Tuesday, May 6, 2008

இன்டர்நெட் ஹிஸ்டரி




இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கு நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 பயன்படுத்தும் புதியவரா நீங்கள்? அல்லது வெகு நாட்க ளாகவே பயன்படுத்தி வருகிறீர்களா? எப்படி இருந்தாலும் தலைப்பைப் படித்த பின்னர் இன்டர்நெட் ஹிஸ்டரி என்றால் என்ன என்று அறிய சற்று ஆர்வமாக இருப்பீர்கள் அல்லவா? இந்த குறிப்பினைப் படித்துவிடுங்கள்.
இன்டர்நெட்டில் எந்த தளங்களுக்கெல்லாம் நீங்கள் அல்லது உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒருவர் சென்று பிரவுஸ் செய்துள்ளார் என்று காட்டும் இடமே இன்டர்நெட் ஹிஸ்டரி. நீங்கள் சென்ற தளம் அல்லது குடும்பத்தில் ஒருவர் சென்ற தளம் குறித்து அறிய நீங்கள் முயற்சிக்கையில் இது உதவும். அல்லது ஏற்கனவே நீங்கள் சென்ற பயனுள்ள தளம் ஒன்றின் முகவரி உங்களுக்கு மறந்து போயிருக்கலாம்.

அதனைப் பெறவும் இந்த ஹிஸ்டரி உதவும். ஒரு நாளில் சராசரியாக எத்தனை வெப்சைட்டுகளுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்கள் என்று அறியவும் நீங்கள் முயற்சிக்கும் போதும் இது உதவும். உங்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் உங்கள் பிரவுசர் ஹிஸ்டரியினை நீங்கள் அவ்வப்போது சென்று பார்ப்பது நல்லது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 தொகுப்பில் ஹிஸ்டரி பட்டன் நீக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதனைக் காண வழி தரப்பட்டுள்ளது. இடது மூலையில் ஒரு சிறிய ஸ்டார் ஐகானை நீங்கள் காணலாம். அதில் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ஹிஸ்டரி என்று இருப்பதில் உள்ள சிறிய அம்புக்குறி மீது கிளிக் செய்தால் கீழாக ஒரு மெனு கிடைக்கும். அந்த மெனுவில் உள்ள பிரிவுகளில் பை டேட் என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள்.



உடனே உங்கள் இன்டர்நெட் ஹிஸ்டரி கிடைக்கும். வரிசையாக உங்கள் தேடுதலுக்கேற்ற வகையில் நீங்கள் சென்று பிரவுஸ் செய்த தளங்களின் பட்டியல் கிடைக்கும். இந்த தளங்களில் காட்டப்படும் வெப்சைட் முகவரிகளில் மீது கிளிக் செய்தும் நீங்கள் அந்த தளங்களுக்குச் செல்லலாம். தேதி வாரியாக, தளங்கள் வரிசையாக, இன்று பார்த்த தளங்கள், அடிக்கடி சென்று பார்த்த தளங்கள் என வகை வகையாக இவற்றைப் பார்க்கலாம். இந்த பட்டியல்களில் இருந்து தளங்களின் முகவரிகளை நீக்கவும் செய்திடலாம்.




No comments: