Tuesday, May 6, 2008

புதிய முறை தேடல் தளம்

முற்றிலும் புதுமையான முறையில் தேடல் தளம் ஒன்று தயாராகி வருகிறது. கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் ஆகிய தளங்களில் நீங்கள் சர்ச் இஞ்சினில் சொற்கøளைக் கொடுத்து தேடச் சொன்னால் உடனே எத்தனை விநாடிகளில் இந்த சொற்களுக்கான பட்டியல் தயாரானது என்ற தகவல்களுடன் பெரும் பட்டியல் பல பக்கங்களில் உங்களுக்குக் கிடைக்கும். இப்படியே பல ஆண்டுகளாக நாம் தேடிப் பார்த்து சலிக்காமல் இன்னும் அதே வழியில் தேடிக் கொண்டே இருக்கிறோம்.

புதுமையான முறையில் மிகவும் பயனுள்ளதாக தகவல்களைத் தரும் வகையில் புதிய தேடல் தளம் ஒன்று வடிவமக்கப்பட்டு வருகிறது. இது தற்போது சோதனை முறையில் இருந்தாலும் சிறப்பாகவே செயல்படுகிறது.



இந்த தளத்தின் முகவரி http://www.searchme.com/ என்பதாகும்.இதில் நுழைந்தவுடன் வழக்கம்போல சிறிய நீள கட்டம் கிடைக்கிறது. இதில் நாம் தேடும் சொற்களை டைப் செய்தவுடன் இந்த சொற்கள் சம்பந்தமான தளங்களின் முகப்பு பக்கங்கள் வரிசையாக அடுத்தடுத்து பைல் செய்தது போன்ற தோற்றத்தில் தெரிகின்றன. நீங்கள் ஏற்கனவே இந்த தளங்களுக்குச் சென்றிருந்தால் அந்த தள முகப்பினைச் சிறிய உருவத்தில் பார்த்து அதிலேயே கிளிக் செய்து தளத்தைப் பெறலாம். பட்டியலும் கீழாகக் கிடைக்கிறது. எந்த முறையில் வேண்டுமானாலும் தளங்களைப் பெறலாம். அடுத்தடுத்து பைலில் உள்ள பக்கங்கள் போல இந்த தள முகப்புகள் தரப்படுவதால் அவற்றைத் தாண்டிச் செல்ல மீடியா பிளேயரில் உள்ளது போல நீள செவ்வக பார் தரப்படுகிறது. இந்த பாரினை முன்னும் பின்னும் இழுத்து தளங்களைப் பார்வை யிடலாம். இந்த தளம் இன்னும் செம்மைப் படுத்தப்படுகிறது. இந்த தேடுதல் தளம் சென்று செயல்படும் விதத்தைக் கண்ட றிந்து உங்கள் குறைகளை தளம் அமைப் பவர்களுக்கு அனுப்பலாம்.

No comments: