Thursday, August 28, 2008

வேர்ட் ரூலரும் பாரா மார்ஜினும்

வேர்ட் தொகுப்பில் எல்லோரும் ரூலரை அமைத்து பயன்படுத்தி வருவீர்கள். இது ஒரு வரியின் நீளத்தையும் அதில் குறிப்பிட்ட இரு புள்ளிகளின் இடையே இருக்கும் அகலத்தையும் மற்றும் நெட்டு வாக்கில் இதே அளவையும் தெரிந்து கொள்ள தரப்பட்டிருக்கும் வசதி என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். இதில் இன்னும் பல கூடுதல் வசதிகளும் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

இந்த ரூலரில் தலைகீழாக சிறிய முக்கோணங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை எப்போதாவது பார்த்திருக் கிறீர்களா? இப்போது பாருங்கள். சரி, இவை எதற்காகத் தரப்பட்டுள்ளன? ஏன் சில நேரங்களில் இவை சிறிது தள்ளியும், சில இடங்களில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தும் அமைந்துள்ளன என்றும் இவற்றை நாமாக இழுத்துப் பிரித்தால் என்ன நடக்கும் என்று சற்று பார்த்திருக்கிறீர்களா? இல்லையா! இதோ இப்போது பார்க்கலாம். இந்த முக்கோணங்கள் எல்லாம் டெக்ஸ்ட்டில் உள்ள பாராக்களின் இன்டென்ட் எனப்படும் பத்தி இடைவெளியைக் குறிப்பனவாகும். இவற்றைப் பயன்படுத்தி பாரா இடை வெளியினை அமைக்கலாம். இதற்கென பார்மட் மற்றும் பாராகிராப் விண்டோ சென்று குறிப்பிட்ட பாரா மார்ஜின் அமைத்திடாமல் இந்த முக்கோணங்களைப் பயன்படுத்தியே அவற்றை ஏற்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது என்று பார்ப்போம். ரூலர் கோட்டின் இடது புறம் ஓரத்தில் ஹவர் கிளாஸ் தோற்றத்தில் இரு முக்கோணங் களைக் காணலாம். சரியாகப் பார்த்தால் இதில் மூன்று வித பாரா அடையாள கருவிகள் உள்ளன. இவற்றை பிரித்துப் பயன்படுத்தலாம். மேலாக உள்ள முக்கோண அடையாளம் முதல் வரி மார்ஜினிலிருந்து எவ்வளவு தள்ளி உள்ளது என்பதைக் காட்டுகிறது.

இந்த முக்கோணத்தை எங்கு இழுத்துவிடுகிறீர்களோ அந்த இடத்திலிருந்து (Firstline Indent) ஒரு பாராவின் முதல் வரி தொடங்கும். கீழாக முக்கோணம் இழுத்துவிடப்படுவதால் ஏற்படும் இடத்தில் அந்த பாராவின் மற்ற வரிகள் தொடங்கும். இதற்கு ஆங்கிலத்தில் ஹேங்கிங் இன்டென்ட் (Hanging Indent) என்று பெயர். இந்த இரு முக்கோணங் களின் கீழாக ஒரு சிறிய செவ்வகம் தெரிகிறதா? பாராவின் இடது மார்ஜினைக் குறிக்கிறது.

இதனை லெப்ட் இன்டென்ட் (Left Indent) என்று அழைப்பார்கள். இதனை இழுத்தால் முதல் இரு முக்கோணங்களும் ஒன்றாக இழுக்கப்படும். இதனால் ஒரே இடத்தில் அனைத்து வரிகளுக்கும் பாரா மார்ஜின் ஏற்படும். நமக்கு இரு வேலைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கும் நேரம் மிச்சமாகிறது. இந்த ரூலரிலேயே வலது பக்கம் ஒரு முக்கோணத்தைப் பார்க்கலாம். இதனை இழுத்து அமைப்பதன் மூலம் பாரா ஒன்றின் வலது மார்ஜினை அமைக்கலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் எந்த பாராவின் மார்ஜினை மாற்றி அமைக்க வேண்டும் என முடிவெடுக்கிறீர்களோ அந்த பாராவில் ஏதாவது ஒரு வரியில் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் எந்த மார்க்கரை நகர்த்த வேண்டும் என்பதை முடிவெடுக்கவும். அதன் மீது மவுஸ் பாய்ண்ட்டரைக் கொண்டு செல்லவும். பின் மவுஸின் இடது பக்கத்தைக் கிளிக் செய்து அழுத்திப் பிடித்து ரூலர் கோட்டின் மீது இழுக்கவும்.

இழுத்துச் சென்று எங்கு மார்ஜின் இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களோ அங்கு விட்டு விடவும். இவ்வாறு இழுக்கையில் புள்ளிகள் நிறைந்த கோடு ஒன்று உருவாகி நகர்ந்து நீங்கள் இழுக்கும் திசையில் உங்கள் கர்சருடன் நகர்ந்து செல்வதனைப் பார்க்கலாம். இந்த கோடு உங்கள் பாராவினை ஒழுங்காக அமைத்திட உதவுகிறது. இப்போது இந்த முக்கோணங்களும் செவ்வகமும் எதற்காகத் தரப்பட்டுள்ளன என்றும் இவற்றை இழுத்து வந்து சில ஒழுங்குகளைப் பாராவில் அமைக்கலாம் என்பதனையும் உணர்ந்திருப்பீர்கள். இனி இவற்றைப் பயன்படுத்துகையில் எங்கு மாற்றங்கள் ஏற்படும் என்பதனைப் பார்க்கலாம். பாரா ஒன்று டைப் செய்யப் படுமுன் இந்த பாரா மார்க்கர்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால் அந்த மாற்றம் இதன் பின் ஏற்படுத்தப்படும் பாராக்கள் அனைத்திலும் கடைப் பிடிக்கப்படும். இதற்கு முன் ஏற்படுத்திய பாராக்களில் மாற்றங்கள் ஏற்படாது.

ஏற்கனவே டைப் செய்த பாராவில் நீங்கள் மார்ஜின் வெளியில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால் அந்த பாராவில் கர்சரைக் கொண்டு சென்று பின் மார்க்கர்களை நகர்த்தவும். நகர்த்தும் மார்க்கரின் தன்மைக்கேற்ப பாராவில் மாற்றம் ஏற்படும். இது அந்த பாராவில் மட்டும் மாற்றத்தினை ஏற்படுத்தும். ஏற்கனவே டைப் செய்த பல பாராக்களில் நீங்கள் விரும்பும் மார்ஜின் இடைவெளியை ஏற்படுத்த விரும்பினால் இந்த மார்க்கர்களை நகர்த்தும் முன் மாற்ற விரும்பும் பாராக்களை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அதன்பின் பாரா மார்க்கர்களை நகர்த்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரா வெங்கும் இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

என்ன! பாரா இடைவெளி களையும் மார்ஜின்களையும் எப்படி அமைப்பது என்று தெரிந்து கொண்டீர்களா! மார்ஜினுக்கு பொங்கல் காப்பு கட்டியது போலத் தோற்றமளித்த முக்கோணங்கள் எதற்காக உள்ளன என்று தெரிந்து கொண்டீர்களா! இனி உங்கள் விருப்பத்திற்கேற்ப மார்ஜின்களுடன் பாராக் களை அமைத்து பாருங்கள்.

No comments: