எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும்.
இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம்.
எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும். இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.
நெட்டுக்குத்தாக டெக்ஸ்ட்டை அமைக்க எதிலும் மாறுபட்டு நாம் நிற்க வேண்டும் எனப் பலர் விரும்புவார்கள். டெக்ஸ்ட்டைப் படுக்கை வரிசையில் அமைக்காமல் நெட்டுக் குத்தாக அமைத்தால் பிறரின் கவனத்தைத் திருப்ப வசதியாக இருக்கும் எனத் திட்டமிடும் நபர்களில் நீங்களும் ஒருவரா? எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இவ்வாறு டெக்ஸ்ட்டை எப்படி அமைக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.
1. ஏதேனும் ஒரு செல் அல்லது நீங்கள் விரும்பும் பல செல்களை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. அதன்பின் அவற்றின் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Format Cells” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Alignment” என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Degrees” என்பதை அடுத்து எத்தனை டிகிரி கோணத்தில் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதனைத் தீர்மானித்து அமைக்கவும். அல்லது அங்கு உள்ள கிராபிக் கட்டத்தில் கோட்டினை சாய்வாக அமைத்தால் அதே சாய்வான தோற்றத்தில் டெக்ஸ்ட் கிடைக்கும். இதனை செட் செய்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
பைசாவிற்கும் ரூபாய்க்கும் இடையே புள்ளி எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கரன்சியான ரூபாய் எவ்வளவு என்று குறிப்பிடுகையில் சரியாகக் கணக்கிடும் வகையில் பைசாவையும் சேர்த்துக் குறிப்பிடுவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் ரூபாய்க்கும் பைசாவிற்கு இடையே புள்ளி அமைப்பது சற்று சிரமமாக இருக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமே அமைக்கும்படி செட் செய்திடலாம். எப்படி என்று பார்ப்போமா!
1.“Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “Edit” என்னும் டேபில் கிளிக் செய்திடவும். இதில் “Fixed decimal” என்னும் பிரிவில் செக் செய்திடவும். இப்போது “Places” என்னும் இடத்தின் முன்னால் “2” என அமைத்திடவும். பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும். இனி நீங்கள் அமைத்திடும் எண்களின் இறுதி இரண்டு இலக்கங்களுக்கு முன்னால் புள்ளி தானே அமைக்கப்படும். இந்த செயல்பாடு தேவையில்லை என்றால் “Fixed decimal” என்னும் பிரிவின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
No comments:
Post a Comment