Monday, May 12, 2008

டிப்ஸ்



1. ஏ1. வேர்டில் டேபிள் முழுவதும் வசமாக்க


எம்.எஸ். வேர்டில் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கையில் டேபிள் ஒன்றையும் இணைத்து அமைக்கிறீர்கள். சரி. இந்த டேபிள் முழுவதையும் அப்படியே தேர்ந்தெடுக்க என்ன செய்திடலாம். எளிய வழி ஒன்று உண்டு. அந்த டேபிள் மீது கர்சரை வைத்துக் கொண்டு ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸால் இரு முறை கிளிக் செய்திடவும். இப்போது டேபிள் முழுவதும் உங்கள் வசம். அதனை எங்கு வேண்டு மென்றாலும் அப்படியே எடுத்துச் செல்லலாம்.

2. வேர்டில் தெசாரஸ்


வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் ஒரே சொல்லை அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கே அது திகட்டுகிறது. அதே பொருள் தரும் வேறு சொல் உள்ளதா? என்று தேடுகிறீர்கள். ஆங்கிலத்தில் இத்தகைய சொல் தரும் டிக்ஷனரியை தெசாரஸ் (Thesaurus என்று அழைக்கின்றனர். வேர்ட் தொகுப்பில் டிக்ஷனரியும் உண்டு; தெசாரஸும் உண்டு. தெசாரஸ் பெற நீங்கள் அழுத்த வேண்டிய ஷார்ட் கட் கீகள் ஷிப்ட் + எப்7 (Shift+F7) இதனை அழுத்தினால் வலது பக்கமாக ஒரு தெசாரஸ் கட்டம் கிடைக்கும். இதில் எந்த சொல்லுக்கு மாற்று சொல் வேண்டுமோ அதனை டைப் செய்தால் அந்த சொல்லுக்கு உரிய வேறு சொல்கள் பட்டியலிடப்படும். நீங்கள் சரியான சொல்லைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

3. டி.எப்.டி. (Thin Film Transistor)


கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு மிகக் குறைந்த தடிமனில் தட்டையான வண்ணத்திரை அமைக்கப் பயன்படுத்தும் ட்ரான்சிஸ்டரையும் தொழில் நுட்பத்தையும் குறிக்கிறது. இது நல்ல மேம்படுத்தப்பட்ட திரையைத் தருகிறது. இதனால் இதில் காட்டப்படும் படங்கள் மிகத் தெளிவான தன்மையைக் கொண்டவையாக இருக்கும். படங்களில் பல்லாயிரக்கணக்கில் லட்சக்கணக் கான வண்ணக் கலவை காட்டப்படும்.

4. ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio)


ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன.

5. சப்ஸ்கிரிப்ட் மற்றும் சூப்பர் ஸ்கிரிப்ட்


வேர்டில் சில வேளைகளில் பார்முலாக்கள் மற்றும் குறியீடுகள் அமைக்கையில் சப்ஸ்கிரிப்ட் மற்றும் சூப்பர் ஸ்கிரிப்ட், (Subscript, Superscript) அதாவது சொல்லுக்கு மேலாகவும் கீழாகவும் சிறிய அளவில் எண் அல்லது எழுத்து அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு Font மெனு சென்று அங்கிருக்கும் கட்டங்களை டிக் செய்து அமைக்க வேண்டும்.
பின் அதனை நீக்க வேண்டும். இதற்குப் பதிலாக சுருக்கு வழி ஒன்று உள்ளது. சொல்லுக்கு அருகே அமைத்திட வேண்டிய எண் அல்லது எழுத்தை அமைத்திடுங்கள். பின் அதனைத் தேர்ந்தெடுத்து Ctrl + Shift + = ஆகியவற்றை ஒரு சேர அழுத்தினால் சூப்பர் ஸ்கிரிப்டும் Ctrl + = அழுத்தினால் சப் ஸ்கிரிப்டும் கிடைக்கும்.

6. ரெசல்யூசன்


மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதின் மூலம் சொல்கிறோம்.

7. டெக்ஸ்ட்டை நீள வாக்கில் மையப்படுத்த


வேர்டில் டெக்ஸ்ட் மற்றும் படங்களை மையப்படுத்த என்ன செய்கிறோம்? சென்டர் செய்திட வேண்டிய டெக்ஸ்ட் அல்லது படத்தை செலக்ட் செய்தபின் Formatting Toolbar உள்ள சென்டரிங் பட்டன் மீது கிளிக் செய்கிறோம். அல்லது Ctrl +E அழுத்துகிறோம்.டெக்ஸ்ட் அல்லது படம் எப்படி மாறுகிறது? அகலவாக்கில் மையப்படுத்தப்பட்டு திரையில் காட்சி அளிக்கிறது. இதனையே நீளவாக்கில் மையப்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்வது? File மெனு திறந்து Page Setup என்பதில் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் டேப்களில் Layout டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் Vertical Alignment என்பதில் உள்ள கிரே கலரில் உள்ள அம்புக்குறி மீது கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Centre என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இனி டெக்ஸ்ட் அல்லது படம் நெட்டு வாக்கில் மையப்படுத்தப்படும்.

8. 12,000 புதிய கோபுரங்கள்


பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கான 12,000 தொலைதொடர்பு கோபுரங்கள் அமைக்கும் பணி ஆறு தனியார் நிறுவனங்களிடம் விடப்பட்டது. இவை 23 தொலை தொடர்பு மண்டலங்களில் அமைக்கப்படும். இந்த டவர்கள் தயாரானவுடன் இவற்றை சி.டி.எம்.ஏ. வகை போன்களுக்கும் பி.எஸ்.என்.எல். பயன்படுத்தும். இதற்கான உரிமத்தை சென்ற மாதம் பி.எஸ்.என்.எல். பெற்றது. இந்த கோபுரங்கள் இல்லாததால் ஜி.எஸ்.எம். வகை போன் இணைப்புகளை வழங்குவதில் இரண்டாவது இடத்தில் இருந்த பி.எஸ்.என்.எல். மூன்றாவது இடத்திற்குச் சென்றது. முதல் இரு இடங்களை பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் எஸ்ஸார் ஆகியவை கொண்டுள்ளன.

9. ஸ்க்ராம்ப்ளிங்


கம்ப்யூட்டர் பைலில் உள்ள டேட்டாவினை அடுத்தவர் படித்துப் பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ் செய்து வைத்துக் கொள்வது. இதனால் அதனை உருவாக்கியவர் மற்றும் பெறுபவர் மட்டுமே சரி செய்து படிக்க முடியும். இதனைச் சரி செய் வதற்கான வழியை இருவரும் மறந்து விட்டால் பைல் தகவல் உருப் பெறாது.

10. பயாஸ்


அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கம்ப்யூட்டருக்கு மின்சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவயான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லை என்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.

No comments: