Monday, May 19, 2008

பவர் பாய்ண்ட் எழுத்துப் பிழைகளை மறைக்க!

பிழைகளைத் திருத்தி காட்டுவதே நல்லது என்றாலும் சில வேளைகளில் நேரம் இன்மையால் அல்லது உங்களுக்கென அடுத்தவர்கள் தயாரித்துத் தருவதால் பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனை எப்படி தவிர்க்கலாம்?

மிக அழகாக பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பு ஒன்றைத் தயார் செய்திருக்கிறீர்கள். அதனைப் பெருமையுடனும் சிரத்தையுடனும் உங்களுடன் பணி புரிபவர்கள் அல்லது மாணவர்களுக்குப் போட்டுக் காட்ட விரும்புகிறீர்கள். எவ்வளவு தான் முயற்சியுடன் ஸ்லைடுகளைத் தயாரித்திருந்தாலும் உங்களையும் அறியாமல் ஆங்கில சொற்களில் சில தவறுகள் இருந்தால் ஸ்லைடுகளைக் காட்டும்போது சொற்களில் சிகப்பு அடிக் கோடுகள் இருந்து உங்கள் மானத்தை வாங்கும்.



பிழைகளைத் திருத்தி காட்டுவதே நல்லது என்றாலும் சில வேளைகளில் நேரம் இன்மையால் அல்லது உங்களுக்கென அடுத்தவர்கள் தயாரித்துத் தருவதால் பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனை எப்படி தவிர்க்கலாம்? இந்த எழுத்துப் பிழைகளை மறைத்திட பவர் பாய்ண்ட்டில் வசதி உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும். Tools சென்று கிளிக் செய்து வரும் மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும்.



பின் கிடைக்கும் விண்டோவில் “Spelling and Style” என்ற டேபில் கிளிக் செய்திடவும். விரியும் மெனுக்கள் அடங்கிய விண்டோவில் “Hide all spelling errors” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஸ்பெல்லிங் தவறுகள் காட்டப்பட மாட்டாது. இருந்தாலும் செல்கின்ற இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் எல்லாம் இந்த தவறுகளை மறைக்கும் வேலையை மேற்கொள்ள முடியாது. எனவே தவறுகளை முதலிலேயே திருத்திக் கொள்வது தான் நல்லது.


தொடர்ந்து இசை கிடைக்க


பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைட் ஷோவின் போது மிக அருமையாகத் தயாரிக்கப்பட்ட ஸ்லைட் ஒன்றைக் காட்டி விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பின்னணியில் மெல்லிய இசை இசைக்கப்படும் வேண்டும் என்பதற்காக சவுண்ட் பைல் ஒன்றை இயங்குமாறு செய்திருக்கிறீர்கள்.




இந்த சவுண்ட் பைல் நீங்கள் குறிப்பிட்ட விநாடிகள் வரை இயங்கி நின்று விடும். ஆனால் உங்கள் பிரசன்டேஷனைப் பார்ப்பவர்கள் அதிக சந்தேகங்களை எழுப்பி உங்களிடமிருந்து தகவல்களைப் பெற முயற்சிக்கையில் நீங்கள் பேசுவீர்கள். பின்னணி இசை கிடைக்காது. எனவே சவுண்ட் பைல் இயங்குவதை ஒரு லூப்பில் அதாவது நீங்களாக நிறுத்தும் வரை ஒரு வளையத்தில் இயங்கு வண்ணம் அமைக்கலாம். அதற்கு கீழ்க்கண்ட முறையில் செட் செய்திடவும்.


சவுண்ட் பைலை ஒரு ஆப்ஜெக்டாக அமைத்திருக்கையில் ஒரு ஸ்பீக்கர் ஐகான் ஒன்று ஸ்லைடில் தெரியும். இதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Edit Sound Object என்ற பிரிவு தெரியும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள “Loop until stopped” என்ற பிரிவில் செக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து மூடவும். இனி அடுத்த ஸ்லைட் செல்லும் வரை, பிரசன்டேஷன் முடியும் வரை அல்லது நீங்களாக நிறுத்தும்வரை இசை தொடர்ந்து ரம்மியமாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.


பவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்


பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் சாப்வேர் நாம் பணியாற்ற பல்வேறு தோற்றங்களில் ஸ்லைடுகளைத் தருகிறது. அவை குறித்து இங்கே காணலாம். இந்த வியூக்களைக் காண View மெனுவில் கிளிக் செய்து கிடைக்கும் வியூ பட்டியலில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.



Normal: இந்த வியூவைத் தேர்ந்தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட்லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும்.



Slide Sorter : அனைத்து ஸ்லைட்களின் சிறிய தோற்றத்தினை இந்த வியூவில் பார்க்கலாம். அதிக ஸ்லைட்கள் உள்ள பிரசன்டேஷன் ஷோவில் இது மிக உதவியாய் இருக்கும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட ஸ்லைடைத் தேடிப் பெறுவதில் இந்த வியூ நம் பணியை எளிதாக்கும்.


Notes Page : அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்லைடின் தோற்றத்தினை சிறிதாகவும் அதற்கான நோட்ஸ் பேஜினைப் பெரிதாகவும் காட்டும். இது ஏறத்தாழ நார்மல் வியூ போலத்தான் செயல்படும். ஆனால் ஷோ அவுட்லைன் கிடைக்காது.


Slide Show : வியூ மெனுவில் இந்த மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அதன் மூலம் ஸ்லைட் ஷோவினை இயக்கலாம்.


Black and White : அப்போதைய ஸ்லைடின் கருப்பு வெள்ளைத் தோற்றத்தை பெரிய அளவிலும் வண்ணத் தோற்றத்தை சிறிய விண்டோவிலும் இந்த வியூவில் பார்க்கலாம். பிரசன்டேஷனின் அனைத்து வண்ணங்களையும் நாம் பார்க்க வேண்டாம் என்று எண்ணுகையில் இந்த வியூ உதவும். (குறிப்பு: இவற்றில் சில வியூக்கள் பவர்பாய்ண்ட் 98ல் கிடைக்காது)
வண்ணத்தை நீக்க: உங்களிடம் அழகான வண்ணப் படம் ஒன்று உள்ளது.



ஆனால் அதனை பிளாக் அண்ட் ஒயிட்டில் பிரசண்டேஷன் ஸ்லைடில் ஒட்டினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறீர்கள். இதனை மாற்றுவதற்கு பவர்பாய்ண்ட் தொகுப்பு உதவுகிறது. மாற்ற விரும்பும் படத்தை முதலில் ஸ்லைடில் பதியவும். பின் அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். உடன் Picture toolbar கிடைக்கும். இதில் “Image Control” பட்டன் மீது கிளிக் செய்திடவும். பிக்சர் டூல் பாரில் இடதுபுறம் இருந்து இரண்டாவதாக இந்த பட்டனைக் காணலாம். இப்போது கிடைக்கும் மெனுவில் “Grayscale” என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த இமேஜ் கண்ட்ரோல் மெனுவில் மேலும் பல வண்ணக் கலவைகளுக்கான ஆப்ஷன்ஸ் கிடைக்கும். உங்கள் வசதிக்கேற்றபடி தேர்ந்தெடுத்து இயக்கலாம்.


புல்லட் இல்லாத லிஸ்ட்


பவர்பாய்ண்ட்டில் ஸ்லைட் தயாரிக்கையில் சில வரிகளைப் பட்டியலிடுகையில் புல்லட்கள் தானாக உருவாகும். இவை இல்லாமல் இருப்பதை சிலர் விரும்புவார்கள். அவர்கள் இந்த புல்லட் ஏற்பட்ட பின் பேக் ஸ்பேஸ் அழுத்தி புல்லட்களை நீக்குவார்கள். இருப்பினும் ஒவ்வொரு வரியை அமைக்கையிலும் புல்லட்கள் தாமாக உருவாகும். புல்லட் இல்லாமல் அமைக்க வேண்டும் எனில் பட்டியலில் அடுத்த வரிக்குச் செல்கையில் SHIFT + ENTER தட்ட வேண்டும். அப்படித் தட்டினால் கர்சர் புல்லட் இல்லாமல் அடுத்த வரிக்குச் செல்லும். பின் அடுத்த வரியை டைப் செய்திடலாம். டைப் செய்து முடித்தபின் மீண்டும் SHIFT + ENTER தட்டி அடுத்த வரிக்குச் செல்லலாம். ஆனால் மீண்டும் புல்லட் தேவை என்றால் அடுத்த வரிக்குச் செல்லும் முன் ஜஸ்ட் என்டர் தட்டிச் செல்லுங்கள். புல்லட் மீண்டும் வரத் தொடங்கும்.


பிரிண்ட் பிரிவியூ பெற ஷார்ட் கட் கீ


ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை பிரிண்ட் எடுக்குமுன் அது அச்சில் வரும் தோற்றத்தை பிரிண்ட் பிரிவியூ காட்சியில் பார்த்து விட்டு அச்செடுப்பது நல்லது. மற்றவர்கள் எப்படியோ நான் அப்படித்தான். இதனால் சரியான அச்சுப் படிவம் கிடைக்கும். சரியாக இல்லாமல் அச்செடுத்து தாளையும் மையையும் வீணாக்குவது குறையும். சரி. பிரிண்ட் பிரிவியூ காட்சியைப் பெற என்ன செய்கிறோம்? நீங்கள் எப்படியோ? நான் பைல் மெனு போய் அங்கு உள்ள ஸ்டாண்டர்ட் டூல் பாரில் உள்ள பிரிண்ட் பிரிவியூ பிரிவைக் கிளிக் செய்திடுவேன். அல்லது அதற்கான ஐகானைக் கிளிக் செய்திடுவேன்.

இன்று திடீரென சில கீகளை அழுத்துகையில் ஒரு ஷார்ட் கட்பிரிண்ட் பிரிவியூ கிடைத்தது. இது மவுஸ் இல்லாமல் அல்லது இருந்தும் பயன்படுத்த விருப்பம் இல்லாமல் உள்ளவர்களுக்குப் பயனாய் இருக்கும். அடுத்த முறை நீங்கள் பிரிண்ட் பிரிவியூ பார்க்க முயற்சிக்கையில் கண்ட்ரோல் + எப் 2 கீகளை (Ctrl + F2) அழுத்தவும். பிரிண்ட் பிரிவியூ கிடைக்கும். மீண்டும் பழைய முழுத் திரை கிடைக்க வேண்டும் என்றால் மீண்டும் அதே கீகளை அழுத்தவும். முழுத்திரை கிடைக்கும்.

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் சாப்வேர் நாம் பணியாற்ற பல்வேறு தோற்றங்களில் ஸ்லைடுகளைத் தருகிறது.

No comments: