Tuesday, May 6, 2008

டிஸ்க் ரைட்டிங்

எளிய இனிய வேலையானது பிளாப்பிகளுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நாட்களில் பைல்களைப் பதிவு செய்து எடுத்துச் செல்ல ஒரு வரப்பிரசாதமாக வந்த சிடி ரைட்டர்கள் தற்போது எல்லைகளை விரித்து எல்லா வகைகளிலும் கை கொடுக்கும் சாதனமாக மாறிவிட்டன. திறன், வேகம் மற்றும் எளிமை ஆகிய தன்மைகளும் மிக உயர்வாக இவற்றில் அமைந்து விட்டன. போகிற போக்கில் கையாண்டு நமக்குத் தேவையானவற்றை வடிவமைத்துப் பெறுவதில் இந்த சிடி மற்றும் டிவிடி ரைட்டர்கள் பெரிய அளவில் கை கொடுக்கின்றன. அவற்றின் செயல்பாடுகள் குறித்து காணலாம்.



புதிய டிவிடி ரைட்டர்கள் பலவகையான டிஸ்க்குகளை வடிவமைக்கும் திறன் கொண்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக உங்கள் பழைய வீடியோ டேப்களில் இருக்கும் படங்களை சிடி மற்றும் டிவிடிக்களில் அமைக்கலாம். நீங்களே எடுக்கும் வீட்டு நிகழ்ச்சிகளை எடிட் செய்து வீடியோ டிவிடிக்களைத் தயாரிக்கலாம்.



டிவிடி ரைட்டர் என்றாலும் ஆடியோ சிடிக்களை உருவாக்கவும் செய்திடலாம். ஆடியோ வீடியொ என்றில்லாமல் எந்த டிஜிட்டல் பைல்களையும் பாதுகாப்பாக பதிந்து வைத்திடும் மீடியமாக இன்று டிஸ்க்குகள் பயன்படுகின்றன.


ஒரு சிடி அல்லது டிவிடியில் உங்கள் கற்பனைக்கேற்ற ஆடியோ அல்லது வீடியோ பைல்களைப் பதிந்து வைத்திட முதலில் காலியான புதிய சிடி, டிவிடி வேண்டும். இதனை வாங்கப் போனால் எத்தனையோ வகைகளைக் காட்டி கடைக்காரர் உங்களைக் குழப்பலாம். அவற்றின் வகைகளை இங்கு பார்ப்போம்.


சிடியைப் பொறுத்தவரை இரண்டு வகையில் பதிவு செய்யக் கூடிய சிடிக்கள் உள்ளன. ஏறத்தாழ 700 எம்பி அளவில் டேட்டாக்களை இதில் பதியலாம். நல்ல வண்ணத்தில் அமைந்த 450 போட்டோக்கள் அல்லது 150 எம்பி3 பாடல்களை இதில் பதியலாம். சிடி–ஆர் (CDR)எனப்படும் சிடியில் ‘R’என்பது ரெகார்டபிள் அதாவது பதிவு செய்யக் கூடியது என்பதைக் குறிக்கிறது. காலியாக இவற்றை வாங்கி இதில் ஒருமுறை பதியலாம். பதிவு செய்த இடத்தில் மீண்டும் பதிய இயலாது. CDRW டிஸ்க்குகளில் RW Rewritable என்பது மீண்டும் மீண்டும் அழித்து டேட்டாவை எழுதலாம் என்பதைக் குறிக்கிறது.


டிவிடிக்களைப் பொறுத்தவரை அவற்றின் வகைகள் இன்னும் அதிகமாகும். டிவிடி ஒன்றில் பொதுவாக 4.7 கிகாபைட் அளவிலான தகவல்களைப் பதியலாம். இதிலும் அடிப்படையில் டிவிடி–ஆர் மற்றும் டிவிடி – ஆர்.டபிள்யூ என்ற இரு வகைகள் உள்ளன. 2000 நல்ல வண்ண புகைப்படங்களை ஒரு டிவிடியில் பதியலாம்.


டிவிடியைப் பொறுத்தவரை அதில் + மற்றும் – அடையாளங்கள் அவற்றை வேறுபடுத்துகின்றன. இதனை ப்ளஸ் பார்மட் மற்றும் மைனஸ் பார்மட் என்றும் அழைக்கின்றனர். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ரைட்டர் எந்த வகை பார்மட் டிவிடியில் எழுதும் திறன் கொண்டவை என்று பார்த்து அதற்கான டிவிடியை வாங்க வேண்டும். பெரும்பான்மையான கம்ப்யூட்டரில் உள்ள டிவிடி ரைட்டர்கள் இந்த இரண்டு வகை பார்மட்களிலும் எழுதக் கூடியதாகத்தான் உள்ளன. இருந்தாலும் அதன் முகப்பு கதவில் இந்த அடையாளம் இருக்கும். அதனைப் பார்த்து அறிந்து கொள்வது நல்லது.


அண்மையில் இந்த டிவிடியில் புதிய வகை ஒன்று சந்தைக்கு வந்து கூடுதலாக சிறிது குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. அது டிவிடி டபுள் லேயர் (DVD Double Layer) டிஸ்க் என அழைக்கப்படுகிறது.


இந்த வகை டிஸ்க்குகளில் 8.5 கிகா பைட் அளவுகளில் தகவல்களைப் பதியலாம். தற்போது கடைகளில் டபுள் லேயர் ஆர்.டபிள்யூ வகை டிவிடிக்கள் கிடைக்கின்றன. டபுள் லேயர் டிஸ்க்குகளை DL என எழுதிக் குறிப்பிடுகின்றனர். உங்களிடம் டபுள் லேயர் டிஸ்க் ரைட்டர் இல்லாமல் இருந்து நீங்கள் அப்படி ஒன்றை விரும்பினால் கூடுதல் டிவிடி டபுள் லேயர் ரைட்டர் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தலாம். யு.எஸ்.பி. டிரைவில் இயங்கும் வகையில் இவை அமைக் கப்பட்டு கிடைக்கின்றன. இதன் விலை ரூ. 4,500க்குள் தான் இருக்கிறது.



சிடிக்களை உருவாக்கலாமா?





சிடிக்களில் தகவல்களை எழுத தனியே சாப்ட்வேர் புரோகிராம் வேண்டும் எனப் பலர் எண்ணுகின்றனர். அது தவறு. மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. சுருக்கமாக அந்த வழியைக் காண்போம்.


My Computer சென்று கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் சிடி/டிவிடி ட்ரைவிற்கான ஐகானில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Properties கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் Recording டேபில் கிளிக் செய்திடவும்.



அதற்கு முன் மேலாக உள்ள ஆப்ஷன் Enable CD Recording on this drive என்பது டிக் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் முக்கியமானது சிடி/டிவிடிக்களில் டேட்டா எழுதப்படும் வேகம். பொதுவாக எல்லாரும் ‘Fastest’ என்ற பிரிவைத் தேர்ந்தெடுப்பார்கள். இருப்பினும் குறைந்த வேகத்தையும் சில வேளைகளில் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும்.



பழைய வகை கம்ப்யூட்டர்கள், குறைவான வேகத்தில் இயங்கும் ரைட்டர்கள், டிஸ்க்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகையில் சற்று குறைவான வேகம் அமைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் டேட்டா எழுதி முடித்தவுடன் உங்கள் சிடி ரைட்டரின் கதவு திறக்கப்பட்டு சிடி வெளியே நீட்டப்பட வேண்டுமா என்பதுதான். இது உங்கள் பிரியத்தைப் பொறுத்தது. எழுதிய பைல்கள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமானால் இந்த ஆப்ஷனை ஒதுக்கிவிடலாம். எழுதியபின் டிஸ்க் டிரைவில் கிளிக் செய்து என்ன எழுதப்பட்டுள்ளது என்பதனைப் பார்க்க இது உதவிடும். சிடி–ஆர் டிஸ்க் என்றால் அப்படியே போட்டு டேட்டா பைல்களை எழுதத் தொடங்கி விடலாம். சிடி – ஆர் டபிள்யூ டிஸ்க் ஒன்றை முழுமையாகப் பயன்படுத்த எண்ணினால் அதில் உள்ள பைல்களை அழிக்க வேண்டும். சிடி ரைட்டிங் டாஸ்க் பேனில் இதற்கான ஆப்ஷனை இயக்கிஅழித்துவிடலாம். இப்போது சிடியில் பைல்களை எழுத இரண்டு விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோக்களை திறக்கவும். ஒன்று எழுதப்பட வேண்டிய பைல்களுக்கானது; இன்னொன்று எழுதப்பட வேண்டிய சிடிகளுக்கானது. எந்த எந்த பைல்கள் எழுதப்பட வேண்டுமோ அவற்றை இழுத்துவந்து சிடி டிரைவ் போல்டரில் போடவும். இவை காப்பி செய்யப்பட்டுவிட்டது போல் தோன்றினாலும் சிடியில் காப்பி செய்யப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்கில் இதற்கென ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட போல்டரில் காப்பி செய்யப்படும். இது நீங்கள் பைல்களை எழுதுவதற்கான பர்னிங் கட்டளை கொடுப்பதற்காகக் காத்திருக்கும். பைல்களை காப்பி செய்தவுடன் மை கம்ப்யூட்டரில் சிடி டிரைவைத் திறந்து இடது புறமாக உள்ள பிரிவில் Write these files to the CD என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். சிடிக்கு ஒரு பெயர் கொடுத்து Next என்பதில் கிளிக் செய்க. பைல்கள் தயார் செய்யப்பட்டு எழுதப்படும். எழுதி முடிந்தவுடன் நீங்கள் செட் செய்ததற்கேற்ப சிடி ட்ரே வெளியே வரும்; அல்லது அப்படியே நீங்களாக அதனை எடுக்கும் வரை இருக்கும்.

_________________


டிவிடி ரைட்டிங்:



அதிக அளவில் டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் அமைக்க டிவிடி தேவைப்படுகிறது. விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத்திருப்பவர்கள் தான் மேலே சிடிக்களுக்குத் தந்தபடி எளிதாக டிவிடிக்களில் எழுத முடியும். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் டிவிடிக்களை எழுத வசதி தரப்படவில்லை. எனவெ கூடுதல் சாப்ட்வேர் தேவையாய் உள்ளது. இவற்றில் ராக்ஸியோ (www.roxio.com) மற்றும் நீரோ (www.nero.com) புகழ் பெற்றவை. உங்களின் டிவிடி ரைட்டருடன் பெரும்பாலும் நீரோ சாப்ட்வேர் தரப்படுகிறது.
டிவிடி ரைட்டரைப் பொருத்துகையில் இந்த சாப்ட்வேர் தொகுப்பும் பதியப்பட்டிருக்கும். இவற்றைப் பயன்படுத்தி சிடியைப் பதியும் அதே வழிகளில் டிவிடிக்கேற்ற ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுத் துப் பதியலாம். இவை இல்லாதவர்கள் கவலைப் பட வேண்டியதில்லை. இன்னொரு எளிய, கையாள மிகவும் இலகுவான ஒரு புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் பைனல் பர்னர் (ஊடிணச்டூ ஆதணூணஞுணூ) என்பதாகும். இந்த இலவச புரோகிராமினை www.tinyurl.com/22nvab என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெறலாம். இதனை டவுண் லோட் செய்து கம்ப்யூட்டரில் பதிப்பது எளிது.


சிடி/டிவிடியில் பதிவதற்கான இன்டர்பேஸ் தொகுப் பும் மிக அருமையாக படிப்படியாகத் தரப்பட்டுள்ளது. டிவிடியில் தகவல் பைல்கள் என்றாலும் ஆடியோ அல்லது வீடியோ பைல்கள் என்றாலும் அதற்கான ஆப்ஷன்கள் அனைத்து பர்னிங் புரோகிராம்களிலும் வரிசையாகத் தரப்பட்டுள்ளன. ஓரிரு முறை இதனைப் பயன்படுத்தினால் பின்னர் வேகமாக இவற்றைக் கையாளமுடியும். அந்த அளவிற்குஇந்த புரோகிராம்கள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. ரைட்டர்களின் விலையும் குறைந்துள்ளன. எனவே இவற்றை வாங்கி பயன்படுத்துங்கள்.

No comments: