இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7க்குப் புதியவரா நீங்கள்? அல்லது உங்கள் அனைத்து இன்டர்நெட் பிரவுசிங் பணிகளுக்கு அத்தொகுப்பைப் பயன்படுத்துபவரா? எது எப்படி இருந்தாலும் நீங்கள் இந்த தொகுப்பின் கேஷ் (Cache) நினைவகம் குறித்த மாற்றத்தை அறிந்திருப்பீர்கள். பதிப்பு 6 ஐக் காட்டிலும் இதில் அதிக இடம் விடப்பட்டிருக்கும். மைக்ரோசாப்ட் எழுந்து வரும் இன்டர்நெட் கூடுதல் பயன்பாட்டினை மனதில் கொண்டு இந்த கூடுதல் இட ஒதுக்கீட்டினை அமைத்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ல் இந்த கேஷ் நினைவக அளவு ஹார்ட் டிஸ்க்கின் அளவில் 10% என அமைக்கப்பட்டிருந்தது. இந்த நாட்களிலோ ஹார்ட் டிஸ்க்கின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருதலால் 10% என்பது மிகவும் அதிகமாகிவிடும். எனவே பெரிய கொள்ளளவில் உங்கள் ஹார்ட் டிஸ்க் இருந்தால் இந்த கேஷ் நினைவகத்தின் அளவும் மிகவும் அதிகமாகவே தோன்றும். இந்த நினைவகத்தில் அதிகமான தகவல் நிறைக்கப்படும்போது கம்ப்யூட்டரின் செயல்பாடு மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்கும். எனவே நாமாகவே இந்த கேஷ் நினைவகத்தின் கொள்ளளவை நிர்ணயம் செய்தால் என்ன? என்று நீங்கள் நினைக்கலாம். எனவே தான் பதிப்பு 7ல் அந்த வசதி தரப்பட்டுள்ளது. இதனை செட் செய்திட Tools மெனு சென்று Internet Options தேர்ந்தெடுத்து General டேபினைக் கிளிக் செய்திடவும். பின்னர் Settings பட்டனைக் கிளிக் செய்திடவும். இது Browsing History என்ற இடத்தில் “Disk space to use.” என்ற தலைப்பில் உள்ள பிரிவில் நீங்கள் விரும்பும் கேஷ் நினைவகத்தின் அளவை செட் செய்திடலாம். நீங்கள் இதனை 1 ஜிபி எனக் கூட செட் செய்திடலாம். ஆனால் இதை 250 எம்பிக்குள் இருப்பதே நல்லது. மைக்ரோசாப்ட் இதனை 50 எம்பியாக செட் செய்திடச் சொல்லி பரிந்துரைக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எவ்வளவு அதிகமாக இந்த நினைவக அளவை செட் செய்கிறீர்களோ அந்த அளவிற்குக் கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கிறீர்கள் என்பது பொருள்.
No comments:
Post a Comment