வேர்டில் புட் நோட் அமைக்கும் செயல்பாடு புட்நோட் என்பது டெக்ஸ்ட் ஒன்றில் சிறிய விளக்கத்தினைத் தனியாகத் தருவதற்காக பக்கத்தின் அடிப்பகுதியில் தனியே அமைக்கும் டெக்ஸ்ட் ஆகும். இந்த செயல்பாட்டில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது என எண்ணுகிறீர்களா! சரி அமைக்கலாம். உங்கள் டெக்ஸ்ட்டின் கடைசி பக்கம் எப்படி உள்ளது? அங்கு புட் நோட்டினை பக்கத்தின் அடிப்பாகத்தில் அமைத்தால் டெக்ஸ்ட்டிற்கும் நோட்டிற்கும் இடையே காலி இடைவெளி அமையும். அல்லது டெக்ஸ்ட் முடிந்த உடனேயே அது பக்கத்தின் முன்பகுதியாக இருந்தாலும் அங்கு புட் நோட்டை அமைக்கலாம்.
உங்களுடைய விருப்பம் என்ன? இதற்கு வேர்ட் துணைபுரிகிறது. வேர்ட் தொகுப்பில் Insert மெனு சென்று அங்கு Reference சப்மெனு தேர்ந்தெடுக்கவும். பின் அதில் Footnote என்னும் பகுதியைக் கிளிக் செய்திடவும்.
இப்போது Footnote and Endnote என்று ஒரு சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீங்கள் புட்நோட் எங்கு அமைய வேண்டும். அது என்ன வடிவத்தில் இருக்க வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவம் டெக்ஸ்ட் முழுவதும் இருக்க வேண்டுமா அல்லது குறிப்பிட்ட வரியில் இருந்து இருக்க வேண்டுமா என்பதனை முடிவு செய்து தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இந்த மெனுக்கள் நாம் விரும்பியபடி புட் நோட்களை அமைக்க உதவுகின்றன.
வேர்டில் ஜம்ப் செய்தால்
பெரிய வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் டெக்ஸ்ட்டை ஓரிடத்தில் குறுக்கே இணைக்கிறோம். இணைத்துவிட்டு பின் கர்சரை பல பக்கங்கள் தள்ளி கொண்டு செல்கிறோம். அங்கு சில எடிட்டிங் வேலைகளை மேற்கொள்கிறோம். இப்போது முதலில் எந்த இடத்தில் டெக்ஸ்ட்டை இணைத்தோம் என்று அறிய ஆசைப்படுகிறீர்கள். ஆனால் எந்த இடம் என்று தான் தெரியவில்லை. கவலைப்பட வேண்டாம். ஷிப்ட் + எப் 5 கீயை அழுத்துங்கள். கடைசியாக நீங்கள் எங்கு எடிட்டிங் செய்தீர்களோ அங்கு கர்சர் செல்லும். மீண்டும் மீண்டும் இந்த கீகளை அழுத்த முன்பு கர்சர் இருந்த இடத்திற்குக் கூட்டிச் செல்லும். இப்படியே பின் வழியாக முன்பு எடிட்டிங் செய்த ஐந்து நிகழ்வுகளுக்குச் செல்லும். ஆனால் எந்த இடத்திலும் நீங்கள் டெக்ஸ்ட் எதனையும் இடைச் செருகல் செய்திடவில்லை என்றால் இந்த கீகள் செயல்பாடு ஒரு விளைவையும் ஏற்படுத்தாது.
அனைத்தும் செலக்ட் செய்திட
வேர்ட் தொகுப்பில் சில கீகளின் செயல்பாடுகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நாம் நினைக்கும் வேளையில் ஒரு சிலர் அது குறித்து அறியாமலேயே இருக்கின்றனர். சொன்னால் அப்படியா! என்கின்றனர். வேர்டில் டெக்ஸ்ட் முழுவதும் செலக்ட் செய்திட, அது ஒரு பக்கமாக இருந்தாலும் இருபது பக்கமாக இருந்தாலும், என்ன செய்கிறோம். மவுஸ் கர்சரை முதல் வரியில் பிடித்து அப்படியே இழுத்து இறுதி வரை கொண்டு சென்று செலக்ட் செய்கிறோம்; பின்னர் காப்பி செய்கிறோம்; அல்லது அழிக்கிறோம். ஆனால் பெரும்பாலான வேளைகளில் மவுஸைப் பிடித்து இழுக்கையில் அழுத்தத்தை விட்டுவிட்டு மீண்டும் முதல் வரியிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது. இதற்கான பிற வழிகளைப் பார்ப்போம். இரண்டு வழிகள் உள்ளன. Edit மெனு சென்று பின் Select AllIz தேர்ந்தெடுப்பது.
இது முழு டெக்ஸ்ட்டையும், படங்கள் உட்பட, தேர்ந்தெடுத்துக் கொடுக்கும். இவ்வாறு தேர்ந்தெடுத்தனை பின் எங்கு வேண்டுமென்றா லும் ஒட்டலாம். இன்னும் வேகமாகச் செயல்பட ஒரு குறுக்கு வழி உள்ளது. அது கண்ட்ரோல் மற்றும் ஏ (Ctrl + A) கீகளை அழுத்துவதுதான். இதுவரை அறிந்திராவதர்களுக்கு இது ஒரு புதிய வழி. தெரிந்தவர்களுக்கு ஒரு நினைவூட்டல்.
No comments:
Post a Comment