விட்டு அமைப்பது. இதற்கு கீ போர்டில் இருந்து கைகளை எடுத்து பின் மவுஸ் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் கர்சரை வைத்து பின் மீண்டும் கீ போர்டு பயன்படுத்தி இன்டென்ட் அமைக்கிறோம். மவுஸ் இல்லாமல் கீ போர்டு மூலம் இன்டென்ட் அமைக்க கீழ்க் குறிப்பிட்டுள்ள கீகளைப் பயன்படுத்தவும்.

Ctrl + M கொடுத்தால் மொத்த பாராவும் அரை அங்குலம் நகர்ந்து கொடுக்கும். மேலும் அதிகம் நகர்ந்து செல்ல அடுத்தடுத்து கொடுக்கவும்.

Ctrl + Shift + M : கொடுத்தால் அரை அங்குலம் இன்டென்ட் இருப்பதைக் குறைக்கும். அதாவது ஏற்கனவே கொடுத்த இடைவெளியை முழு பாராவிற்கும் குறைக்கும்.

Ctrl + T : இந்த கீகள் ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்கு வலது புறமாக நகர்த்தும்.


Ctrl + Shift + T : ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்குக் குறைக்கும். கீ போர்டு மூலமாகவே இன்டென்ட் அமைப்பது எளிதாக உள்ளதா!


எனக்கு வேண்டாம் டிராயிங் கேன்வாஸ்


வேர்ட் தொகுப்பில் படம் ஒன்றினை இன்ஸெர்ட் செய்திட முயற்சிக்கையில் ஒரு டிராயிங் கேன்வாஸ் நமக்குக் காட்டப்படுகிறது. இந்த கேன்வாஸில் Create your drawing here என்று கிரே கலரில்ஒரு செய்தி காட்டப்படுகிறது. நாம் இங்கு படத்தை ஒட்டுகையில் அல்லது வரைய முற்படுகையில் பல வேளைகளில் இந்த கேன்வாஸுக்கு வெளியே படங்கள் செல்கின்றன. நாம் அவற்றை மீண்டும் இழுத்து அமைக்க வேண்டியுள்ளது. இது போன்ற கேன்வாஸ் இல்லை என்றால் நாம் நினைத்தபடி படத்தினை வரையலாம்; அல்லது ஒட்டலாம். ஆனால் இந்த கேன்வாஸ்வந்துவிடுகிறதே. என்ன செய்யலாம்? ஒன்றுமில்லை வேர்ட் தொகுப்பிடம் இந்த கேன்வாஸ் எல்லம் எனக்கு வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன் என்கிறபடி செட் செய்திட்டால் போதும். இதற்கு Tools மெனு சென்று Options பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் General என்னும் டேபைத் திறந்து கிடைக்கும் கட்டத்தில் “Automatically create drawing canvas when inserting AutoShapes” என்று இருக்கும் வரியின் முன்னால் டிக் செய்யபட்டிருந்தால் எடுத்துவிடவும். இனி மேல் நீங்களாக இதனை மாற்றும் வரை டிராயிங் கேன்வாஸ் வராது, வராது, வராது.

No comments: