Tuesday, May 6, 2008

வேர்ட் டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...!

வேர்டில் ஆட்டோமேடிக் சேவிங்


வேர்ட் தொகுப்பு நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களைத் தானாகவே சேவ் செய்திடும் வசதி கொண்டது. இதனை நாம் செட் செய்திட வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்தில் தானாகவே டாகுமெண்ட்களை சேவ் செய்திடும்படி அமைக்கலாம். தொகுப்பில் இந்த கால அவகாசம் 10 நிமிடங்களாக செட் செய்யப்பட்டு தரப்ப ட்டுள்ளது. இதனை நாம் அவசியம் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பத்து நிமிட காலத்தில் நாம் நிறைய செயல்பாட்டினை மேற் கொள்ளலாம். கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம், வைரஸ் தன் வேலையைக் காட்டி பைலை ஹேங் ஆகச் செய்யலாம். நம் மின்சார சப்ளை மற்றும் யு.பி.எஸ். காலை வாரலாம். எனவே பாதுகாப்பு நடவடிக்கையாக டாகுமென்ட் சேவ் செய்திடும் நேரத்தைக் குறைப்பதுடன் ஆட்டோ பேக் அப் பைல் காப்பி செய்திடும் வசதியையும் இயக்கி வைக்கலாம்.




முதலில் Tools மெனுவில் இருந்து Options கட்டளையைப் பெறவும். இதில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Saveபிரிவைப் பெறவும். அதில் “Always create backup copy”என்பதற்கு எதிரே டிக் அடித்து பேக்கப் காப்பி எடுத்து வைக்கும் இயக்கத்தை முடுக்கிவிடவும். ஒரிஜினல் டாகுமெண்ட்டின் பேக் அப் காப்பி ஒன்று wbk என்ற துணைப் பெயருடன் பைலாக பதியப்படும். ஒரிஜினல் டாகுமெண்ட்டுக்குப் பிரச்னை ஏற்பட்டு கிடைக்காத பட்சத்தில் இதனைத் துணைப் பெயர் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.


இறுதியாக சேவ் செய்த இடத்திலிருந்து டாகுமென்ட் கிடைக்கும். அடுத்து “Save AutoRecover info every”என்ற இடத்தில் கிளிக் செய்து கட்டத்தில் எத்தனை நிமிடங்கள் என்பதனையும் தேர்ந்தெடுத்து ஓகே தந்து வெளியேறவும். எத்தனை நிமிடங்கள் தந்திருக்கிறோமோ அத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை டாகுமெண்ட் தானாகவே சேவ் செய்யப்படும்.


பக்க எண்களை எப்படி நீக்குவது?


வேர்ட் டாகுமெண்ட்டில் பக்க எண்களை அமைக்க இன் ஸெர்ட் அழுத்தி கிடைக்கும் மெனுவில் பேஜ் நம்பர் விண்டோ பெற்று அதில் பொசிஷன் மற்றும் அலைன்மெண்ட் என்பதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைக்கிறோம். குறிப்பிட்ட பக்கத்தில் இருந்து புதியதாக பக்க எண்கள் வேண்டும் என்றால் பார்மட் அழுத்தி அதில் ஆப்ஷன்ஸ் ஏற்றபடி அமைத்து பக்க எண்களை அமைக்கிறோம். ஆனால் இவற்றை நீக்குவது எப்படி என பலர் கேட்டுள்ளனர். இதற்கான வழி ஹெடர் அன்ட் புட்டர் பகுதியில் உள்ளது.


இதற்கு View மெனு கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Header and Footerஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பக்க எண்களை பக்கங்களின் கீழாக அமைத்திருந்தால் Header and Footer டூல் பாரில் Switch Between Header and Footer என்பதில் கிளிக் செய்திடுங்கள். இப்போது பேஜ் நம்பரைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் இன்ஸெர்ட் மெனுவில் பேஜ் நம்பர்ஸ் பிரிவை செலக்ட் செய்து பக்க எண்களை அமைத்திருந்தால் இங்கு பக்க எண்களைச் சுற்றி இருக்கும் பிரேம் தெரியும்படி கர்சரை நிறுத்தவும். இதற்கு பக்க எண்ணில் கிளிக் செய்தால் போதும். அந்த பிரேமின் பார்டரில் பாய்ண்டரைக் கொண்டு செல்லவும். இப்போது அது நான்கு தலை கொண்ட அம்புக் குறியாக மாறும். இனி டெலீட் பட்டனை அழுத்தினால் அத்தனை பக்க எண்களும் காலி. எழுத்தைச் சுருக்க இரு வழிகள்:எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த ஒரு பைலிலும் காணப்படும் எழுத்தின் அளவைப் பெரிதாக்கவும் சிறியதாக மாற்றவும் இரண்டுவித கட்டளைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை Ctrl + Shift + > மற்றும் Ctrl + Shift + என ஒரு வகை.
Ctrl + [ மற்றும் Ctrl + ] என ஒரு வகை. ஏன் இரண்டு விதமான கட்டளைகள்? இதன் செயல்பாட்டில் வேறுபாடு உண்டா? எனக் கேட்டால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்து அளவுக்கான கீழ்விரியும் பட்டியலைப் பார்த்தால் இதற்கான விடை தெரியும். இந்த பட்டியலில் வரிசையாக எழுத்தின் அளவு இருக்காது.


8 லிருந்து 12 வரிசையாக வரும் எண் பின்னர் 14, 16 எனச் செல்லும். அப்படியானால் எழுத்தின் அளவு 13,15 வேண்டும் என்றால் என்ன செய்வது? இங்கே தான் மேலே கூறப்பட்ட இரு வகைக் கட்டளைகள் வேறுபடுகின்றன.


முதலில் தரப்பட்ட மூன்று கீகள் இணைப்பு (Ctrl + Shift + >) எழுத்து அளவு பட்டியலில் உள்ள எண் படி அளவைப் பெருக்கும், குறைக்கும்.


எடுத்துக் காட்டாக இந்த கட்டளையைப் பயன்படுத்துகையில் 12க்குப் பின் எழுத்தின் அளவு 14 ஆக உயரும். 14ல் இருந்தால் குறைக்கும்போது 12 ஆகக் குறைக்கப்படும். ஆனால் இரண்டாவது வகைக் கட்டளையான இரண்டு கீ (Ctrl + [) கட்டளையைப் பயன்படுத்துகையில் அவை எழுத்தின் அளவை ஒவ்வொன்றாகக் குறைக்கும், கூட்டும்.

No comments: