Wednesday, May 28, 2008

விண்ஸிப் கம்ப்யூட்டரின் சுருக்குப்பை

பைல்களை எளிதாக அனுப்புவதற்கு ஏற்ற வகையில் சுருக்கியும் பின் அதனைப் பயன்படுத்தும் வகையில் விரித்தும் தரும் ஒரு சாதனமே விண்ஸிப் என்னும் சாப்ட்வேர்.


கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பல நிலைகளில் நமக்குத் துணை புரிவது விண்ஸிப் என்னும் பைலைச் சுருக்கித் தரும் சாப்ட்வேர் சாதனம். பைல்களை அதன் நிலையில், பெரிய அளவில், காப்பி செய்வது எடுத்துச் செல்வதும் இமெயில்கள் வழியே அனுப்புவதும் சிக்கலான காரியம். ஏனென்றால் பைல்களின் அளவு பெரிய அளவில் இருக்கும்.



இந்த பைல்களை எளிதாக அனுப்புவதற்கேற்ற வகையில் சுருக்கியும் பின் அதனைப் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் விரித்தும் தரும் ஒரு சாதனமே விண்ஸிப் என்னும் சாப்ட்வேர் புரோகிராம். முதலில் இந்த புரோகிராமினை விண்ஸிப் கம்ப்யூட்டிங் என்ற நிறுவனம் தயாரித்து வழங்கியது. இது முதலில் நிகோ மேக் கம்ப்யூட்டிங் என அழைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு விண்ஸிப் கம்ப்யூட்டிங் நிறுவனத்தை கோரல் டிரா மற்றும் வேர்ட் பெர்பெக்ட் சாப்ட்வேர் தொகுப்புகளுக்குப் பெயர் பெற்ற கோரல் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனம் வாங்கியது. விண்ஸிப் பலவகை பைல் சுருக்க வடிவங்களை சப்போர்ட் செய்வதனால் பெரும் பாலானோரால் பயன்படுத் தப்படுகிறது.


பிகே ஸிப் என்னும் ஸிப் பைல் தொகுப் பினை எம்.எஸ்.டாஸ் (விண்டோஸுக்கு முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டம்) தொகுப்பில் இயங்கும் வண்ணம் பில் காட்ஸ் என்பவரின் நிறுவனம் பி.கே. வேர் கண்டுபிடித்தது. பின் நாளில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கம்ப்யூட்டர் உலகை ஆளப் போவதனை அறியாததாலும், இந்த பைல் வகை பார்மட்டிற்கு காப்புரிமை பெறாததாலும் அந்த நேரத்தில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த் விண் ஸிப் கம்ப்யூட்டிங் நிறுவனம் அதனை அப்படியே ஸ்வாகா செய்து புதிய முறையில் விண்ஸிப் என்ற பெயரில் விண்டோஸ் தொகுப்புக்கான பைல் சுருக்க முறையாகக் கம்ப்யூட்டர் உலகிற்குக் கொண்டு வந்தது.


தற்போது விண்ஸிப் இலவச தொகுப்பாகவும் கூடுதல் வசதிகளுடன் விலை கொடுத்து வாங்கும் தொகுப் பாகவும் கிடைக்கிறது. அண்மையில் வந்துள்ள விண்ஸிப் 11.2 கட்டணம் கட்டினால் மட்டுமே கிடைக்கும். ஆனால் இலவச டவுண்லோட் தொகுப்பு பல தளங்களில் டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது. புதிய தொகுப்புகள் உருவாகும் போது சுருக்கிய பைல்களின் அளவும் குறைந்து வருகிறது. அதற்கேற்ற தொழில் நுட்ப வளர்ச்சியும் பார்மட் வகைகளும் மாறி வந்துள்ளன.எது எப்படி இருந்தாலும் பைல்களைச் சுருக்கி விரிக்க விண்ஸிப் ஒரு சிறந்த சாதனம் ஆகும்.இன்றளவிலும் நம் பயன்பாட்டிற்கு இலவசமாக கிடைக்கும் ஷேர் வேர் ஆகும். இதனை எப்படி பயன்படுத்துவது? இதன் பயன் என்ன என்று பார்ப்போம்.


ஸிப் பைல் என்று சொல்லப்படுகையில் நாம் ஒரே ஒரு பைலை குறிக்கிறோம். இதனை “archives” என்றும் அழைக்கிறோம். இதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்கள் சுருக்கப்பட்டு இறுக்கப்பட்டு அடுக்கப்படுகின்றன. தொடர்புள்ள பைல்களை இது போல இணைத்து சுருக்கி எடுத்துச் செல்வது பாதுகாப்பாகவும் கம்ப்யூட்டர்கள் வழியே அனுப்புவதும் எளிதாகவும் உள்ளது. இதனால் நேரமும் டிஸ்க் இடமும் மிச்சமாகிறது. இந்த வகை ஸிப் பார்மட் தான் விண்டோஸ் சிஸ்டத்தில் பைல்களைச் சுருக்குவதில் ஸ்டாண்டர்ட் பார்மட்டாக உருவாகி இன்று உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


ஸிப் பைல்கள் பயன்பாடு என்று பார்க்கையில் கீழ்க்காணும் மூன்று தளங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. அவை



1) இன்டர்நெட்டில் பைல்களை அனைவருக்கும் வழங்க: ஒரே ஒரு டவுண்லோட் செய்தால் போதும். அனைத்து சார்புள்ள பைல்களும் ஒரு ஸிப் பைல் மூலமாக வழங்கப்படுகின்றன.


2) தொடர்புள்ள பல பைல்களை நாம் விரும்பும் ஒருவருக்கு அனுப்ப எளிதான வழி ஸிப் பைல் தான். குறிப்பாக இன்டர்நெட் வழி அனுப்பும் போதும் அதனை டவுண்லோட் செய்திடும்போதும் நேரமும் உழைப்பும் மிச்சமாகிறது.


3) டிஸ்க் ஸ்பேஸ்: பைல் களைச் சுருக்கி வைப்பதனால் டிஸ்க் ஸ்பேஸ் மிச்சமாகிறது. ஒன்று அல்லது பல பைல்களைச் சுருக்க (ஸிப் செய்திட) ஸிப் பைலாக மாற்றிட கம்ப்ரஷன் என்னும் பைல்களை இறுக்கிச் சுருக்கி மாற்றும் சாதனம் தேவைப் படுகிறது. அவ்வகையில் சிறப்பான புரோகிராமாக இருப்பது விண்ஸிப். விண்டோஸ் சூழ்நிலையில் மட்டுமே இது செயல்படும். ஸிப் பைலை உருவாக்க, விரிக்க, உருவான ஸிப் பைலில் மேலும் சில பைல்களைச் சுருக்குவதற்காகச் சேர்க்க, நீக்க, சோதனை மேற்கொள்ள விண்ஸிப் உதவுகிறது. அனைத்திலும் மேலாக கம்ப்யூட்டரை முதன் முதலில் பயன்படுத்துபவர்களுக்கு பைல் சுருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறந்த எளிய சாதனமாக விண்ஸிப் உள்ளது.


விண்ஸிப் மூலம் பைல்களைச் சுருக்குகையில் பைல்கள் மாற்றப்படுவதில்லை; அழிக்கப் படுவதில்லை. அவை இன்னொரு வடிவில் பதியப்படுகின்றன. இதற்கு ஒரு எடுத்துக் காட்டைக் கூறலாம். ஒரு பெரிய கடிதம் ஒன்று இருக்கிறது. அதனை அனுப்ப வேண்டும். என்ன செய்கிறோம்? கடிதம் எழுதியபடி பெரிய பேப்பராக அதனை அனுப்ப முடியாது. எனவே அதனை மடித்து ஒரு சிறிய கவரில் போட்டு அனுப்புகிறோம். எதிர் முனையில் அது யாருக்குச் செல்ல வேண்டுமோ அவர் அதனைப் பெற்று கவரைத் திறந்து கடிதத்தைப் பிரித்து படிக்கிறார். எனவே மீண்டும் அந்தக் கடிதம் தன் பழைய வடிவைப் பெற்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அனுப்புவதற்கு அது வேறு ஒரு உருவில் சென்றது.



அதே போல் தான் விண்ஸிப் இயங்கும் விதமும். ஒரு பெரிய பைலை எடுக்கிறீர்கள். அல்லது ஒரு குரூப் பைலை மொத்தமாகத் தேர்ந்தெடுக்கிறீர்கள். அவை அனைத்தையும் சுருக்கி ஒரு பைலாக அமைக்கிறீர்கள். இதனை எங்கு எடுத்துச்செல்ல வேண்டுமோ அங்கு எடுத்துச் செல்கிறீர்கள்; அல்லது கம்ப்யூட்டர் வழியே அனுப்புகிறீர்கள். அது சேரும் இடத்தில் மீண்டும் அந்த சுருக்கப்பட்ட பைல் விரிக்கப்பட்டு ஒரிஜினல் பைல்களாக இடம் பெறுகின்றன.


உங்களுக்கு விண்ஸிப் பயன்பாட்டிற்கு வேண்டும் என்றால் விண்ஸிப் பைலின் சோதனை பதிப்பு ஒன்றை இணையத்தில் www.winzip. com அல்லது இதே பைல் கிடைக்கக் கூடிய இன்னொரு தளத்தில் இருந்து இறக்கிக் கொள்ளலாம். டவுண் லோட் செய்திட்ட பைல் மீது இருமுறை கிளிக் செய்தால் விண்ஸிப் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படும். இன்ஸ்டால் செய்யப் படுகையில் இன்ஸ்ட லேஷன் விண்டோ கேட்கும் கேள்வி களுக்கு உங்கள் ஆப்ஷன் களைத் தெரிவித்து இன்ஸ் டால் செய்திடவும். இன்ஸ் டால் செய்திடுகையில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்துவகை பைல் பார் மட்டினையும் விண்ஸிப் அளந்து வைத்துக் கொள்ளும்.


விண்ஸிப் இன்ஸ்டால் செய்தவுடன் டெஸ்க்டாப்பில் அதற்கான ஐகான் ஒன்று இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். விண்ஸிப் தொடங்க இதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். அல்லது ஸ்டார்ட் மெனு சென்று Start menu >> All Programs > WinZip > WinZip என வரிசையாகச் சென்று கிளிக் செய்யவும். இப்போது விண்ஸிப் மூன்று சாய்ஸ் கொடுக்கும். அதில் Use Evaluation Version என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது விண்ஸிப் விஸார்ட் ஒன்றினைக் காணலாம். இதன் மூலம் தான் விண்ஸிப்பின் பணிகளை மேற்கொள்ளலாம். அடுத்து நெக்ஸ்ட் கிளிக் செய்திட ஒரு ஸிப் பைல் ஒன்று உருவாக வேண்டும்.


இந்த பைலுக்கு புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பெயர் ஒன்றைக் கொடுக்கவும். நீங்கள் சுருக்க இருக்கும் பைல் அல்லது பைல்கள் இந்த பெயரில் தான் வைக்கப்படும். எனவே எந்த பைல்களை சுருக்கப்போகிறீர்களோ அந்த பைல் சார்ந்து பெயர் கொடுத்தால் பின் நாளில் எந்த விண்ஸிப் பைல் நீங்கள் தேடும் பைலைக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். இனி சுருக்குவதற்கு வேண்டிய பைல்களை இணைக்க வேண்டும். இதற்கு ஆட் (Add) என்னும் பட்டனை அழுத்த வேண்டும். இனி எந்த எந்த பைல்களை சுருக்க வேண்டுமோ அவற்றை டிராப் அண்ட் டிராக் முறையில் கொண்டு வரலாம். அல்லது பிரவுஸ் செய்து அவற்றைக் கொண்டு வரலாம்.



சுருக்க வேண்டிய பைல்களைக் கொண்டு சென்ற பிறகு அவற்றைச் சுருக்க கட்டளை தர வேண்டும். இதற்கு ZipNow என்ற பட்டனில் என்டர் தட்ட வேண்டும். பைல்கள் சுருக்கப்பட்டு நீங்கள் கொடுத்த ஸிப் பைல் பெயரில் வைக்கப் படும். இப்போது ஊடிணடிண்ட கிளிக் செய்து விண்ஸிப் விட்டு வெளியே வரலாம். இப்போது எந்த போல்டரைத் தேர்ந்தெடுத்து நீங்கள் ஸிப் பைல் உருவாக்கினீர்களோ அந்த போல்டரில் நீங்கள் கொடுத்த பெயரில் ஸிப் பைல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கும்.


சுருக்கப்பட்ட பைலில் உள்ள பைல்களைப் பெற மீண்டும் விண்ஸிப் பயன் படுத்த வேண்டும். சுருக்கப்பட்ட பைலின் மீது ரைட் கிளிக் செய்து Open With WinZip எனக் கொடுக்கலாம். அல்லது ஒரு போல்டர் மாதிரி அதனை எண்ணிக் கொண்டு இருமுறை அதன் மீது கிளிக் செய்திடலாம். மீண்டும் விண்ஸிப் விண்டோ கிடைக்கும். மீண்டும் Use Evaluation Version என்பதில் கிளிக் செய்தால் வழக்கமான விஸார்ட் விண்டோ கிடைக்கும். இதில் Next அடுத்து UnZip என்பதில் கிளிக் செய்திட வேண்டும். மீண்டும் கிளிக் செய் விரிக்கும் பைலில் இருந்து கிடைக்கும் பைல்களை ஸ்டோர் செய்திட போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இனி Unzip Now என்பதில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த போல்டரில் விரிக்கப்பட்ட பைல்கள் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். மீண்டும் விண்ஸிப் பில் Finish என்பதில் கிளிக் செய்து முடிக்கலாம்.


பைல்களை ஸிப் செய்தவுடன் அந்த ஸிப் பைலை உடனே இமெயில் மூலம் அனுப்ப விண்ஸிப் தன் தொகுப்பில் வழி கொண்டுள்ளது. ஒரு பைலை ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Zip and EMail என்பது ஒரு வசதியாகத் தரப்பட்டுள்ளது.


இதனைக் கிளிக் செய்தால் பைல் அல்லது பைல்கள் ஸிப் செய்யப்பட்டு பின் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள இமெயில் கிளையன்ட் புரோகிராம் திறக்கப்பட்டு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருடைய இமெயில் முகவரிக்காகக் காத்திருக்கும். பைல்களைச் சுருக்க ஸிப் பார்மட் தான் பெரும்பாலோனாரால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் வேறு சில வகை பார்மட்களும் உள்ளன.


விண்ஸிப் இந்த பார்மட்டுகளையும் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவை TAR, gzip, CAB, UUencode, XXencode, BinHex, MIME, ARJ, LZH, ARC, ARJ, ARC, மற்றும் LZH ஆகும். இதில் எந்த வகை பைலை நீங்கள் இன்டர்நெட்டிலிருந்து இறக்கி இருந்தாலும் விண்ஸிப் உங்களுக்கு அதனை விரித்துக் கொடுக்கும்.

No comments: