அன்றாட கம்ப்யூட்டர் செயல் பாட்டில் டாஸ்க் பாரை ஒரு சிறந்த பயனுள்ள சாதனமாக இயக்கலாம். மறைந்து கிடக்கும் அதன் பல பயன்பாடுகளை இங்கு காணலாம். பெர்சனல் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் கீழாக புளு அல்லது கிரே கலரில் நீளமாகத் தெரிவது தான் டாஸ்க் பார். ஒவ்வொரு முறை புரோகிராம் ஒன்ற இயக்குகையிலும் மூடும் போதும் ஸ்டார்ட் மெனுவினையும் டாஸ்க் பாரையும் நாம் கையாள்கிறோம். ஆனால் பெரும்பாலோனோர் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து பின் புரோகிராம் லிஸ்ட் பெற்று தேவையுள்ள புரோகிராம்களை தேடி கிளிக் செய்தே வேலையை முடிக்கின்றனர்.
மூலம் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளையும் டாஸ்க் பார் மூலமே நாம் செயல்படுத்தலாம். நாம் அடிக்கடி திறந்து மூடும் போல்டர்களையும் பைல்களையும் டாஸ்க்பாரே நமக்குத் தரும்படி ஒரு சில எளிய வழிகளை மேற்கொண்டு அமைக்கலாம். அவ்வழிகளை இங்கு காணலாம்.
டாஸ்க்பாரை நமக்கேற்றபடி அமைக்கும் முன் அதனை மாற்றுவதற்கேற்றபடி அன்லாக் (Unlock) செய்திட வேண்டும். அப்போதுதான் அதில் கூடுதலாக புரோகிராம்களையும் ஐகான் களையும் வைத்திட முடியும். இதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸால் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் லாக் தி டாஸ்க் பார் (Lock the Task bar) என்னும் பிரிவைப் பார்க்க வேண்டும். அதில் டிக் அடையாளம் இருந்தால் அதனை எடுத்துவிட வேண்டும். இனி டாஸ்க் பாரை நம் இஷ்டப்படி வளைக்கலாம்.
நம் விருப்பங்களை நிறைவேற்ற டாஸ்க் பாரில் நமக்கு குயிக் லாஞ்ச (Quick Launch) என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது டாஸ்க் பாரில் ஸ்டார் பட்டன் அருகே வலது புறமாக அமைக்கப்படும். இதனைப் பார்க்க முடியாவிட்டால் மீண்டும் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Toolbars என்பதைத் தேர்ந்தெடுத்தால் அருகிலேயே இன்னொரு மெனு விரியும். இதில் Quick Launch என்று இருப்பதில் ஒரு டிக் அடையாளம் ஏற்படுத்தவும். நீங்கள் அடிக்கடி தொடர்ந்து பயன்படுத்தும் புரோகிராம்களை இந்த குயிக் லாஞ்ச் டூலில் வைக்கலாம். அந்த புரோகிராமின் ஷார்ட் கட் ஐகானை தேர்ந்தெடுத்து இழுத்து வந்து குயிக் லாஞ்ச் ஏரியாவில் விட்டுவிட்டால் போதும். உங்கள் பயன்பாட்டிற்கு Program ஐகான் அங்கு இருக்கும். அதனை ஒரு முறை கிளிக் செய்தால் புரோகிராம் திறக்கப்படும். இதில் எத்தனை புரோகிராம் ஐகான்களை வேண்டுமானாலும் அடுக்கலாம். அனைத்து ஐகான்களும் டாஸ்க்பாரில் தெரியாது. ஒரு சில புரோகிராம்களின் ஐகான்கள் அருகே இரட்டை அம்புக் குறி ஒன்று தெரியும். அதனை கிளிக் செய்தால் மேலாக ஒரு பட்டியல் விரியும். அதில் நீங்கள் குயிக் லாஞ்ச் டூல் பாரில் வைத்த அனைத்து புரோகிராம் ஐகான்களையும் காணலாம். உங்களுக்கு எது தேவையோ அதில் கிளிக் செய்து புரோகிராமினைப் பெறலாம். குயிக் லாஞ்ச் டூல் பார் தேவையில்லை என்றால் மீண்டும் மெனுவினைப் பெற்று குயிக் லாஞ்ச் டூல் பாரில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட வேண்டும்.
ஸ்டார்ட் மெனுவினைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க இன்னொரு வழியும் உள்ளது. இந்த டூல் பாரின் பெயர் New Toolbar. . நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று பின் போல்டர்களைத் திறக்கும் வேலையை இதன் மூலம் மேற்கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து போல்டர்களையும் இதில் வைத்து இயக்கும் வசதி உள்ளது. குயிக் லாஞ்ச் டூல் பாரைப் பெற்றது போல நியூ டூல் பாரையும் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Toolbars என்பதில் இருந்து பெறலாம். இந்த மெனுவில் கீழாக இருப்பது நியூ டூல் பார். இதில் கிளிக் செய்தால New Toolbar என்ற விண்டோ கிடைக்கும். இதில் நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் பெறும் அனைத்து போல்டர்களும் காட்டப்படும். எந்த போல்டரை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துகிறீர்களோ அந்த போல்டரைக் கிளிக் செய்து ஓகே கிளிக் செய்தால் போல்டர் உங்கள் பயன்பாட்டிற்கு டாஸ்க் பாரில் வந்து அமர்ந்து கொள்ளும். இனி நீங்கள் நேரடியாக இதனைக் கிளிக் செய்து பின் பைலை பயன் பாட்டிற்குக் கொண்டு வரலாம்.
இன்னொரு கூடுதல் வசதியும் உள்ளது. புதிய போல்டர் ஒன்றையும் நீங்கள் உருவாக்கலாம். இதை Make New Folder என்பதில் கிளிக் செய்து ஏற்படுத்தலாம். இவ்வாறு உருவாக்கிய பின் இந்த டூல் பார் டாஸ்க் பாரின் வலது புறமாக அமர்ந்து கொள்ளும். பைல்களையும் டாகுமெண்ட்களையும் இதனைக் கிளிக் செய்து பயன்படுத்தலாம். முதலில் நமக்கு போல்டர்கள் கிடைக்கும். பின் இந்த போல்டர்களைக் கிளிக் செய்து பைல்களைப் பெறலாம்.
டாஸ்க்பார் – மற்ற தகவல்கள்
டாஸ்க்பாரின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்திடலாம். டாஸ்க் பாரை அன்லாக் செய்து பின் மவுஸின் கர்சரை டாஸ்க்பாரின் மேல் விளிம்பில் கொண்டு சென்று பொறுமையாக சில நொடிகள் வைத்திருந்தால் அது இரு பக்க அம்புக் குறியாக மாறும். பின் மவுஸின் இடது பட்டனை அழுத்தியபடியே மேலே இழுத்தால் டாஸ்க்பாரின் உயரம் அதிகரிக்கும். இதனை அப்படியே விட்டு வைக்க வேண்டும் என்றால் மீண்டும் டாஸ்க் பாரை லாக் செய்திட வேண்டும். பழைய படி சிறியதாக வேண்டும் என்றால் மீண்டும் திறந்து கர்சரைப் பெற்றபின் கீழே இழுக்க வேண்டும். டாஸ்க் பாரின் உயரத்தை அதிகப்படுத்தினால் சில ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தேதி மட்டுமே தெரியும். உயரம் குறையும் போது நேரம் மட்டுமே தெரியும். எது எப்படி இருந்தாலும் இவற்றின் மீது கிளிக் செய்து நாம் தேவையானதைக் காட்டும் படி அமைத்திடலாம். தேதி மற்றும் கடிகார நேரத்தை மறைக்கலாம்; தெரிய வைக்கலாம். இதற்கு டாஸ்க் பாரில் காலியான இடத்தில் கிளிக் செய்து வரும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Show the Clock என்று இருப்பதில் டிக் அமைப்பதன் மூலமும் நீக்குவதன் மூலமும் கடிகாரத்தைக் காட்டலாம்; நீக்கலாம். இதே போல டாஸ்க் பாரையும் தானாக மறைந்து பின் மீண்டும் காட்டும்படி செய்திடலாம். Autohide the Taskbar என்பதில் கிளிக் செய்து செட் செய்தால் டாஸ்க் பார் கீழாக மறைந்துவிடும். கர்சரை டாஸ்க் பார் இருக்கும் இடத்தில் கொண்டு செல்லும்போது டாஸ்க் பார் கிடைக்கும். மற்ற நேரங்களில் இருக்காது. திரை உங்களுக்குப் பெரிய தாகக் கிடைக்கும்.
இதே Properties விண்டோவில் நீங்கள் பயன்படுத்தாத புரோகிராம்களின் ஐகான்களை மறைத்து வைக்கக் கூடிய வசதியும் உள்ளது. அதாவது எந்த புரோகிராமினை நீங்கள் இயக்கவில்லையோ அந்த ஐகான் மறைக்கப்படும். இந்த விண்டோவில் இன்னொரு வசதியும் உள்ளது. Customize என்ற பிரிவில் கிளிக் செய்தால் டாஸ்க் பாரில் உள்ள அனைத்து ஐகான்களின் புரோகிராம்களும் வரிசையாகப் பட்டியலிடப்படும். இவை டாஸ்க் பாரை அடைந்த வகையில் வகைப்படுத்தப்பட்டு காட்டப்படும்.
ஸ்டார்ட் மெனு
டாஸ்க் பாரை நம் விருப்பப்படி செட் செய்த பிறகு நாம் Start மெனுவினையும் சரி செய்திட வேண்டும். டாஸ்க் பாரை எப்படி நம் விருப்பப்படி புரோகிராம்களை இயக்க அமைத்தோமோ அதே போல ஸ்டார்ட் மெனுவினையும் புரோகிராம்களையும் பைல்களையும் இயக்க அமைக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஸ்டார்ட் பாருக்கு இரு வகை ஸ்டைல் தோற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை Standard மற்றும் Classic ஆகும். கிளாசிக் ஸ்டைல் வகையில் கடிண செய்யப்பட்ட புரோகிராம் லிஸ்ட் இருக்காது.
இந்த இரு வகை ஸ்டைலில் உங்களுக்குப் பிடித்த வகையினை செலக்ட் செய்திட ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவினைப் பார்க்கவும். இதில் இரண்டு டேப்கள் இருக்கும். ஒன்று டாஸ்க் பாருக்கு; மற்றொன்று ஸ்டார்ட் பட்டனுக்கு. ஸ்டாண்டர்ட் ஸ்டார்ட் மெனுவில் இடது பக்கத்தில் அண்மையில் பயன்படுத்திய புரோகிராம் ஷார்ட் கட்கள் காட்டப்படும். சிஸ்டம் செட் அப்பில் 6 புரோகிராம்கள் வரை இதில் காட்டப்படும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்பியில் 30 புரோகிராம் வரை கொள்ள இடம் உள்ளது. இதில் எத்தனை புரோகிராம் வரை ஸ்டோர் செய்திட வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்களோ அதனையும் செட் செய்திடலாம். இதற்கு டாஸ்க் பாரில் வெற்று இடத்தில் கிளிக் செய்து ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். விண்டோவின் மேலாக உள்ள ஸ்டார்ட் மெனுவினை செலக்ட் செய்திடுங்கள். பின் கிடைக்கும் ஸ்டார்ட் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். அதில் கஸ்டமைஸ் பட்டனை கிளிக் செய்தால் ஒரு விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் இரண்டாம் பிரிவில் எத்தனை புரோகிராம்கள் தேவை என நீங்கள் செட் செய்திடலாம். இதே போல் ஐகான்கள் பெரியதா, சிறியதா எது வேண்டும் என்பதனையும் உங்கள் இன்டர்நெட் பிரவுசர் மற்றும் இமெயில் கிளையண்ட் எது என்பதனையும் செட் செய்திடலாம். இவை அனைத்தும் மேல் கீழ் அம்புக்குறியினை இயக்கி செட் செய்திடும்படி அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்டார்ட் மெனுவில் புரோகிராம் ஒன்றை PinUp செய்திட வேண்டும் என்றால் ஸ்டார்ட் மெனுவில் உள்ள அந்த புரோகிராம் ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் பின் அப் இன் ஸ்டார்ட் மெனு (PinUp in start menu) என்று இருப்பதில் கிளிக் செய்தால் அது தானாகவே ஸ்டார்ட் மெனு மீது ஒட்டிக் கொள்ளும். இதனை மீண்டும் நீக்க வேண்டும் என எண்ணினால் அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Remove From List என்பதில் கிளிக் செய்திட லிஸ்ட்டில் இருந்து புரோகிராம் நீக்கப்படும்.
கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் உள்ள Advanced டேப் பைக் கிளிக் செய்தால் இன்னும் பல வசதிகளைத் தரும் ஆப்ஷன்ஸ் இருப்பதைக் காணலாம். ஸ்டார்ட் மெனுவினைப் பயன்படுத் துகையில் குறிப்பிட்ட மெனு சார்ந்த சப் மெனுக்கள் அனைத்தும் திறப்பதற்கான வழியை செட் செய்திடவும் புதியதாக இன்ஸ்டால் செய்திட்ட புரோகிராம்களை உடனே தெரிந்து கொள்ள செட் செய்திடவும் வழிகள் தரப்பட்டிருப்பதைக் காணலாம்.
பைலையும் புரோகிராம் களையும் கம்ப்யூட்டரில் தேடுகையில் சில நேரங்களில் விரக்தியின் எல்லைக்கே சென்று விடுவோம். டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனு ஆகியவற்றை மேலேகுறிப்பிட்ட படி செட் செய்வதன் மூலம் நாம் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையானதாகவும் இனிமை யானதாகவும் மாற்றலாம். ஒரு சில நிமிடங்கள் இவற்றை செட் செய்வதில் செலவழித்தால் பல மணி நேர வீண் வேலையை மிச்சம் செய்திடலாம்.
No comments:
Post a Comment