Wednesday, May 28, 2008

உள்ளங்கையில் பயனுள்ள இணையதளம்


இதில் முக்கிய தளங்களைத் தொடர்பு கொள்ள லிங்க்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒருமுறை கிளிக் செய்தால் போதும். முகவரியில் எந்த எழுத்துக்களையும் டைப் செய்திடத் தேவையில்லை.


பல இணைய தளங்கள் நாம் அன்றாடம் செல்லும் இணைய தளங்களாக அமைகின்றன. இவற்றில் இமெயில், புதிய தகவல்கள், உறவுகளுக்கு கடிதங்கள், கேள்விகளுக்குப் பதில்கள் எனப் பலவகையான செயல்களை மேற்கொள்கிறோம்.




இந்த தளங்கள் அன்றாடம் செல்ல வேண்டிய தளங்களாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இவற்றை அடைய இந்த தளங்களின் முகவரிகளை டைப் செய்திட வேண்டும். அல்லது அதன் தொடக்க எழுத்துக்களையாவது அமைக்க வேண்டும். இதற்குப் பதிலாக இது போன்ற அடிக்கடி அனைவரும் பயன்படும் தளங்களுக்கு பைல்களின் ஐகான்களைக் கிளிக் செய்வது போல லிங்க்குகளை ஒரே தளத்தில் அமைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதனைத்தான் http://www.MyEverydayPage.com என்ற தளம் செய்கிறது.



இதில் முக்கிய தளங்களைத் தொடர்பு கொள்ள லிங்க்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒருமுறை கிளிக் செய்தால் போதும். முகவரியில் எந்த எழுத்துக்களையும் டைப் செய்திடத் தேவையில்லை. இந்த தளத்தை உங்கள் ஹோ ம் பேஜாக வைத்துக் கொண்டால் இணையத்தைத் திறந்தவுடன் உங்களுடைய அனைத்து தளங்களும் உங்கள் கண் முன்னால் டெஸ்க் டாப்பில் நீங்கள் கிளிக் செய்வதற்காகக் காத்திருக்கும்.



அனைவரும் எப்படியும் செல்ல வேண்டிய தளங்களுக்கென (Most Visited Websites) ஒரு தனிப் பிரிவு அமைத்து அதில் : yahoo, google, orkut, hotmail, rediff, facebook, youtube போன்ற தளங்களுக்கான லிங்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் உங்களை உற்சாகப் படுத்தி சிந்திக்க வைத்திட சான்றோரின் பொன்மொழிகள் தரப்படுகின்றன. இவற்றுடன் இனிமையான மியூசிக் இசைக்கப்படுகிறது. பாடல் ஒலிக்கிறது. இந்த தளத்தில் உள்ள பிரிவுகளைப் படித்தால் உங்களுக்கு என்ன என்ன தளங்கள் இதில் அடுக்கப்பட்டுள்ளன என்று தெரியவரும்.


Top Emailing Websites / Search Engines /Photos & Wallpapers/Social Networking Websites /Google Tools /Finance /Downloads /Office Productivity /Health Conscious/Mind Power & Spirituality/Technical Paradise/Entertainment இவற்றில் ஒவ்வொரு பிரிவி லும் குறைந்தது 7 தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


நிச்சயம் நீங்கள் இதுவரை பார்க்காத தளங்களும் இந்த பட்டியலில் இருக்கும். இந்த தளங்களைப் பெறுவதற்குக் கிளிக் செய்திடும் முன் கர்சரை இதன் அருகே கொண்டு சென்றவுடனேயே அதன் தம்ப் நெயில் படம் பெரிதாகத் தெரிகிறது. எடுத்துக் காட்டாக யாஹூ இமெயில் தளம் சென்றவுடன் அத்தளத்தின் முகப்புப் பக்கம் தெரியும். தவறுதலாக யாஹூ வின் முதன்மைப் பக்கத்திற்குப் பதிலாக இதனைக் கிளிக் செய்வது இதனால் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை இந்த தளத்தை ரெப்ரெஷ் செய்தால் பொன்மொழிகள் மாறுகின்றன. பாட்டு தரப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் அருமையான பாட்டு ஒன்று டவுண்லோட் ஆகி இசைக்கப்படுகிறது. நீங்கள் எந்த தளத்தை யேனும் அனைவருக்கும் பயனுள்ள தளம் என்று எண்ணினால் அது குறித்து இவர்களுக்கு எழுதலாம். இந்த முயற்சி எல்லாருக்கும் நல்ல விஷயங்கள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப் பட்டது என்றும் அதனால் இத்தகைய தளம் இருப்பதை அனைவருக்கும் சொல்லுங் கள் என்று வேண்டுகோளும் இந்த தளத்தில் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பார்த்தால் இதனை நீங்கள் விரும்பி பார்ப்பீர்கள் என்பது உறுதி. ஏனென்றால் நம்முடைய பொன்னான நேரத்தை இது அதிகம் மிச்சப்படுத்துகிறது.

No comments: