Wednesday, May 28, 2008

இமெயில் அட்டாச்மெண்ட் இலவச ஸ்கேனிங்



என்னதான் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயங்கினாலும் சில வேளைகளில் நம் நண்பர்கள் அனுப்பும் அட்டாச்மெண்ட் பைல்களில் அவர்களுக்கும் தெரியாமலேயே சில வைரஸ்கள் வந்து விடுகின்றன. நம் ஆண்டி வைரஸ் புரோகிராம்களுக்கு அகப்படாத வைரஸ்கள் வந்து இறங்கி துவம்சம் புரிகின்றன.


இது போல வந்த ஒரு அட்டாச்டு பைலில் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் சோதித்தபின்னும் வைரஸ் இருக்கும் எனச் சந்தேகப்படுகிறீர்களா? நியாயமான சந்தேகம் தான். ஏனென்றால் எந்த சிஸ்டமும் அனைத்து வைரஸ்களையும் தடுக்கும் என நூறு சதவிகித கேரண்டி தர முடியாது. அப்போ என்ன செய்யலாம்? கவலையே பட வேண்டாம்.


இதற்கெனவே இணையத்தில் VirusTotalஎன்னும் சேவை கிடைக்கிறது. குறிப்பிட்ட பைலைத் திறந்து பார்க்காமல் அப்படியே scan@virustotal.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு பார்வேர்ட் செய்திடுங்கள். உங்களுக்கு வந்த கடிதத்தில் உள்ள அனைத்து வரிகளையும் எடுத்துவிடுங்கள்.


பார்வேர்ட் செய்யப்படும் இமெயிலின் சப்ஜெக்ட் லைனில் SCAN என்று மட்டும் டைப் செய்து அனுப்புங்கள். அடுத்த சில நொடிகளில் அந்த பைல் ஸ்கேன் செய்யப்பட்டு ரிப்போர்ட் ஒன்றுடன் திருப்பி அனுப்பப்படும். ரிப்போர்ட்டில் பல வைரஸ் ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அதில் எந்தவிதமான வைரஸ்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதனையும் காணலாம். வைரஸ் டோட்டல் என்னும் இந்த சர்வீஸ் மிக நம்பகமானது என்று உலக அளவில் பெயர் பெற்றது. இலவசமாக இந்த சேவை வழங்கப்படுகிறது. அதற்காக அட்டாச்மெண்ட்டாக வரும் அனைத்து பைல்களையும் அனுப்பி சுமை தர வேண்டாம். நம்பகமானவர்களிடமிருந்து அனுப்பப்பட்டு அவ்வப் போது அப்டேட் செய்யபட்ட வைரஸ் ஸ்கேனர்க ளால் கண்காணிக்கப்படும் பைல்களை அனுப்பாதீர்கள். அறிமுகம் இல்லாத நபர்கள் அனுப்பிய அட்டாச்டு பைல்களை மட்டும் அனுப்பி பெறுங்கள்.


No comments: