Monday, May 19, 2008

வேர்டில் டேபிளோடு சில நிமிடங்கள்

வேர்டில் உள்ள ஒரு டேபிளை அழிக்க முயற்சிக்கையில் அதில் உள்ள தகவல்கள் அழியும்; டேபிள் அப்படியே இருக்கும்; அல்லது டேபிள் பார்மட்டிங் அழியும்; தகவல்கள் அப்படியே இருக்கும்.

வேர்ட் டெக்ஸ்ட் டாகுமெண்ட்டில் சில தகவல்களைக் கோர்வை யாகவும் வகைப் படுத்தியும் தெரிவிக்க டேபிள்கள் என்னும் அட்டவணைகள் பயன்படுகின்றன. இந்த அட்டவணைகளை எப்படி எல்லாம் கையாளலாம் என்று பார்ப்போம். டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை உருவாக்க சில வழிகள் உள்ளன.




1. Table மெனுவில் Insert என்பதைத் தேர்ந்தெடுத்து பின் கிடைக்கும் துணை மெனுவில் Table என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். அதன்பின் கிடைக்கும் மெனுக் கட்டத்தில் அந்த டேபிளில் எத்தனை நெட்டு வரிசைகளும் (column) படுக்கை வரிசைகளும் (row) இருக்க வேண்டும் என்பதனைத் தெரியப்படுத்த வேண்டும். இதன் பின் ஓகே கிளிக் செய்திடவும்.


2. Standard டூல் பாரில் Insert Table பட்டனில் கிளிக் செய்து பின் முன்பு குறிப்பிட்டது போல எத்தனை வரிசைகள் என்பதனைக் கொடுத்தால் டேபிள் கிடைக்கும்.


3. Tables and Borders என்ற டூல் பாரில் Draw Table என்ற பட்டனில் கிளிக் செய்தால் கிடைக்கும் கை போன்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு டேபிளை வரையலாம்.


இன்னொரு வழியும் உள்ளது. வேர்ட் தானாக டேபிளை வரையும் வழி அது. + அடையாளத்தை ஏற்படுத்தி பின் எந்த அளவிற்கு நெட்டு வரிசையின் அகலம் இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு ஹைபன் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் பின் என்டர் அழுத்த வேர்ட் இந்த அடையாளங்களின் அடிப்படையில் டேபிள் ஒன்றை ஏற்படுத்தும். பின் வழக்கம்போல டேபிளின் வரிசைகளை சரிப்படுத்தலாம்.


டேபிளை முற்றிலுமாக அழிக்க: வேர்டில் உள்ள ஒரு டேபிளை அழிக்க முயற்சிக்கையில் அதில் உள்ள தகவல்கள் அழியும்; டேபிள் அப்படியே இருக்கும். அல்லது டேபிள் பார்மட்டிங் அழியும்; தகவல்கள் அப்படியே இருக்கும். இரண்டையும் அழித்திட என்ன செய்திட வேண்டும்? முதலில் டேபிளை செலக்ட் செய்திடுங்கள். இதற்கு Table மெனுவிலிருந்து Select Table கிளிக் செய்திடுங்கள். இந்த டேபிள் மெனுவில் Delete Rows என்பதில் கிளிக் செய்திடவும்.


டேபிளை மட்டும் வைத்துக் கொண்டு தகவல்களைக் காலி செய்திட டேபிளை செலக்ட் செய்து டெலீட் பட்டனை அழுத்தவும்.டேபிளை அழித்து அதன் தகவல்களை டேப்களில் அமைந்த டெக்ஸ்ட்டாக அமைத்துக் கொள்ள டேபிளை செலக்ட் செய்திடுங்கள். பின் டேபிள் மெனுவிலிருந்து Convert Table to Text என்பதில் கிளிக் செய்திடுங்கள். தேவைப்பட்டால் Tabs என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.


டெக்ஸ்ட் பாக்ஸில் டேபிளை வைத்திட:
ஒரு டேபிள் எப்போதும் வலது இடது மார்ஜின்களை அடைத்துக் கொண்டு அமையும். டெக்ஸ்ட் எப்போதும் அதனைச் சுற்றி அமையாது. எனவே அதனை ஒரு டெக்ஸ்ட் பாக்ஸில் அமைப்பது தேவையாகிறது. அதற்கு Insert மெனுவிலிருந்து Text Box தேர்ந்தெடுக்கவும். அந்த பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் இழுத்து டெக்ஸ்ட் பாக்ஸ் ஒன்றை அமைக்கவும்.



இப்போது கர்சர் டெக்ஸ்ட் பாக்ஸிற்குள் இருக்கும். இனி ஸ்டாண்டர்ட் டூல் பாரில் இன்ஸெர்ட் டேபிள் பட்டனில் கிளிக் செய்திடவும். கிரிட் வழியாகச் சென்று உங்கள் டேபிளில் எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை என அமைத்திடவும். மவுஸ் பட்டனை ரிலீஸ் செய்தபின் வேர்ட் நீங்கள் கொடுத்த அளவுகளுக்கேற்ப டேபிள் ஒன்றை அமைத்துக் கொள்ளும்.


டேபிளைத் தேர்ந்தெடுக்க: ஒருடேபிளைத் தேர்ந்தெடுக்க கர்சரை டேபிளின் உள்ளே வைத்து பின் Alt கீயை அழுத்திக் கொண்டு numeric keypad ல் 5 என்ற கீயை அழுத்தவும். இவ்வாறு அழுத்தும்போது Num Lock கீ அழுத்தப்பட்டு அணைக்கப்பட்டிருக்க வேண்டும். மவுஸால் டேபிளை செலக்ட் செய்திட விரும்பினால் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு டேபிளில் எங்காவது கர்சரை வைத்து இருமுறை கிளிக் செய்திடவும்.


டேபிளைப் பிரிக்க: ஒரு டேபிளை இரண்டாகப் பிரிக்க எந்த படுக்கை வரிசை புதியதாய் அமைய இருக்கும் டேபிளின் முதல் வரிசையாக இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த வரிசையில் முதல் காலத்தில் கர்சரை வைத்து பின் Table மெனுவில் Split Table என்பதில் கிளிக் செய்திடவும்.


டேபிள் செல்களைப் பிரிக்க : Tables and Borders என்ற டூல்பாரில் Draw Table பட்டனை டேபிள் செல்களைப் பிரிக்கப் பயன்படுத் தலாம். தேவை என்றால் என்ற Tables and Borders டூல்பாரினை திரையில் கொண்டு வரவும். இதில் Draw Table பட்டனைக் கிளிக் செய்திடவும். (ஒரு பென்சிலோடு இருக்கும் பட்டன்) எந்த செல் அல்லது செல்களைப் பிரிக்க வேண்டுமோ அந்த செல்களில் இந்த பென்சில் பட்டனை எடுத்துச் சென்று இழுக்கவும். வேர்ட் பார்டர் லைன் ஒன்றை உருவாக்கி செல்களைப் பிரித்து அமைக்கும்.


செல்களில் டேப் பயன்பாடு:


ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்குச் செல்ல கூச்ஞ கீயை அழுத்திச் செல்லலாம். டேப் கீ மட்டும் அழுத்தினால் கர்சர் இடது புறத்திலிருந்து வலது புறமாகச் செல்லும். ஷிப்ட் கீயுடன் டேப் கீயை அழுத்தினால் கர்சர் வலது புறத்திலிருந்து இடது புறமாகச் செல்லும்.


பார்டர் இல்லாத டேபிள்:


ஒவ்வொரு டேபிளிலும் கிரிட் லைன்கள் இருக்கும். இவை திரையில் காட்டப்படும். ஆனால் பிரிண்ட் ஆகாது. பழைய வேர்ட் தொகுப்பில் டேபிளை உருவாக்கு கையில் இந்த பார்டர்கள் தாமாக உருவாகும். இவை கிரிட் லைனை மறைக்கும் கெட்டியான கோடு களாக இருக்கும். இந்த கெட்டியான பார்டர் லைன்களை நீக்க வேண்டும் என விரும்பினால் செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். டேபிளை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.



Formatting டூல் பாரில் Borders பட்டனுக்குக் கொண்டு செல்லவும். அங்கு கிடைக்கும் பேலட்டில் No Border பட்டனை செலக்ட் செய்திடவும். இனி கெட்டியான பார்டர் கோடுகள் நீக்கப்பட்டு திரையில் மட்டுமே காட்டப்படும் கிரிட் லைன்கள் காட்டப்படும். இந்த கிரிட் லைன்களையும் மறைக்கலாம். கூச்ஞடூஞு மெனுவிலிருந்து Hide Gridlines என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டியது தான். மீண்டும் அவை வேண்டும் என்றால் Show Gridlines என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


விரும்பிய வகையில் கலரில் பார்டர் அமைக்க:வேர்ட் டேபிளில் விரும்பிய கலரிலும் வகையிலும் பார்டர்களை அமைக்கலாம். Tables and Borders மெனுவினைத் திரையில் பெறவும். இதற்கு View மெனுவிலிருந்து Toolbars என்பதனைத் தேர்ந் தெடுக்கவும். கிடைக்கும் துணை மெனுவில் Tables and Borders என்பதைத் தேர்ந்தெடுத்தால் இந்த மெனு திரைக்கு வரும்.



லைன் ஸ்டைல் என்ற பீல்டில் கிடைக்கும் ட்ராப் டவுண் லிஸ்ட்டில் உங்களுக்குப் பிடித்த பார்டர் Line Style ஐத் தேர்ந்தெடுக்கவும். பார்டருக்கான கலர் தேர்ந்தெடுக்க Border Color என்பதில் கிளிக் செய்திடவும். இனி Draw Table என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் பென்சில் போன்ற கர்சரின் துணை கொண்டு நீங்கள் விரும்பிய பார்டர் லைனை தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அமைக்கலாம். மேலே கூறிய வழிகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து டேபிளில் பார்டர்களை அமைக்கலாம்.


செல் பார்டர்களை அழித்து செல்களை இணைக்க:


செல்கள் இரண்டை இணைக்க இடையே உள்ள கோடினை அழிப்பதுவும் ஒரு வழியாகும். இதற்கு Tables and Borders மெனுவினைத் திரையில் பெறவும். இதில் Eraser என்று ஒரு பட்டன் இருக்கும். இதன் மீது மவுஸின் கர்சரைக் கிளிக் செய்து செலக்ட் செய்திடவும். ஒரு அழி ரப்பர் போன்ற படம் கிடைக்கும். இதனை எடுத்துக் கொண்டு இணைக்கப்பட வேண்டிய செல்களின் நடுவே உள்ள கோட்டில் வைத்து அழுத்தினால் கோடு உடனே மறைந்து இரண்டு செல்களும் ஒரு செல்லாகக் காட்சி அளிக்கும்.


குறிப்பிட்ட டேபிள் செல்களை தனியே காட்ட:


டேபிள் செல்களில் சிலவற்றில் நாம் தனித்துக் காட்ட விரும்பும் தகவல்களைத் தந்திருப்போம். இந்த செல்களுக்கு மட்டும் ஷேடிங் கொடுத்து தனியாகக் காட்டலாம். எந்த செல்லிலாவது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் ஷார்ட் கட் மெனுவில் Borders and Shading என்பதனைத் தேர்ந்தெடுக்க வும்.பின் கிடைக்கும் விண்டோவில் என்ற டேபில் கிளிக் செய்திடவும். அடுத்து Fill என்பதில் கிரே ஷேடிங் எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply To என்பதில் கிடைக்கும் மெனுவில் டேபிள் முழுவதுமாகவா அல்லது செல்களில் மட்டுமா என்று கேட்கப்படும். உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் அந்த செல் மட்டும் அல்லது டேபிள் முழுவதும் என தேர்ந்தெடுத்தபடி ஷேட் செய்யப்பட்டு காட்டப்படும்.


டேபிளின் நெட்டு வரிசை அகலத்தை மாற்ற:டேபிளில் நெட்டு வரிசையின் அகலத்தை அதிகப்படுத்தவும் குறைக்கவும் செய்யலாம். டேபிளில் ஏதாவது ஒரு செல்லில் கர்சரை வைத்தால் டேபிளின் செல் கோட்டிற்கு நேராக ரூலரில் சிறிய கிரிட் கட்டம் கொண்ட அடையாளம் இருக்கும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்றால் Move Table Column என்று காட்டப்படும். இதனை இழுத்து செல்லின் அகலத்தை குறைக்கவும் அதிகப்படுத்தவும் செய்திடலாம். இதற்குப் பதிலாக டேபிளில் உள்ள செல் பார்டர் லைனில் கர்சரை வைத்தால் அது இருபுற அம்புக்குறிகள் கொண்ட கர்சராக மாறும்.



இதனையும் இரு வழிகளில் இழுத்து அகலத்தை மாற்றலாம். இதே போல படுக்கை வரிசையின் அகலத்தையும் இடது புறம் உள்ள ரூலரில் உள்ள கோடுகளின் பாரில் கர்சரை வைத்து இழுத்து அதிகப்படுத்தலாம். இவ்வாறு இழுக்கையில் ஆல்ட் கீயை அழுத்தினால் ஒவ்வொரு செல்லுக்கும் இடையே உள்ள நீள அகலம் எவ்வளவு என்று காட்டப்படும். இதனைத் தெரிந்து கொண்டு எல்லாம் ஒரே மாதிரியாகவோ அல்லது தேவைப்படும் அளவிலோ வைக்கலாம்.


டேபிளின் நெட்டு வரிசையில் வரிசை எண்களை அமைக்க:ஒரு டேபிளில் உள்ள நெட்டு வரிசைகளில் வரிசையாக சீரியல் எண்களை 1,2,3 என்று அமைக்கலாம். இதற்கு எந்த நெட்டு வரிசையில் அமைக்க விரும்புகிறீர்களோ அந்த வரிசையின் முதல் செல்லைத் தேர்ந்தெடுக்கவும். அந்த செல்லுக்கு மேலாக பார்டர் அருகே கர்சரைக் கொண்டு செல்லவும். கர்சர் சிறிய கருப்பு அம்புக் குறியாக மாறுகையில் கிளிக் செய்திடவும். இப்போது அந்த செல் வரிசை முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். இப்போது Formatting டூல் பாரினைத் தேர்ந்தெடுத்து அதில் Numbering என்பதில் கிளிக் செய்திடவும். அனைத்து செல்களும் 1,2,3 என எண்களிடப் பட்டிருக்கும்.

வேர்ட் டேபிளில் விரும்பிய கலரிலும் வகையிலும் பார்டர்களை அமைக்கலாம். Tables and Borders மெனுவினைத் திரையில் பெறவும். ஒரு டேபிளில் உள்ள நெட்டு வரிசைகளில் வரிசையாக சீரியல் எண்களை 1,2,3 என்று அமைக்கலாம். இதற்கு எந்த நெட்டு வரிசையில் அமைக்க விரும்புகிறீர்களோ அந்த வரிசையின் முதல் செல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

No comments: