புதிய கம்ப்யூட்டருடன் குறைந்த கால அளவில் பயன்படுத்தக் கூடிய ஆண்டி வைரஸ் பேக்கேஜ் ஒன்று தரப்படும். மேக் அபி, சைமாண்டெக் அல்லது லோக்கல் பேக்கேஜ் என எதனையாவது கொடுத்திருப்பார்கள்.
அண்மையில் புதிய கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி இருக்கிறீர்களா? அப்படியானால் இந்த குறிப்புகள் உங்களுக்குத்தான். இந்த கம்ப்யூட்டர்கள் எல்லாமே விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 2 இணைத்துத்தான் தரப்படுகின்றன. ஆனால் அதற்குப் பின் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான செக்யூரிட்டி அப்டேட் தொகுப்புகள் எதனையும் இணைத்துத் தரவில்லை.
எனவே பாதுகாப்பினை ஒட்டி கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்கவும். உங்கள் மோடத்திலிருந்து கம்ப்யூட்டர் இணைப்பை எடுத்துவிடவும். இன்டர்நெட்டில் இணைந்தவாறு கம்ப்யூட்டரை இயக்க வேண்டாம். வழக்கமாக புதிய கம்ப்யூட்டருடன் குறைந்த கால அளவில் பயன்படுத்தக் கூடிய ஆண்டி வைரஸ் பேக்கேஜ் ஒன்று தரப்படும். மேக் அபி, சைமாண்டெக் அல்லது லோக்கல் பேக்கேஜ் என எதனையாவது கொடுத்திருப்பார்கள்.(இது ஆறு மாதம் அல்லது ஓர் ஆண்டு செயல்படும். பின் அதனை நீட்டிக்க நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.நீங்கள் இதைத்தான் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வேறு எந்த ஆண்டி வைரஸ் புரோகிராம் மீது நம்பிக்கை உள்ளதோ அதனை வாங்கி இன்ஸ்டால் செய்திட தயாராய் வைத்துக் கொள்ளுங்கள்.) இனி பாதுகாப்பு விஷயத்திற்கு வருவோம்.
Start மெனு சென்று Control Panel திறக்கவும். Security Center என்பதில் கிளிக் செய்து திறக்கவும். Firewall, Automatic Updates, மற்றும் Virus Protection ஆகியவை இயங்கும் வகையில் டிக் செய்யப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என்றால் அவ்வாறு அமைத்திடவும். இப்போது கூட அவசரப்பட்டு இன்டர்நெட்டில் இணைக்க வேண்டாம். இனி சிடி அல்லது டிவிடி டிரைவில் ஒரு காலி சிடி அல்லது டிவிடியை போடவும். பின் உங்கள் சிஸ்டத்தில் ரெகவரி டிஸ்க் உருவாக்கும் புரோகிராமை ஓட விட்டு ஒரு ரெகவரி சிடியைத் தயார் செய்திடவும்.
இவ்வாறு தயாரிக்கப்படும் டிஸ்க் பின் நாளில் சிஸ்டம் கிராஷ் ஆகும் போது அல்லது விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பைல்கள் கரப்ட் ஆகும்போது உங்களுக்குக் கை கொடுக்கும். இனி இன்டர்நெட் கேபிள்களை சிஸ்டத்துடன் இணைக்கவும். இதற்காக உங்கள் கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்தவோ ரீ ஸ்டார்ட் செய்திடவோ தேவையில்லை.
இணைத்தாலே கம்ப்யூட்டர் அதனைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டு இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்து விடும். உடன் விண்டோஸ் சிஸ்டம் தன்னை அப்டேட் செய்திடத் தேவையான பைல்களை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய தளம் சென்று தேடி அப்டேட் செய்திடத் தொடங்கும். அவ்வாறு தொடங்கவில்லை என்றால் ஸ்டார்ட் மெனுவில் விண்டோஸ் அப்டேட் புரோகிராமை நீங்களே இயக்கவும். எப்படியாவது இந்த புரோகிராமினை இயக்கி உங்கள் சிஸ்டத்தில் உள்ள சிஸ்டம் பைல்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்டட் பைல்களைக் கொண்டு வந்து இணைத்துவிடவும்.
No comments:
Post a Comment